2015 சென்னை பேரழிவு

2015 சென்னை பேரழிவு என்பது, 100 ஆண்டுகளில் இல்லாத அளவு ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை பேரழிவு ஆகும். 2015 ஆம் ஆண்டில், நவம்பர் மற்றும் டிசம்பரில், வடகிழக்கு பருவமழை காலத்தில் கடும் மழை பொழிந்து பேரழிவை ஏற்படுத்தியது. மழை நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கியது. இக் காலத்தில் பெய்த 3 பெருமழைகளின் காரணமாக சென்னை நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இரண்டாவது, மூன்றாவது பெருமழைகளையடுத்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த பேரழிவின் விளைவாக சாலைகள், ரயில் தண்டவாளங்களும் சேதமடைந்தன.

தென்னிந்திய மாநிலங்களில் கோரமண்டல் கடற்கரைப் பகுதி, மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி ஒன்றியப் பகுதி , குறிப்பாக கடுமையாக சென்னை பாதிக்கப்பட்டது. 1000 க்கும் பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த மழையின் காரணம் எல் நீனோ என்ற புவியியல் மாற்றம் எனக் கூறப்பட்டது.[1]

வெள்ளப் பெருக்கும், அவசரகால நிலையும் தொகு

மூன்றாவது பெருமழையால், நவம்பர் 30 அன்று இரவு முதல் டிசம்பர் 2 அதிகாலை வரை தொடர்ந்த தொடர் மழையின் காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏரிகளிலிருந்து நீர் பெருமளவு வெளியேற்றப்பட்டது. இதுதவிர ஏற்கனவே நிரம்பிவிட்ட சிறு ஏரிகள் மற்றும் குளங்களிலிருந்து நீர் வெளியேறி நகரிலும், நகரின் சுற்றுப்புற பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டது. அவசரகால நிலை அறிவிக்கப்பட்டது.

  • டிசம்பர் 1 - காலை 8.30 மணி முதல் டிசம்பர் 2 - காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர காலகட்டத்தில் பதிவான மழையளவுகள்:
    • தாம்பரம் = 49 செ. மீ
    • மீனம்பாக்கம் வானூர்தி நிலையம் = 35 செ. மீ
    • வட சென்னை = 29 செ. மீ

சேதங்கள் தொகு

உயிரிழப்புகள் தொகு

  • மியாட் எனும் தனியார் மருத்துவமனை ஒன்றில், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த 18 பேர் உயிரிழந்தனர். மின்சார இணைப்பு இல்லாத காரணத்தால் இந்த இழப்பு ஏற்பட்டதாக கருதப்படுகிறது[2].

தனி மனிதர்களுக்கு ஏற்பட்ட சொத்து சேதங்கள் தொகு

  • குறைந்த வருவாய் ஈட்டும் பிரிவினர் குடியிருந்த 50,000இற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தின் காரணமாக பெருமளவு சேதமடைந்ததாக சென்னை மாநகராட்சி அலுவலர் தெரிவித்தார்[3]. இதுவொரு ஆரம்பநிலை கணக்கீடாகும்.

வெள்ளம் தொகு

 
சென்னை பாலம்

அடையாற்றில் வெள்ளம் தொகு

அடையாறு செம்பரம்பாக்கம் ஏரியில் தோன்றுகிறது. டிசம்பர் முதல் வாரத்தில் 30 ஆயிரம் கன அடி நீர் செம்பரம்பாக்கம் அணையில் இருந்து அடையாற்றில் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நீர் அடையாற்றில் கடும் வெள்ளத்தை ஏற்படுத்தியது. ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்கள் தண்ணீருக்குள் மூழ்கின. இதனால் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. தண்ணீருக்குள் மூழ்கிய பிரதான பாலங்கள் சைதாப்பேட்டை பாலம் மற்றும் ஈக்காட்டுத் தாங்கல் பாலம் ஆகியனவாகும். ஆற்றின் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் நுழைந்தமையால் பல குடிசைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. மக்கள் பலர் தாங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். அந்தப் பகுதியில் வாழும் மாணவர்கள் தங்கள் புத்தகங்களை இழந்தனர். வெள்ளம் வந்த பின்னர் நெகிழிப் பொருள்கள் இடங்களில் முழுவதும் சிதறிக்கிடந்தன. இந்த நிகழ்வு சுற்றுப்புறச் சூழல் பாதிப்பைக் காட்டுகிறது.

