பொட்டாசியம் தயோசல்பேட்டு
பொட்டாசியம் தயோசல்பேட்டு (Potassium thiosulfate) என்பது K2S2O3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இந்த உப்பு ஒற்றைநீரேற்று, இருநீரேற்று மற்றும் ஐந்துநீரேற்று போன்ற பல நீரேற்றுகளை உருவாக்கும். இவை அனைத்தும் வெள்ளை அல்லது நிறமற்ற திடப்பொருளாகும்.[1] பொட்டாசியம் தயோசல்பேட்டு உரமாக பயன்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
10294-66-3 | |
ChemSpider | 55421 |
EC number | 233-666-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 61501 |
| |
UNII | UK1TD58L5O |
பண்புகள் | |
K2S2O3 | |
வாய்ப்பாட்டு எடை | 190.32 கி/மோல் |
தோற்றம் | வெண்மையான திண்மம் |
அடர்த்தி | 2.37 கி/செ.மீ3 |
96.1 கி/100 மில்லிலிட்டர் (0 °C) 155.4 கி/100 மில்லிலிட்டர் (20 °C) 165 கி/100 மில்லிலிட்டர் (25 °செ) 175.7 கி/100 மில்லிலிட்டர் (30 °செ) 204.7 கி/100 மில்லிலிட்டர்(40 °செ) 215.2 கி/100 மில்லிலிட்டர் (50 °செ) 238.3 கி/100 மில்லிலிட்டர் (60 °செ) 255.2 கி/100 மில்லிலிட்டர் (70 °செ) 293.1 கி/100 மில்லிலிட்டர் (80 °செ) 312 கி/100 மில்லிலிட்டர் (90 °செ)[1] | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319 | |
P264, P280, P302+352, P305+351+338, P321, P332+313, P337+313, P362 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பொட்டாசியம் சல்பைட்டு; பொட்டாசியம் சல்பேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் தயோசல்பேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுதயோசல்பேட்டு உப்புகள் தனிம கந்தகத்துடன் சல்பைட்டு அயனியின் எதிர்வினையாலும், சல்பைடுகளின் முழுமையற்ற ஆக்சிசனேற்றத்தாலும் உற்பத்தி செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பொட்டாசியம் ஐதராக்சைடுடன் அம்மோனியம் ஐதராக்சைடு, கந்தக டை ஆக்சைடு மற்றும் தனிம கந்தகம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் இந்த உப்பு தயாரிக்கப்படுகிறது.[2] தயோசல்பேட்டுகள் நடுநிலை அல்லது காரக் கரைசல்களில் நிலையாக இருக்கும், ஆனால் அமிலக் கரைசல்களில் இவை நிலைப்புத் தன்மையுடன் இருக்காது. ஏனெனில் கந்தக டை ஆக்சைடு மற்றும் கந்தகமாக விகிதவியலுக்கு ஒவ்வா முறையில் சிதைகிறது.[3]
- S2O32− + 2 H+ → SO2 + "S" + H2O
இந்த பண்பின் காரணமாக, இது உலோகங்களை, குறிப்பாக இரும்பை கொடுக்கிணைத்தல் மூலம் பிணைக்க முடியும்.[2]
வினைகள்
தொகுதயோசல்பேட்டு அயோடினுடன் வினைபுரிந்து டெட்ராதயோணேட்டைக் கொடுக்கிறது. இந்த நிலையில் பொட்டாசியம் தயோசல்பேட்டு அயோடினுடன் வினைபுரிந்து பொட்டாசியம் டெட்ராதயோணேட்டு மற்றும் பொட்டாசியம் அயோடைடை உருவாக்குகிறது:
- 2 K2S2O3 + I2 → K2S4O6 + 2 KI
தயோசல்பேட்டு மற்ற உலோகங்களுடன் சேர்ந்து பல்வேறு அணைவுச் சேர்மங்களை விரிவாக உருவாக்குகிறது. வெள்ளி அடிப்படையிலான புகைப்படம் எடுத்தல் சகாப்தத்தில், தயோசல்பேட்டு ஒரு "நிறுத்தும்" வினையாக்கியாக பெரிய அளவில் நுகரப்பட்டது. வெள்ளி ஆலைடுகளைக் கரைக்கும் தயோசல்பேட்டின் திறனை இந்தப் பயன்பாடு பயன்படுத்துகிறது. தங்கம் (சோடியம் தயோசல்பேட்டு) மற்றும் வெள்ளியை அவற்றின் தாதுக்களில் இருந்து சயனைடுக்கு குறைவான நச்சுத்தன்மையுள்ள மாற்றாக பிரித்தெடுக்க தயோசல்பேட்டு பயன்படுத்தப்படுகிறது.[3]
