பேச்சு:வ. உ. சிதம்பரம்பிள்ளை
நன்றி
தொகு//அவை சுவர் மேல் நடத்தல், மரம் ஏறுதல், கவண் மற்றும் கையினால் கல்லெறிதல், கண்ணினைப் பொத்திக் காட்டில் விடுதல், எண்ணினைச் சுவாசம் இழுக்காது இயம்பல், குதி வட்டாடுதல், கோலி தெறித்தல், குதிரை மீதூர்தல், கோலேறி நடத்தல், கால் மாறி ஓடுதல், சடுகுடு, கிளியந்தட்டு, பல்லி, நெடுகடுமோட்டம், நீர் விளையாட்டம், கம்பு சுற்றுதல், கத்தி வீசுதல், மூச்சை அடக்கித் தலை கீழ் நடத்தல், கசரத்து, பஸ்கி, குஸ்தி, தாயம், சோழி, சதுரங்கம், சொக்கட்டான், சீட்டாட்டம், வெடிகொடு சுடுதல், வில் கொடு தெறித்தல் போன்றன.//
இத்தனை சிறப்பான விளையாட்டுகளை பட்டியலிட்டமைக்கு நன்றி. இவற்றை பற்றிய தகவல்களை முடிந்தளவு சேகரித்தால் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு முறைகளை கண்டெடுக்க இயலும்.
சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:47, 3 ஏப்ரல் 2012 (UTC)
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுவாழ்க்கைச் சுருக்கம் என்றும் இளமைப்பருவம் என்றும் இருவேறு பகுதிகளாக உள்ளது. தெளிவாக இல்லை. --மாகிர் (பேச்சு) 14:04, 1 சனவரி 2013 (UTC)
ஆஷ் கொலை பகுதி நீக்கம்
தொகு| வாஞ்சிநாதன் பக்கத்தில் இருந்த வ. உ. சிதம்பரனாரை ஆஷ் கொலையோடு தொடர்பு படுத்தும் பகுதி சான்ற அற்றது என பேச்சு:வாஞ்சிநாதன் பக்கத்தில் விவாதித்து நீக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் அச்செய்தி வ. உ. சிதம்பரம்பிள்ளை என்னும் பக்கத்தில் இருந்தும் நீக்கப்படுகிறது. --அரிஅரவேலன் (பேச்சு) 10:49, 23 திசம்பர் 2014 (UTC)