கூவம் ஆற்றில் வெள்ளம் தொகு

ஆவடி அருகே வேகமான நீர் ஓட்டம் காரணமாக பாலம் ஒன்று உடைந்தது. தரை பாலங்கள் பல மூழ்கின.

நீரில் மூழ்கிய சுரங்கப்பாதை தொகு

நீரில் சுரங்கப் பாதைகள் மூழ்கியதால்,[4] அதனூடான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன.[5] நீரில் மூழ்கிய சுரங்கப் பாதைகள்:

போக்குவரத்துப் பாதிப்பு தொகு

சாலை போக்குவரத்து நிறுத்தம் தொகு

வெள்ளம் காரணமாக சாலைகள் பல பயன்படுத்தத் தடை விதிக் கப்பட்டது.

தொடர்வண்டிப் போக்குவரத்து நிறுத்தம் தொகு

தொடர்வண்டித் தடங்கள் சேதமடைந்தமையால், தொடர்வண்டிs சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து எல்லா தொடர்வண்டிகளும் டிசம்பர் 1 முதல் இரத்து செய்யப்பட்டு, பின்னர் டிசம்பர் 7 முதல் வழமைக்குத் திரும்பியது. டிசம்பர் 5 நள்ளிரவு முதல் எழும்பூர் தொடர்வண்டி நிலையத்திலும், சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திலும் வழக்கமான சேவை நடைமுறைப்படுத்தப்படும் என தென்னக இரயில்வே தெரிவித்தது.

விமான போக்குவரத்து நிறுத்தம் தொகு

 
வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட சென்னை வானூர்தி நிலையம் (இந்திய விமானப் படை வெளியிட்ட ஒளிப்படம்)

ஓடுபாதை வெள்ளம் காரணமாக விமான சேவை டிசம்பர் 2 முதல், டிசம்பர் 7 வரை நிறுத்தி வைக்கப்பட்டது.[4] அரக்கோணம் கடற்படை விமானத் தளம் பயணிகள் பொது விமான நிலையமாக தற்காலிகமாகப் பயன்படுத்தப்பட்டது. டிசம்பர் 6 இல் இருந்து உள்நாட்டு விமானச்சேவையும், டிசம்பர் 7 முதல் சர்வதேச விமானச்சேவையும் மீண்டும் தொடங்கியது. டிசம்பர் 6 வரை வானூர்தி நிலையம் மூடப்பட்டது. ஓடுபாதையில் தேங்கியிருந்த தண்ணீர் முழுவதுமாக டிசம்பர் 5 அன்று நீக்கப்பட்டது. இதற்காக 20 மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டன. நிலையத்தில் ஏற்கனவே தங்கியிருக்கும் 22 வானூர்திகளின் புறப்பாடு மட்டும் டிசம்பர் 5 முதல் அனுமதிக்கப்பட்டது.

மின்சாரம் துண்டிப்பு தொகு

நவம்பர் இரண்டாவது வாரத்தில் வெள்ளம் காரணமாக மின் வெட்டு ஆரம்பித்தது. பின்னர் டிசம்பர் முதல் வாரத்தில்ருந்து பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு இருந்தது. அதனால் ஒளிரும் சென்னை ,இருளில் மூழ்கியது.

தொலைதொடர்பு சேவை துண்டிப்பு தொகு

தொலைத்தொடர்புச் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது. இணைய இணைப்புகள் பாதிக்கப்பட்டன.

  • தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாக தொலைபேசி கோபுரங்கள் பல செயல் இழந்துவிட்டன. எனவே தொலைபேசி மற்றும் செல்லிடத் தொலைபேசிகள் செயலிழந்தன. சென்னை வாழ்மக்கள் மற்ற இடங்களில் இருக்கும் தம் உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடியாதிருந்தது.
  • பி.எஸ்.என்.எல் ஒரு வாரம் காலத்திற்கு இலவச இணையத்தளச் சேவை மற்றும் வெளிச்செல்லும் அழைப்புக்களை அறிவித்தது.

பற்றாக்குறையும், விலைவாசியும் தொகு

வெள்ளத்தையடுத்து, அடிப்படைத் தேவைகளான பால், தண்ணீர், காய்கறிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. அரை லிட்டர் பால் உரூபாய் 100க்கு விற்கப்பட்டது. இது வழக்கமான விலையை விட 5 மடங்கு அதிகமாகும். தண்ணீர் பாட்டில்கள், கேன்கள் உரூபாய் 100 முதல் 150 வரை விற்கப்பட்டன[6].

எரிபொருள் கிடைப்பது சிரமமானது.[7] வானூர்திக் கட்டணங்கள் 10 மடங்கு உயர்ந்தன[8][9]

பாதிக்கப்பட்ட செய்தி நாளேடுகளும், ஒளிபரப்புப் சேவைகளும் தொகு

  • டிசம்பர் 2 அன்று காலையில் தி இந்து நாளிதழ் வெளியாகவில்லை. டிசம்பர் 1 அன்று இரவில், மறைமலைநகரில் உள்ள அச்சகத்தில் வெள்ள நீர் புகுந்ததையடுத்து இந்நிறுவனத்தின் பத்திரிகைகள் அச்சாகவில்லை[10].
  • ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் அமைந்திருந்த புதிய தலைமுறை, ஜெயா தொலைக்காட்சி, மெகா தொலைக்காட்சி போன்ற ஒளிபரப்புப் சேவை நிலையங்களில் வெள்ள நீர் புகுந்ததையடுத்து, அவற்றின் ஒளிபரப்புகள் நிறுத்தப்பட்டன.

விடுமுறைகள் தொகு

  • நவம்பர் 8 முதல் டிசம்பர் 13 வரை சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறையை அறிவித்தனர்.[11] ஒரு மாதத்திற்கும் மேலாக மாணவர்கள் விடுமுறையில் இருந்தனர். எனவே அவர்களது கல்வி பாதிப்படைந்தது. அவர்களின் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படன.
  • டிசம்பர் 3 மற்றும் 4 அன்று அரசாங்கம் அனைத்து நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அறிவித்தது. எனவே மக்கள் தத்தமது சொந்த ஊருக்குச் சென்றனர்.

முக்கிய சாலையில் பள்ளம் தொகு

டிசம்பர் 1 ம் தேதி அன்று முக்கிய சாலையான மத்திய கைலாஷ் போக்குவரத்து விளக்கு அருகில் திடீரென ஒரு பள்ளம் தோன்றியதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.[12]

மீட்புப்பணிகள் தொகு

தேசியப் பேரிடர் மீட்புக்குழு தொகு

  • டிசம்பர் 5 மாலை வரை 16,000 பேர் மீட்கப்பட்டனர். 21 அதிகாரிகள் உள்ளிட்ட 1600 வீரர்கள் (50 குழுக்கள்), 200 படகுகளின் மூலமாக இப்பணிகளைச் செய்தனர்.[13].

முதல்வர் மற்றும் பிரதமரின் வான்வழிப் பார்வையிடல் தொகு

டிசம்பர் 3 அன்று மாநில முதல்வர் ஜெயலலிதாவும், பிரதமர் நரேந்திர மோதியும் கெலிகாப்டர் மூலமாக வெள்ளச் சேதங்களை தனித்தனியே பார்வையிட்டனர்.

