லைகோ (LIGO) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் சீரொளி குறுக்கீட்டுமானி ஈர்ப்பலை ஆய்வகம் (Laser Interferometer Gravitational-wave Observatory) ஈர்ப்பு அலைகளை கண்டறிவதற்காக நிறுவப்பட்ட இயற்பியல் சோதனைமுறை அமைப்பாகும். 1992இல் கால்டெக்கின் கிப் தோர்னும் ரோனால்டு திரெவரும் எம்.ஐ.டியின் இரெய்னர் வெய்சும் இணைந்து நிறுவிய லைகோ கூட்டிணைவுத் திட்டத்தில் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம், கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம், மற்றும் பல கல்லூரி, பல்கலைக்கழகங்களின் அறிவியலாளர்கள் பங்கேற்றனர்.[1][2]

சீரொளி குறுக்கீட்டுமானி ஈர்ப்பலை ஆய்வகம் (Laser Interferometer Gravitational-wave Observatory)
லிகோ ஹான்ஃபோர்டு கட்டுப்பாட்டறை
நிறுவனம்லிகோ அறிவியல் இணைவாக்கம்
அமைவுஹான்ஃபோர்டு தளம், வாசிங்டன்
லிவிங்சுட்டன், லூசியானா
ஆள்கூறுகள்46°27′18.52″N 119°24′27.56″W / 46.4551444°N 119.4076556°W / 46.4551444; -119.4076556 (LIGO Hanford Observatory)
30°33′46.42″N 90°46′27.27″W / 30.5628944°N 90.7742417°W / 30.5628944; -90.7742417 (LIGO Livingston Observatory)
அலைநீளம்43–10000 கிமீ
(30–7000 ஏர்ட்சு)
அமைக்கப்பட்ட காலம்1999
முதல் ஒளிஆகத்து 23, 2002
தொலைநோக்கி வகை ஈர்ப்பு - அலை விண்ணாய்வகம்
விட்டம்4000 மீ
இணையத்தளம்http://www.ligo.org/
மாக்-செண்டர் குறுக்கீட்டு விளைவு அளவி

இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள அறிவியலாளர்களையும் ஈர்ப்பு அலை வானியல் தரவுகளையும் லைகோ அறிவியல் கூட்டிணைவு ஒருங்கிணைக்கின்றது. இத்திட்டத்தில் உலகமெங்கிருந்தும் 900 அறிவியலாளர்களும் 44'000 செயற்பாட்டிலிருந்த ஐன்ஸ்டைன்@ஓம் பயனாளர்களும் பங்கேற்றனர்.[3][4]

இத்திட்டம் முப்பரிமாண ஈர்ப்பலை உணர்கருவிகளை இயக்குகின்றது; இத்தகைய கருவிகள் இரண்டு ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்கில் உள்ள வாசிங்டன் மாநிலத்தில் ஹான்ஃபோர்டிலும் மற்றொன்று அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள லூசியானா மாநிலத்தில் லிவிங்சுட்டனிலும் நிறுவப்பட்டுள்ளன. தற்போது இவை மேம்படுத்தப்பட்டு மேம்பட்ட லைகோ (Advanced LIGO) எனப்படுகின்றன.

பெப்ரவரி 11, 2016இல் லிகோ அறிவியல் கூட்டிணைவின் 1012 அறிவியலாளர்களும் இத்தாலியின் விர்கோ குறுக்கீட்டுமானி கூட்டிணைவும் இணைந்து ஈர்ப்பு அலையைக் கண்டறிந்ததை ஆய்வுரையாக வெளியிட்டனர்; 14 செப்டம்பர் 2015 அன்று ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் 09.51க்கு புவியிலிருந்து 1.3 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள இரண்டு ~30 சூரியத் திணிவுள்ள கருந்துளைகள் இணைந்ததால் ஏற்பட்ட சமிக்ஞைகளிலிருந்து ஈர்ப்பு அலைகளைக் கண்டறிந்தனர்.[5][6][7]

லைகோ இந்தியா

தொகு

லைகோ-இந்தியா உலகளாவிய மேம்பட்ட ஈர்ப்பலை ஆய்வகங்களில் ஒன்றை இந்தியாவில் நிறுவுவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டமாகும். இது இந்தியா, அமெரிக்கா அறிவியலாளர்களிடையே இத்திட்டத்தை ஒருங்கிணைக்கும்.[8]

இத்திட்ட முன்மொழிவின்படி ஹான்ஃபோர்டிலுள்ள இரு உணர்கருவிகளில் ஒன்றை இந்தியாவிற்கு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. காந்திநகரிலுள்ள பிளாஸ்மா ஆய்வுக்கழகம் (IPR), புனேயிலுள்ள பல்கலைக்கழகங்களிடையேயான வானியல் மற்றும் வானியற்பியல் மையம் (IUCAA), மற்றும் இந்தூரிலுள்ள ராசா ராமண்ணா மேம்பட்டத் தொழினுட்பத்திற்கான மையம் முதன்மை நிறுவனங்களாகப் பங்கேற்கின்றன. இந்த ஆய்வகபணியின் மூலம் இந்தியா உலகிலேயே ஈர்ப்பலை ஆய்வகம் ஏற்படுத்தும் மூன்றாவது நாடாக திகழும்.[9]

மேற்சான்றுகள்

தொகு
  1. பெர்மி ஆய்வகம் போன்ற ஐக்கிய அமெரிக்காவின் பெரிய திட்டங்கள் பலவற்றிற்கும் வழமையாக ஐக்கிய அமெரிக்காவின் ஆற்றல் துறை நிதி நிதி வழங்கும்.
  2. "LIGO Fact Sheet at NSF". Archived from the original on 2011-10-31. பார்க்கப்பட்ட நாள் 2016-02-13.
  3. "LSC/Virgo Census". myLIGO. பார்க்கப்பட்ட நாள் 28 November 2015.
  4. Castelvecchi, Davide (15 September 2015), Hunt for gravitational waves to resume after massive upgrade: LIGO experiment now has better chance of detecting ripples in space-time, Nature News, பார்க்கப்பட்ட நாள் 12 January 2016
  5. LIGO Scientific Collaboration and Virgo Collaboration, B. P. Abbott (February 11, 2016). "Observation of Gravitational Waves from a Binary Black Hole Merger". Physical Review Letter 116, 061102 (2016). doi:10.1103/PhysRevLett.116.061102. http://journals.aps.org/prl/abstract/10.1103/PhysRevLett.116.061102. பார்த்த நாள்: 2016-02-11. 
  6. Castelvecchi, Davide; Witze, Witze (11 February 2016). "Einstein's gravitational waves found at last". Nature News. doi:10.1038/nature.2016.19361. http://www.nature.com/news/einstein-s-gravitational-waves-found-at-last-1.19361. பார்த்த நாள்: 11 February 2016. 
  7. "Gravitational waves detected 100 years after Einstein's prediction" (PDF). LIGO. February 11, 2016. பார்க்கப்பட்ட நாள் 11 February 2016.
  8. "LIGO-India". www.gw-indigo.org. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. அலைகளை ஆராய உலகிலேயே 3-வதாக இந்தியாவில் லிகோ மையம் தி இந்து தமிழ் 29 பிப்ரவரி 2016

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லைகோ&oldid=3792119" இலிருந்து மீள்விக்கப்பட்டது