பயன்கள்
தொகுநைட்ரேட்டாக்கத்தை தாமதப்படுத்தும் இதன் திறன் காரணமாக, தனியாக அல்லது யூரியா மற்றும்/அல்லது யூரியா அம்மோனியம் நைட்ரேட்டுடன்[4] சேர்த்து பொட்டாசியம் தயோசல்பேட்டு பொதுவாக உரமாகப் பயன்படுத்தப்படுகிறது.[2] இதனால் நைட்ரசு ஆக்சைடு வெளியேற்றத்தைக் குறைக்கும் திறனும் கிடைக்கிறது.[5] இது மண்ணிலிருந்து வெளியாகும் புகைப் பொருட்களின் அளவையும் குறைக்கும்.[6] தனியாகப் பயன்படுத்தினால், தாவர நச்சுத்தன்மை அறிகுறிகளை ஏற்படுத்தும் திறன் காரணமாக இது மிகவும் நீர்த்த கரைசலில் பயன்படுத்தப்படுகிறது. கந்தக அமிலத்தை உற்பத்தி செய்வதற்காக தனிம கந்தகம் ஆக்சிசனேற்றம் செய்யப்படுவதால் இந்த நச்சுத்தன்மை ஏற்படுகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Atherton Seidell (1919). Solubilities of inorganic and organic compounds c. 2 (in English). D. Van Nostrand Company. p. 568.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 2.0 2.1 2.2 Sulewski, Gavin; Thompson, Michael; Mikkelsen, Robert; Norton, Robert; Scott, T., eds. (2020). Improving Potassium Recommendations for Agricultural Crops (Ebook) (in English). Springer International Publishing. p. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-030-59197-7. பார்க்கப்பட்ட நாள் 6 October 2021.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 3.0 3.1 Barbera, J. J.; Metzger, A.; Wolf, M. (2005), "Sulfites, Thiosulfates, and Dithionites", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a25_477
- ↑ 4.0 4.1 Western Plant Health Association (2018). Barlow, Dave; Pier, Jerome (eds.). Western Fertilizer Handbook (Ebook) (in English) (Third Horticulture ed.). Waveland Press. p. 186. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4786-3884-1. பார்க்கப்பட்ட நாள் 6 October 2021.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Zejiang Cai; Suduan Gao; Minggang Xu; Bradley D Hanson (2017). "Evaluation of potassium thiosulfate as a nitrification inhibitor to reduce nitrous oxide emissions" (in English). Science of the Total Environment 618: 243–249. doi:10.1016/j.scitotenv.2017.10.274. பப்மெட்:29128773.
- ↑ Ruijun Qin; Suduan Gao; Jason A McDonald; Husein Ajwa; Shachar Shem-Tov; David A Sullivan (2008). "Effect of plastic tarps over raised-beds and potassium thiosulfate in furrows on chloropicrin emissions from drip fumigated fields" (in English). Chemosphere 72 (4): 558–563. doi:10.1016/j.chemosphere.2008.03.023. பப்மெட்:18440581. Bibcode: 2008Chmsp..72..558Q.