பார்வையிடல்கள் போன்றவற்றுக்கு தனிப் பகுதிகள் தேவையில்லை என்பது என் கருத்து. பாதிப்புக்கள் எனும் பகுதியில் யார் யார் என ஒரே வசனத்தில் குறிப்பிட்டு மேற்கோள்களையும் சுட்டலாம். அதாவது பாதிப்புக்களைப் பார்வையிட்டனர் என. தொடர்பாடல்கள், போக்குவரத்து பாதிப்புக்கள் போன்றவை வசன நடையில் இருப்பதே சிறப்பு. தகவல்கள் சேர்ந்தவுடன் மாற்றிவிடக் கோருகிறேன். பெருமுயற்சியெடுத்து கட்டுரையை வளர்த்து வரும் செல்வசிவகுருனாதனுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 12:30, 5 திசம்பர் 2015 (UTC)Reply
பரிந்துரைகளுக்கு நன்றி; கவனத்தில் கொள்கிறேன். இணைய இணைப்பு சரிவர இல்லாததால் தகவல்களை மட்டும் சேர்த்து வருகிறேன்; இறுதியில் ஒழுங்கமைவு செய்துவிடலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:53, 5 திசம்பர் 2015 (UTC)Reply
👍 விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 03:50, 6 திசம்பர் 2015 (UTC)Reply

இணைத்தல் வார்ப்புருவிற்கு பதிலும், இணைத்தலுக்கு மறுப்பும்...

தொகு

தமிழகம் குறித்த கட்டுரை என்பதால், இக்கட்டுரைக்கு குறிப்பிடத்தக்கமை உள்ளது; சென்னை வரலாற்றில், குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வைப் பற்றிய கட்டுரை என்பதால் தனிக் கட்டுரையாக இருக்கவும் தகுதி இருக்கிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:09, 31 அக்டோபர் 2016 (UTC)Reply

இங்கு யாரும் குறிப்பிடத்தக்கமை பற்றிய குறிப்பிடவில்லை. ஒன்றிணைப்பதில் என்ன சிக்கல்? தகலை ஏன் பிரித்து தனிக்கட்டுரையாக வைத்திருக்க வேண்டும்? --~AntanO4task (பேச்சு) 03:14, 3 நவம்பர் 2016 (UTC)Reply

நிகழ்வின் முக்கியத்துவம் கருதி, தனிக் கட்டுரையாக வைத்திருக்க இக்கட்டுரைக்கு தகுதி இருக்கிறது. இந்த வட்டாரத்தில் வாழும் பயனர் என்ற முறையில், முக்கியத்துவம் தெரிந்து ஒரு கட்டுரையாக எழுதப்பட்டது. அந்த ஆண்டு மழையில் பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னையின் நிலையானது முழுமையாக கலைக்களஞ்சியத்தில் பதியப்பட வேண்டும் எனக் கருதியே கட்டுரை எழுதப்பட்டது. தனிக் கட்டுரையாக இருப்பதில் என்ன பிரச்சனை? அவசியம் இருப்பின் மூலக் கட்டுரையிலிருந்து முதன்மைக் கட்டுரைகளுக்கு இணைப்பு கொடுப்பது, விக்கியில் ஏற்கப்பட்ட ஒன்று. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:01, 3 நவம்பர் 2016 (UTC)Reply

2015 சென்னை பேரழிவு கட்டுரையை இந்தக் கட்டுரையுடன் இணைத்தல்

தொகு

மா. செல்வசிவகுருநாதன்! 2015 சென்னை பேரழிவு கட்டுரையும், இந்தக் கட்டுரையும், ஒரே தகவல்களைக் கொண்டிருப்பதனால், அவற்றை வரலாற்றுடன் சேர்த்து ஒன்றிணைத்துவிடலாம் என நினைக்கின்றேன். அப்படி இணைக்கையில் எந்தத் தலைப்பைக் கொடுக்கலாம் என அறியத் தாருங்கள். 2015 சென்னை பேரழிவு தலைப்பையே கொடுத்துவிடலாமா?--கலை (பேச்சு) 23:18, 6 சனவரி 2017 (UTC)Reply

இந்தக் கட்டுரையை, 2015 வடகிழக்கு பருவமழையால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகள் கட்டுரையுடன் இணைத்தல்

தொகு

இந்தக் கட்டுரையும், 2015 வடகிழக்கு பருவமழையால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகள் கட்டுரையும் ஒரே தகவல்களைக் கொண்டிருப்பதனால், இவற்றை வரலாற்றுடன் சேர்த்து ஒன்றாக இணைத்துவிடலாம். --கலை (பேச்சு) 23:19, 6 சனவரி 2017 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:2015_சென்னை_பேரழிவு&oldid=2661724" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "2015 சென்னை பேரழிவு" page.