பேரியம் போரைடு
வேதிச் சேர்மம்
பேரியம் போரைடு (Barium boride) BaB6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். அதிக உருகுநிலை கொண்ட கடினமான பொருளாக இது கருதப்படுகிறது. போரான் படிகங்கள் மீது >750 ° செல்சியசு வெப்பநிலையில் பேரியம் ஆவியை செலுத்துவதன் மூலம் பேரியம் போரைடை உருவாகலாம்:
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பேரியம் போரைடு
| |
வேறு பெயர்கள்
பேரியம் அறுபோரைடு, பேரியம் எக்சாபோரைடு
| |
இனங்காட்டிகள் | |
12046-08-1 | |
InChI
| |
பப்கெம் | 6336903 |
பண்புகள் | |
BaB6 | |
வாய்ப்பாட்டு எடை | 202.193 கி/மோல் |
தோற்றம் | கருப்பு, கனசதுரப் படிகங்கள் |
அடர்த்தி | 4.36 கி/செ.மீ3 |
உருகுநிலை | 2,270 °C (4,120 °F; 2,540 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
- Ba + 6B → BaB6
பேரியம் குளோரைடை போரானுடன் சேர்த்து இரண்டு படிநிலைகளில் வினைபுரியச் செய்வதன் மூலமும் இதை உருவாகலாம். முதலில் 900 °செல்சியசு வெப்பநிலையில் 30 நிமிடங்களும் பின்னர் 1,500 ° செல்சியசு வெப்பநிலையில் 60 நிமிடங்களும் இவ்வினைகள் நிகழ்கின்றன.[1]
பயன்
தொகுபேரியம் போரைடு எதிர்மின் வாய் எலக்ட்ரான் துப்பாக்கிகளில் பயன்படுத்துவதற்கான சேர்மமாகக் கருதப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Ropp, R. C. (2013-01-01), Ropp, R. C. (ed.), "Chapter 6 - Group 13 (B, Al, Ga, In and Tl) Alkaline Earth Compounds", Encyclopedia of the Alkaline Earth Compounds (in ஆங்கிலம்), Amsterdam: Elsevier, pp. 481–635, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-59550-8, பார்க்கப்பட்ட நாள் 2022-08-29