பைண்டிங் நீமோ
ஃபைண்டிங் நீமோ (Finding Nemo) 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஆண்ட்ரூ ஸ்டாண்ட்டொன் இயக்கத்தில் வெளிவந்த இது ஒரு 'இயக்கமூட்டிய திரைப்படம்' (Animation movie) ஆகும். பல திரைப்பட நடிகர்கள் இத்திரைப்படக் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபைண்டிங் நீமோ | |
---|---|
இயக்கம் | ஆண்ட்ரூ ஸ்டாண்ட்டொன் லீ உன்க்ரிச் (இணை-இயக்குநர்) |
தயாரிப்பு | கிரஹாம் வால்டர்ஸ் |
கதை | ஆண்ட்ரூ ஸ்டாண்ட்டொன் போப் பீட்டர்சன் டேவிட் ரினோல்ட்ஸ் |
இசை | தோமஸ் நியூமேன் |
நடிப்பு | அலெக்ஸாண்டர் கௌல்ட் அல்பேர்ட் புரூக்ஸ் எலென் டிஜெனியர்ஸ் வில்லியம் டாபோ பிராட் காரெட் அலிசன் ஜானி ஆஸ்டின் பெண்டில்டொன் ஸ்டீபன் ரூட் விக்கி லூவிஸ் ஜோ ரான்ப்ட் நிகோலஸ் பெர்ட் ஆண்ட்ரூ ஸ்டாண்ட்டொன் போப் பீட்டர்சன் எரிக் பானா ப்ரூஸ் பென்ஸ் எலிசபெத் பெர்க்கின்ஸ் |
ஒளிப்பதிவு | சாரோன் கலஹன் ஜெரமி லாஸ்கி |
படத்தொகுப்பு | டேவிட் ஜயான் சால்டர் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் |
வெளியீடு | மே 30, 2003 |
ஓட்டம் | 100 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | ஐஅ$94 மில்லியன் (₹672.3 கோடி) |
மொத்த வருவாய் | Domestic: $339,714,978 உலகளவில்: ஐஅ$864.63 மில்லியன் (₹6,183.5 கோடி) |
முன்னர் | மோன்ஸ்டர்ஸ் இன்க் |
பின்னர் | த இன்கிரடபில்ஸ் |
விருதுகள் | 1 ஆஸ்கார் (சிறந்த , 3 பரிந்துரைப்பு |
வகை
தொகுகதை
தொகுகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
பசிபிக் கடலில் வாழும் மார்லின் என்ற மீன் தனது மனைவியை இழந்த பின்னர், தனது ஒரே மகனான நீமோவை மிகவும் பாதுகாப்பாக வளர்க்கின்றது. தந்தை மீனின் சொற்களைப் பொருட்படுத்தாத நீமோ, தான் வாழும் பகுதியில் இருந்து பல தூரம் கடந்து செல்லும் பொழுது மனிதர்களால் பிடிக்கப்படுகிறது. இதைக் கண்ட மார்லின் தனது மகனை மீட்க அந்த படகினை துரத்திச் செல்கிறது.
நீமோ, சிட்னி துறைமுகம் அருகே ஒரு பல் வைத்தியரின் மீன் தொட்டியில் அடைக்கப்படுகின்றது. அங்கு வாழும் பிற மீன்களுடன் நட்புக் கொள்கிறது. இதற்கிடையே, நீமோவைத் தேடிச் செல்லும் மார்லினுக்கு, செல்லும் வழியில் பலரும் உதவி செய்கின்றனர். டோரி என்னும் மீனுடன் சிநேகிதம் கொள்ளும் மார்லின் தனது மகனைத் தேடி சிட்னி வரை செல்கின்றது.
தனது தந்தை தன்னை மீட்க சிட்னி வருவதை அறியும் நீமோவும், மீன் தொட்டியிலிருந்து தப்பிக்க முற்படுகிறது. நீமோவால் தப்பிக்க முடிந்ததா, தந்தையும் மகனும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே மீதிக் கதை.
விருதுகள்
தொகுஇத்திரைப்படம் 2003-ஆம் ஆண்டிற்கான 'சிறந்த இயக்கமூட்டிய திரைப்படம்' ('Best Animated Feature Film') என்ற ஆஸ்கார் விருதினைப் பெற்றது.[1] இது தவிர 32 வேறு விருதுகளையும் பெற்றுள்ளது.[2]
துணுக்குகள்
தொகு- ஜனவரி 2005 வரையில், 22 மில்லியன் டி.வி.டிக்கள் (DVD) விற்று, உலகிலேயே மிகவும் விற்பனையான டி.வி.டி என்ற பெருமை இப்படத்தையே சாரும்.[3]