பேச்சு:ஹென்றி ஃபோர்ட்

ஹென்றி ஃபோர்ட் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ஹென்றி ஃபோர்ட் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

Untitled

தொகு

வலைப்பதிவுக் கட்டுரை தரமாக இருந்தால் அதை இணைக்கலாம். தமிழில் வலைப்பதிவு அல்லாத இணைப்புக்களைப் பெறுவது கடினம். இது ஒரு பொருளாதாரப் புறச் சூழ்நிலை. --Natkeeran 04:16, 25 அக்டோபர் 2010 (UTC)Reply

நற்கீரன், இங்கு பலர் அவர்கள் எழுதிய வலைப்பதிவுகளுக்கே இணைப்பு கொடுக்கிறார்கள். இதை அனுமதிப்பதும், ஊக்குவிப்பதும் சரியன்று (அவர் துறை சார் வல்லுனராக இருந்தாலும்). விக்கியின் வெளிப்புற இணைப்புக் கொள்கை விக்கியின் விமர்சகர்களால் கடுமையாகச் சாடப்படும் விஷயங்களில் ஒன்று. There is a vocal and serious complaint that wiki editors game the system to use external links to generate traffic to their personal websites. இதனால் தரமான கட்டுரையென்றாலும் அவரவர் சொந்தப் பதிவுக்கு வெளி இணைப்பு தரும் பழக்கத்தை தடுக்க வேண்டுமென்று கருதுகிறேன். இன்றைய தமிழ் வலைப்பதிவுலகிலும் பார்வையாளர் எண்ணிக்கையைக் கூட்ட இந்த மாதிரி வேலைகளை பலர் செய்கிறார்கள். நாம் கொஞ்சம் இறுக்கமாக நடந்து கொள்வது தான் நல்லது. --சோடாபாட்டில் 04:51, 25 அக்டோபர் 2010 (UTC)Reply

சோடா பாட்டில் கருத்தை ஆமோதிக்கிறேன். பலரும் அவர்கள் வலைப்பதிவுக்கு / தளத்துக்கு அவர்களே இணைப்பு தருகிறார்கள். இது நடுநிலை அல்ல. தரமான இணைப்பை அதற்குத் தொடர்பு இல்லாதவர் தந்தால் ஒப்பலாம்--இரவி 05:54, 25 அக்டோபர் 2010 (UTC)Reply

ஆம், அதுதான் நல்லது. தொடக்க நாட்களில் (கிட்டத்தட்ட என் சொந்த ஆய்வுக்கு) வேறு சான்று கிடைக்காததால் பெர்ள் கட்டுரையில் என் வலைப்பதிவைச் சான்றாகக் காட்டியுள்ளேன். இதையும் மீளாய்வு செய்ய வேண்டும். சரியல்ல என்றால் நீக்கி விடலாம். -- சுந்தர் \பேச்சு 08:43, 25 அக்டோபர் 2010 (UTC)Reply

தங்களுக்குத் தாமே இணைப்பு தரும் வேலையை நிறைய தமிழ் எழுத்தாளர்களும் தமிழ் வலைத்தளம் நடத்துபவர்களும் செய்கிறார்கள். இது தமிழ் விக்கிப்பீடியாவின் நடுநிலைக்கும் தரத்துக்கும் உகந்தது அல்ல என்று தனிப்பட பேசும் போது சிலர் முறையிட்டுள்ளார்கள். எனவே, இது குறித்த விசயங்களை மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். தன்னுடைய தளத்துக்குத் தானே இணைப்பு தரக்கூடாது. தரமான இணைப்பாக இருந்தாலும், நன்கு அறியப்பட்ட பிற தமிழ் விக்கியர்கள் இணைப்பு தருவது நன்று என்பதனை ஒரு கொள்கை வழிகாட்டாக அறிவிக்கலாம்.--இரவி 10:54, 25 அக்டோபர் 2010 (UTC)Reply

இங்கே இதற்கான கொள்கை வரைவுப் பக்கத்தைத் தொடங்கியிருக்கிறேன். இக்கொள்கையினை விரிவு படுத்த உதவுங்கள். ஓரளவு வளர்ந்தபின், யாருக்கும் மறுப்பில்லையெனில், கொள்கையாக ஏற்றுக் கொள்வோம்.--சோடாபாட்டில் 11:25, 25 அக்டோபர் 2010 (UTC)Reply
சோடா பாட்டில் கருத்தை ஆமோதிக்கிறேன்.--Natkeeran 20:26, 25 அக்டோபர் 2010 (UTC)Reply

துப்புரவு

தொகு

ஆதாரமற்ற, பதிப்புரிமை மீறலாக இருக்கக் கூடிய பகுதிகளைக் கட்டுரையில் இருந்து நீக்கியுள்ளேன். எழுத்து நடையின் அடிப்படையில், ஒரு புகுபதியாத பயனர் சேர்த்திருந்த பெரும்பகுதி உரை வேறு ஒரு நூல் அல்லது இதழில் இருந்து வெட்டி ஒட்டப்பட்டிருக்க வாய்ப்புண்டு. கலைக்களஞ்சிய நடைக்கும் பொருத்தமாக இல்லை. --இரவி (பேச்சு) 10:48, 11 சூன் 2017 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஹென்றி_ஃபோர்ட்&oldid=4061980" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஹென்றி ஃபோர்ட்" page.