பேச்சு:2014 கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுகள்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன் in topic தலைப்பு
தலைப்பு
தொகுகோடைக்காலம் அல்ல. மாரி காலம், வசந்த காலம் என்பவை போன்று கோடை காலம். கோடை கால ... விளையாட்டுக்கள்.--பாஹிம் (பேச்சு) 05:20, 19 ஆகத்து 2014 (UTC)
- வணக்கம் பாஹிம் . இதை சான்றாதாராமாகக் கொண்டே கோடைக்காலம் என்று எழுதினேன் . அது கோடை காலம் தான் என்றால் , மாற்றி விடலாம் . நன்றி --Commons sibi (பேச்சு) 06:52, 19 ஆகத்து 2014 (UTC)
அங்கேயும் மாற்ற வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 09:36, 19 ஆகத்து 2014 (UTC)
- இது பல இடங்களில் மாற்றப்பட வேண்டியிருப்பதால் ஏதேனும் தானியங்கி கருவி (AWB, Bot) செய்வது சீராக இருக்கும். இல்லையெனில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறாக இருக்கும்.--மணியன் (பேச்சு) 10:08, 19 ஆகத்து 2014 (UTC)
- @Fahimrazick and Rsmn: கோடைக்காலம் என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை. ஆகவே, சாரைப்பாம்பு என்பது போல ஒற்று மிகவேண்டும். இதே போல மாரிக்காலம் என்பதே சரியானது. பார்க்க: wikisource:ta:கம்பராமாயணம்/கிட்கிந்தா காண்டம்/அரசியற் படலம் --மதனாகரன் (பேச்சு) 04:32, 28 சூன் 2015 (UTC)
மதனாகரன், நீங்கள் காட்டிய உதாரணம் தகாது. வேறு உதாரணம் தாருங்கள். ஏனெனில், இங்கே விக்கி மூலத்தில் தந்திருப்பது உண்மையான மூல வடிவமல்ல. கம்பராமாயணத்தின் பாயிரத்தில் நான்காவது பாடல்,
- ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
- பூசை முற்றவும் நக்குபு புக்கென
- ஆசை பற்றி அறையலுற்றேன்மற்று இக்
- காசுஇல் கொற்றத்து இராமன் கதைஅரோ.
என்று தரப்பட்டுள்ளது. இதன் மூல வடிவம் பின்வருமாறு இருக்கிறது.
- ஓசை பெற்றுயர் பாற்கடலுற்றொரு
- பூசை முற்றவும் நக்குபு புக்கென
- ஆசை பற்றியறையலுற்றேன் மற்றிக்
- காசில் கொற்றத்திராமன் கதையரோ.
இந்நிலையில் மாற்றப்பட்ட வடிவத்தை எப்படி ஏற்பது?--பாஹிம் (பேச்சு) 15:12, 28 சூன் 2015 (UTC)
- விக்கிமூலத்தில் இவ்வாறு பல சிக்கல்கள் உள்ளன. பல பாடல்கள் சந்தி பிரித்தெழுதப்பட்டுள்ளன. http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=72&pno=309
- தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பதிப்பிலும் மாரிக்காலம் என்றே உள்ளது. --மதனாகரன் (பேச்சு) 03:44, 29 சூன் 2015 (UTC)
- தலைப்பானது இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும். எடுத்துக்காட்டாகக் கூறப்படும் விக்கிமூலப்பக்கம் மறு ஆய்வுக்குரியது என்பது புதிய ஆக்கமான திட்டம். ஆனால், தலைப்புக்கு கூறப்படும் விளக்கமானது, சந்தியிலக்கண விதியால் கட்டமைக்கப் படவில்லை.அது கூறப்படும் வரை, தலைப்பு மாற்றுக வார்ப்புரு நீக்கப்படுகிறது--த♥உழவன் (உரை) 02:59, 10 மார்ச் 2017 (UTC)