பேரி பேரிசு
பேரி கிளார்க் பேரிசு (Barry Clark Barish, பிறப்பு: சனவரி 27, 1936) என்பவர் அமெரிக்க செயல்முறை இயற்பியலாளரும், நோபல் விருதாளரும் ஆவார். ஈர்ப்பு அலைகளின் ஆய்வில் இவரது பங்களிப்பு பெரிதும் போற்றப்படுகிறது.
பேரி பேரிசு Barry Barish | |
---|---|
பிறப்பு | பேரி கிளார்க் பேரிஷ் சனவரி 27, 1936 ஒமாகா, நெப்ராஸ்கா, ஐக்கிய அமெரிக்கா |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் |
கல்வி | கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) (இளங்கலை, முதுகலை, முனைவர்) |
விருதுகள் | குளோப்சுடெக் நினைவுப் பரிசு (2002) என்றிக்கோ பெர்மி பரிசு (2016) என்றி டிரேப்பர் பரிசு (2017) இயற்பியலுக்கான நோபல் பரிசு (2017) |
2017 இல் இவருக்கு இராய்னர் வெய்சு, கிப் தோர்ன் ஆகியோருடன் இணைந்து "லைகோ உணர்கருவி மற்றும் ஈர்ப்பு அலைகளில் மேற்கொண்ட தீர்மானிக்கத்தகுந்த பங்களிப்புகளுக்காக" இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1][2][3][4]
வாழ்க்கைக் குறிப்பு
தொகுபேரிசு போலந்த்தில் இருந்து ஐக்கிய அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த யூதக் குடும்பம் ஒன்றில் நெப்ராஸ்கா மாநிலத்தில் பிறந்தார்.[5][6][7]
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)யில் 1957 இல் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1962 இல் முனைவர் பட்டம் பெற்றார். 1963 இல் கால்ட்டெக் தொழில்நுட்பக் கழகத்தில் துகள் இயற்பியல் துறையில் பணியாற்றினார். அங்கு அவர் துணைப் பேராசிரியராகவும், இயற்பியல் பேராசிரியராகவும் பணியாற்றினார்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Nobel Prize in Physics 2017". The Nobel Foundation. 3-10-2017. பார்க்கப்பட்ட நாள் 3-10-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ Rincon, Paul; Amos, Jonathan (3-10-2017). "Einstein's waves win Nobel Prize". BBC News. http://www.bbc.co.uk/news/science-environment-41476648. பார்த்த நாள்: 3-10-2017.
- ↑ Overbye, Dennis (3-10-2017). "2017 Nobel Prize in Physics Awarded to LIGO Black Hole Researchers". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2017/10/03/science/nobel-prize-physics.html. பார்த்த நாள்: 3-10-2017.
- ↑ Kaiser, David (3-10-2017). "Learning from Gravitational Waves". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2017/10/03/opinion/gravitational-waves-ligo-funding.html. பார்த்த நாள்: 3-10-2017.
- ↑ https://www.familysearch.org/ark:/61903/1:1:K999-5XC
- ↑ "Interview with Shirley K. Cohen" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2017-10-03.
- ↑ "A Small-Town Jewish Family's Rebuke of Car Maker Henry Ford". பார்க்கப்பட்ட நாள் 3-10-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ https://labcit.ligo.caltech.edu/~BCBAct/BCB_CV0316.pdf
வெளி இணைப்புகள்
தொகு- Barry Barish: The Long Odyssey from Einstein to Gravitational Waves -- Popular Science Lecture, The Royal Swedish Academy of Sciences பரணிடப்பட்டது 2020-10-31 at the வந்தவழி இயந்திரம்
- Barry Barish: From Einstein to Gravitational Waves and Beyond--2016 Tencent WE Summit
- Einstein, Black Holes and Cosmic Chirps - A Lecture by Barry Barish, Fermilab
- Barry Barish: On the Shoulders of Giants, World Science Festival
- Episode 10 Barry Barish discusses gravitational waves, LIGO, and the scientists who made it happen, TheIHMC