மக்களுக்கான இதர உதவிகள் தொகு

  • டிசம்பர் 5 முதல் டிசம்பர் 8 வரையிலான 4 நாட்களுக்கு சென்னை நகரப் பேருந்துகளில் பொதுமக்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என மாநில அரசு அறிவித்தது[14].

நிவாரணப் பணிகள் தொகு

மூன்றாவது பெருமழைக்கு அடுத்து ஏற்பட்ட வெள்ளம் குறித்தான குற்றச்சாட்டுகள் தொகு

முதல் இரண்டு பெருமழைகள் தொகு

தாம்பரம் பகுதியில் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்ததையடுத்து, கெலிகாப்டர்கள் மூலமாக உதவிகள் வழங்கப்பட்டன[15][16]. மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகுகள் மூலமாக மக்கள் மீட்கப்பட்டனர்[17]. தாம்பரத்திற்கு அருகேயுள்ள இராஜகீழ்ப்பாக்கம், சேலையூர் குளங்களை தீய எண்ணம் கொண்டோர் சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது[18]. சென்னையின் பல பகுதிகளில் பாதுகாப்பு நலன் கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது[19].

மீட்புப் பணிகள் தொகு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, மருத்துவ சிகிச்சைகளை பல்வேறு தரப்பினர் வழங்கினர். சென்னையின் சில இடங்களில் கட்டிடங்களின் கீழ்தளம், முதல் மாடி வரை தண்ணீர் புகுந்ததால், நிலைமையை சமாளிக்க இராணுவ உதவி கோரப்பட்டு மக்கள் மீட்கப்பட்டனர். அரசின் வேண்டுகோளுக்கிணங்க மீனவர்கள் தங்களது படகுகளை பயன்படுத்தி பொதுமக்களுக்கு உதவினர். சில தொண்டு நிறுவனங்கள், ஓலா என்னும் தனியார் வாடகை தானுந்து நிறுவனங்களும் படகுகளைப் பயன்படுத்தி இலவசமாக உதவினர். சமூக வலைதளங்களில் சென்னையில் நகரில் ஓடும் படகுகளை வெனிஸ் நகரோடு ஒப்பிட்டனர்.

நிவாரண உதவிகள் தொகு

மழையினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு 4 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது. தமிழக அரசின் மழை நிவாரண உதவிக்காக திமுகவின் சார்பில் ஒரு கோடி ரூபாயை அக்கட்சி வழங்கும் என்று அறிவித்தது.

பாதிப்பிற்கான காரணங்கள் குறித்தான கருத்துகள் தொகு

  • முறைப்படுத்தப்படாத நகரமயமாக்கலே சென்னையில் ஏற்பட்ட வெள்ள இடர்களுக்கு காரணமென அறிவியல், சுற்றுப்புற சூழலுக்கான நடுவம் (இந்தியா) கருத்து வெளியிட்டது[20].

பாதிப்பிற்கான காரணங்கள் குறித்தான ஆய்வறிக்கைகள் தொகு

  • நீர்சேமிப்பு நிலங்கள், திறந்தவெளிகள், வெள்ள வடிகால் நிலங்கள் ஆகியவை கட்டிடங்களால் பெருமளவு குறைந்து, சென்னைக்கு பாதிப்புகள் உண்டாகியதாக இந்திய அறிவியற் கழகத்தின் (பெங்களூரு) ஆய்வறிக்கை தெரிவித்தது[21].

