பேச்சு:ஸ்கைலேப்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Kanags
Skylab என்பதை அப்படியே அர்த்தத்திற்கு மொழி மாற்றம் செய்யாது இசுக்கைலாப் என்றோ ஸ்கைலாப் என்றோ பெயர் மாற்றலாம். en:Spacelab என்ற கட்டுரையையும் நினைவிற் கொள்க. --Anton (பேச்சு) 11:23, 29 சூலை 2013 (UTC)
பெயர் நன்றாகதானே உள்ளது? விண்ணாய்வகம் - Skylab; விண்வெளி ஆய்வகம் - Spacelab --நந்தகுமார் (பேச்சு) 11:39, 29 சூலை 2013 (UTC)
- பெயர் சிறப்பாக உள்ளது ஐயா!
- ஆனால், பெயர்ச் சொற்கள் அதேபெயரிலேயே எழுதப்பட வேண்டும். அந்த சொல் sky lab அல்ல, skylab. இரு சொற்களும் தனித்தனியாக இருந்தால் மட்டுமே மொழிபெயர்க்க வேண்டும். ஒரே சொல்லாக இருப்பதால் அது பெயர்ச் சொல்லாகவே கருதப்படும்.
- தவிர, அது வேற்று மொழிச் சொல் என்பதால், விண்ணாய்வகம் என மொழிபெயர்த்தால் என்பது விண்வெளியில் உள்ள எந்த ஆய்வகத்தையும் குறிக்கக்கூடும். அதைக் குறிப்பிட்டுக் கூற பெயர்ச் சொல்லே சிறந்தது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:56, 29 சூலை 2013 (UTC)
- தெளிவுபடுத்தியமைக்கு நன்றி--நந்தகுமார் (பேச்சு) 13:28, 29 சூலை 2013 (UTC)
- இசுக்கைலாப் ----> இசுகைலாப் என்பது சிறப்பாக இருக்கும் அல்லது ஸ்கைலாப் பயன்படுத்தலாம். அன்டோனினதை வழிமொழிகிறேன். -- நி ♣ ஆதவன் ♦ (உரையாட படத்தை சொடுக்கவும்) 13:05, 29 சூலை 2013 (UTC)
- விண்ணாய்வகம் என்ற பெயர் சிறப்பாகவே உள்ளது. இதை பார்ப்பவர் எந்த விண்ணாய்வகம் எனத் திணறக் கூடும். தவிர, ஸ்கைலாப் என்பதில் உள்ள லாப் என்பது lap என்றும் படிக்கப்படலாம். எனவே, ஸ்கைலேப் என்றோ, ஸ்கைலேப் (விண்ணாய்வகம்) எனத் தெளிவாகவோ குறிப்பிடலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:54, 29 சூலை 2013 (UTC)
- தெளிவுபடுத்தியமைக்கு நன்றி--நந்தகுமார் (பேச்சு) 13:28, 29 சூலை 2013 (UTC)
- ஸ்கைலேப் எனவே தலைப்பை வைக்கலாம்.--Kanags \உரையாடுக 21:08, 29 சூலை 2013 (UTC)