பேச்சு:2014 பொதுநலவாய விளையாட்டுக்கள்

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m

en:2014 Commonwealth Games medal table எனும் கட்டுரையிலுள்ள பட்டியலை இற்றை செய்தால், en:2014 Commonwealth Games எனும் கட்டுரையிலுள்ள அட்டவணையும் (முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள நாடுகள்) இற்றையாகிறது. இதைப்போன்று 2014 பொதுநலவாய விளையாட்டுக்களின் பதக்க நிலவரம் எனும் கட்டுரையையும் 2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் எனும் கட்டுரையையும் யாராவது தொடர்புபடுத்தித் தந்தால், மிகவும் உதவியாக இருக்கும்! ஒரே வேலையை இரு இடங்களில் செய்வதை தவிர்க்கலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:26, 25 சூலை 2014 (UTC)Reply

இதற்குத் தான் வார்ப்புரு பயனாகிறது ;) நீங்கள் வார்ப்புரு:2014 பொதுநலவாய விளையாட்டுக்களின் பதக்க நிலவரம் என்று உருவாக்கி இரு கட்டுரைகளிலும் இணைத்து விடலாம். 2014 பொதுநலவாய விளையாட்டுக்களின் பதக்க நிலவரம் பக்கத்தில் அனைத்து நாடுகளின் பதக்க நிலவரமும் பின்னாளில் இற்றைப்படுத்தப் போவதென்றால், அக்கட்டுரையில் முதல் பத்து இடங்களைப் பிடித்த நாடுகள், ஏனைய நாடுகளின் பதக்க விவரங்கள் என்று இரு பத்திகளை உருவாக்கலாம். இரண்டாவது பத்தியை போட்டிகள் முடிந்தபிறகு இற்றைப் படுத்தலாம்.--மணியன் (பேச்சு) 04:36, 25 சூலை 2014 (UTC)Reply

ஆங்கிலத்தில் வார்ப்புரு உருவாக்கவில்லை; ஒரு எளிய நிரல் எழுதியிருக்கிறார்கள்; எனக்கு புரியவில்லை. நீங்கள் ஒருமுறை கவனித்துப் பாருங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:42, 25 சூலை 2014 (UTC)Reply

ஆங்கிலக் கட்டுரைகளை கவனித்தேன். தனியாக வார்ப்பு எழுதுவதற்கு மாற்றாக கட்டுரையிலேயே <includeonly>, </includeonly> நிரல்மொழியைப் பயன்படுத்தி உள்ளனர். அதே போல தமிழிலும் செய்தாயிற்று. இனி 2014 பொதுநலவாய விளையாட்டுக்களின் பதக்க நிலவரம் கட்டுரையை இற்றைப் படுத்தினாலே போதும். ஆனால் விக்கிநிரலில் உள்ள குறிப்புக்களை கவனித்து எதையும் நீக்காது செய்ய வேண்டும். இதைத் தவிர்க்க தனியாக வார்ப்புரு உருவாக்குவதே நல்லது. --மணியன் (பேச்சு) 09:07, 25 சூலை 2014 (UTC)Reply

மிக்க நன்றி மணியன்! மிகவும் உதவிகரமாக உள்ளது. எதிர்காலத்தில் தனியாக வார்ப்புரு உருவாக்கி சோதனை செய்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:25, 29 சூலை 2014 (UTC)Reply

ஒவ்வொரு நாள் பதக்க நிலவரம்

தொகு

இது 2014 பொதுநலவாய விளையாட்டுக்களின் பதக்க நிலவரம் கட்டுரையில் இருந்தால் போதுமானது. இந்தக் கட்டுரையின் அளவை பெரிதாக்குவதை தவிர்க்கவும்.--மணியன் (பேச்சு) 09:07, 25 சூலை 2014 (UTC)Reply

ஆம், மொஹம்மத் இஜாஸ். மணியன் அவர்களின் எண்ணம் சரியென்றே நானும் கருதுகிறேன். இந்தக் கட்டுரையின் அளவை பெரிதாக்குவதை தவிர்க்கத்தானே நாம் முதன்மைக் கட்டுரைகளை உருவாக்கியுள்ளோம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:35, 25 சூலை 2014 (UTC)Reply
Return to "2014 பொதுநலவாய விளையாட்டுக்கள்" page.