தலைமைக் கணக்காயர் அறிக்கை தொகு

2015 திசம்பரில் சென்னையில் ஏற்பட்ட பேரழிவுக்குக் காரணம் “செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இரவோடு இரவாகத் தண்ணீரைத் திறந்துவிட்டதுதான் வெள்ளத்துக்குக் காரணம்” என்பதை தலைமைக் கணக்காயர் மற்றும் தணிக்கையாளரின் (சிஏஜி) 2016 மார்ச் மாதத்த அறிக்கை குறிப்பிட்டது.[22]

இதையும் காண்க தொகு

உசாத்துணை தொகு

வெளியிணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. http://www.thehindu.com/sci-tech/energy-and-environment/chennai-rains-freak-weather-whipped-up-a-perfect-storm/article7955477.ece
  2. "Latest updates: 18 patients die in Chennai hospital". தி இந்து. 5 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "Chennai floods: Over 50,000 houses of low income group damaged". தி இந்து. 8 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 16 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. 4.0 4.1 http://indianexpress.com/article/india/india-news-india/live-chennai-hit-by-heaviest-rains-in-a-century-normal-life-thrown-out-of-gear/
  5. http://www.newindianexpress.com/photos/nation/Heavy-Rains-Left-Chennai-Roads-Submerged/2015/11/13/article3126340.ece#
  6. "Residents stock up for the rainy day". The Hindu (Chennai) (5 திசெம்பர் 2015). http://www.thehindu.com/news/cities/chennai/residents-stock-up-for-the-rainy-day/article7951811.ece?css=print. பார்த்த நாள்: 5 திசெம்பர் 2015. 
  7. "Chennai fuel crisis: Fuel supply disrupted in Tamil Nadu’s rain-hit capital". The Financial Express. Press Trust of India. 4 திசெம்பர் 2015. http://www.financialexpress.com/article/india-news/chennai-fuel-crisis-fuel-supply-disrupted-in-tamil-nadus-chennai-floods/174366/. பார்த்த நாள்: 5 திசெம்பர் 2015. 
  8. "With Chennai airport shut, round trip to Bengaluru crosses Rs 1 lakh". DNA India (Chennai). 5 திசெம்பர் 2015. http://www.dnaindia.com/money/report-with-chennai-airport-shut-round-trip-to-bengaluru-crosses-rs-1-lakh-2152261. பார்த்த நாள்: 5 திசெம்பர் 2015. 
  9. "Airfares up as rail disruptions push people to fly". The Times of India (Chennai). 19 நவம்பர் 2015. http://timesofindia.indiatimes.com/india/Airfares-up-as-rail-disruptions-push-people-to-fly/articleshow/49838831.cms. பார்த்த நாள்: 5 திசெம்பர் 2015. 
  10. "Chennai floods: The Hindu not published for first time since 1878". தி இந்து. 2 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 6 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-09-06. பார்க்கப்பட்ட நாள் 2017-02-16.
  12. http://www.ndtv.com/chennai-news/major-road-caves-in-as-rain-batters-chennai-schools-remain-shut-1249627
  13. "NDRF undertakes most massive flood relief op; rescues 16,000". தி இந்து. 5 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 5 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  14. "Latest updates: MTC rides free till Dec. 8; 600 airlifted from Arakkonam". தி இந்து. 5 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  15. "Stranded residents overjoyed as help comes from the sky". தி இந்து. 17 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2015.
  16. "Army, Air Force deployed for rescuing stranded people". தி இந்து. 17 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2015.
  17. "Boats rescue hapless citizens". தி இந்து. 17 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2015.
  18. "Miscreants damage bunds of Rajakilpakkam, Selaiyur". தி இந்து. 17 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2015.
  19. "Power supply cut off to ensure residents' safety". தி இந்து. 17 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2015.
  20. "Unregulated urbanisation to blame for Chennai flooding: CSE experts". தி இந்து. 5 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  21. "Chennai paid the price for loss of wetlands and open spaces: study". தி இந்து. 12 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  22. "சென்னை வெள்ளப் பாதிப்புக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்!". தலையங்கம். இந்து தமிழ். 19 சூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 20 சூலை 2018.
 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=2015_சென்னை_பேரழிவு&oldid=3924256" இலிருந்து மீள்விக்கப்பட்டது