பொட்டாசியம் நான்கையோடோபிளாட்டினேட்டு
பொட்டாசியம் நான்கையோடோபிளாட்டினேட்டு (Potassium tetraiodoplatinate) என்பது K2PtI4·(H2O)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நான்கையோடோபிளாட்டினேட்டின் பிளாட்டினம் உப்பாகக் கருதப்படும் இச்சேர்மம் பிளாட்டினம்(II) இன் சதுரத்தள ஒருங்கிணைவுச் சேர்மமாகவும் கருதப்படுகிறது. தண்ணீரிலிருந்து ஓர் இருநீரேற்றாக இச்சேர்மம் படிகமாகிறது.[1] ஆனால் இதனுடன் தொடர்புடைய குளோரைடும் (K2PtCl4) புரோமைடும் (K2PtBr4) நீரிலி உப்புகளாகவே படிகமாகின்றன.
இனங்காட்டிகள் | |
---|---|
14708-56-6 நீரிலி | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12864171 |
| |
பண்புகள் | |
H4I4K2O2Pt | |
வாய்ப்பாட்டு எடை | 816.93 g·mol−1 |
தோற்றம் | கருப்பு நிறத் திண்மம் |
அடர்த்தி | 4.31 கி/செ.மீ3[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பொட்டாசியம் நான்கையோடோபிளாட்டினேட்டு அமீன்கள் மற்றும் அமோனியாவுடன் வினைபுரிந்து நடுவுநிலைமை வழிப்பெறுதியான PtI2(RNH2)2 சேர்மத்தைக் கொடுக்கிறது.[2] பொட்டாசியம் அயோடைடும் பொட்டாசியம் டெட்ராகுளோரோபிளாட்டினேட்டும் இடப்பெயர்ச்சி வினையில் ஈடுபடுவதால் பொட்டாசியம் நான்கையோடோபிளாட்டினேட்டு உருவாகிறது:[3]
- K2PtCl4 + 4 KI → K2PtI4 + 4 KCl
சிசுபிளாட்டின் என்ற புற்றுநோய் எதிர்ப்பு மருந்தை தயாரிப்பதற்கு உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமாக இது பயன்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Olsson, Lars-Fride; Oskarsson, Åke; Larsen, Sine; Teuber, Lene; Lucanska, Brigitta; Krätsmar-Smogrovic, Juraj; Valent, Aladár; Alminger, Tomas et al. (1989). "The Crystal Structure of Potassium Tetraiodoplatinate(II) Dihydrate". Acta Chemica Scandinavica 43: 811–812. doi:10.3891/acta.chem.scand.43-0811.
- ↑ Rochon, Fernande D.; Buculei, Viorel (2004). "Multinuclear NMR Study and Crystal Structures of Complexes of the Types cis- and trans-Pt(amine)2I2". Inorganica Chimica Acta 357 (8): 2218–2230. doi:10.1016/j.ica.2003.10.039.
- ↑ Olsson, Lars-Fride (1989). "Dipotassium Tetraiodoplatinate(II) Dihydrate". Inorganic Syntheses. Vol. 25. pp. 98–100. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132562.ch21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-61874-4.