பேச்சு:ஸ்கூல் மாஸ்டர் (1973 திரைப்படம்)
பிழைத்திருத்தம் தேவைப்படும் கட்டுரை
தொகுஇந்தக் கட்டுரையின் தலைப்பு, எங்கள் குடும்பம் பெரிசு என இருக்கவேண்டும். காண்க: ஆங்கிலக் கட்டுரை --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:44, 20 அக்டோபர் 2016 (UTC)
முத்துராமன், ஜெயசித்ரா, வெளியான ஆண்டு - இவை மூன்றும் இக்கட்டுரையில் உள்ள தவறான தகவல்கள். எனினும் 1973 ஆம் ஆண்டிலும் ஸ்கூல் மாஸ்டர் எனும் திரைப்படம் வெளியானதா என்பதனையும் சரிபார்க்க வேண்டும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:47, 20 அக்டோபர் 2016 (UTC)
- இது ஒரு சிக்கலான திரைப்படத் தலைப்பு. 1973 இல் பி. ஆர். பந்துலுவின் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த ஸ்கூல் மாஸ்டர் திரைப்படத்தில் ஜெமினி, சௌகார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். முத்துராமன், ஜெயசித்திராவும் துணைப்பாத்திரங்களில் நடித்துள்ளனரா எனப் பார்க்க வேண்டும். இதே கதை பி. ஆர். பந்துலு 1958 இல் தமிழில் எங்கள் குடும்பம் பெரிசு என்ற பெயரிலும் (டப் படமா என அறிய வேண்டும்), கன்னடத்தில் ஸ்கூல் மாஸ்டர் (1958), தெலுங்கில் பதி பந்துலு (1958), இந்தியில் ஸ்கூல் மாஸ்டர் (1959) என்ற பெயர்களிலும் வெளிவந்தன. இதே கதை பின்னர் 1964 இல் ஸ்கூல் மாஸ்டர் என்ற பெயரில் மலையாளத்தில் வெளிவந்தது. இதில் சிவாஜி, சௌகார், பாலாஜி ஆகியோரும் நடித்திருந்தனர்.[1]. சிக்கல் தானே:). சிவாஜி நடித்த முதலாவது மலையாளப் படம். @Uksharma3:--Kanags \உரையாடுக 01:58, 22 அக்டோபர் 2016 (UTC)
- எனது பரிந்துரை: எங்கள் குடும்பம் பெரிசு என்ற தலைப்பில் புதிய கட்டுரை எழுத வேண்டும். இதனை ஆங்கிலத்தில் உள்ள en:School Master (1958 film) என்ற கட்டுரைக்கு இணைக்க வேண்டும். ஸ்கூல் மாஸ்டர் கட்டுரைத் தலைப்பை ஸ்கூல் மாஸ்டர் (1973 திரைப்படம்) என்ற தலைப்புக்கு மாற்ற வேண்டும். சிவாஜி துணைப்பாத்திரமாக நடித்த 1964 மலையாளப் படத்திற்கு வேண்டுமானால் ஒரு கட்டுரை ஸ்கூல் மாஸ்டர் (1964 திரைப்படம்) என்ற தலைப்பில் எழுதலாம். சிவாஜி நடித்த படம் ஆதலால் இதற்கு ஒரு கட்டுரை இருப்பது நல்லது.--Kanags \உரையாடுக 02:09, 22 அக்டோபர் 2016 (UTC)
- இந்தக் கட்டுரையின் தலைப்பு சரியானதே. அதை மாற்ற வேண்டியதில்லை. இது 1973 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். எங்கள் குடும்பம் பெரிசு 1958 ஆம் ஆண்டு வெளியானது. குழப்பம் வேண்டாம். முழு விபரம் கீழே கொடுத்துள்ளேன்.
ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் தகவல் படி 1958 ஆம் ஆண்டு எங்கள் குடும்பம் பெரிசு தமிழில் தனியாகத் தயாரிக்கப்பட்டது. ஆனால் ஒரே சமயத்தில் கன்னடத்தில் ஸ்கூல் மாஸ்டர் எனவும் எங்கள் குடும்பம் பெரிசு எனத் தமிழிலும் தயாரிக்கப்பட்டது. 'டப்' செய்யப்படவில்லை. பி. ஆர். பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தை அவரே டைரக்ட் செய்தார்.
ஆனால் இந்தப் படம் தெலுங்கில் (பதி பந்துலு) என டப்பிங் செய்யப்பட்டது.
இந்தியில் 1959 ஆம் ஆண்டு ஸ்கூல் மாஸ்டர் என தனியாக தயாரிக்கப்பட்டது. ஆனால் பந்துலுவே டைரக்ட் செய்தார்.
பின்னர் 1964ஆம் ஆண்டு ஸ்கூல் மாஸ்டர் என மலையாளத்தில் தனியாக தயாரிக்கப்பட்டது. பந்துலு தயாரிக்க புட்டண்ணா டைரக்ட் செய்தார். பிரேம் நஸீர் தான் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். சிவாஜி கணேசனும் ஒரு பாத்திரத்தில் நடித்தார்.
1973 ஆம் ஆண்டு ஸ்கூல் மாஸ்டர் என்ற தலைப்பில் பி. ஆர். பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் தமிழில் தயாரித்தார்கள். பந்துலு இயக்கத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி நடித்தார்கள்.
2010 ஆம் ஆண்டில் ஸ்கூல் மாஸ்டர் என்ற பெயரில் கன்னடத்தில் ஒரு படம் வெளியானது.
குழப்பம் வேண்டாம்.
தமிழைப் பொறுத்தவரை,
1958 ஆம் ஆண்டு வெளியான எங்கள் குடும்பம் பெரிசு 1973 ஆம் ஆண்டு வெளியான ஸ்கூல் மாஸ்டர் இரண்டையும் கணக்கில் எடுத்தால் சரி. --Uksharma3 02:29, 22 அக்டோபர் 2016 (UTC)