பொததாங் அடுக்குத் தூபி

பொததாங் அடுக்குத் தூபி மியான்மரில் உள்ள யாங்கன் நகரில், ஆற்றங்கரை அருகில் அமைந்துள்ள பிரபலமான பெளத்த ஆலயம். பொதாதங் என்றும் அழைக்கப்படுகிறது. பொததாங் என்றால் ஆயிரம் வீரர்கள் என்பது பொருளாகும். இந்தத் தூபி 2500 ஆண்டுகளுக்கு முன்னர் மோன் இனத்தவரால் சவேடகன் அடுக்குத் தூபி அமைக்கப்பட்ட அதே காலத்தில் அமைக்கப்பட்டது. இந்தத் தூபி மோன் மொழியில் கயிக்-டி-அட் என அறியப்படுகிறது. தூபியின் உள்ளே வெற்றிடமாக உள்ளது மேலும் கெளதம் புத்தரின் புனித முடிகள் இங்கு இருப்பதால் புனிதத் தலமாகவும் உள்ளது. [1]

பொததாங் அடுக்குத் தூபி
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்யாங்கன்
புவியியல் ஆள்கூறுகள்16°46′06″N 96°10′19″E / 16.768449°N 96.171973°E / 16.768449; 96.171973
சமயம்தேரவாத பௌத்தம்
உட்பகுதி
உட்பகுதி

இரண்டாம் உலகப் போரின் போது இந்த பொததாங் தூபி முழுவதுமாக அழிக்கப்பட்டது. போருக்கு பின்னர் மீண்டும் உருவாக்கப்பட்டது.

வரலாறு தொகு

பர்மிய பாரம்பரியத்தின் கூற்றுப்படி, இந்த இடத்தில் உள்ள ஒரு மலை மீது, ஈராயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட புத்தரின் சிலையை வரவேற்பதற்காக ஆயிரம் ஆயிரம் இராணுவ வீரர்கள், தற்போது தூபி உள்ள இடத்தில் அணிவகுத்து புத்தரின் சிலைக்கு மரியாதை செய்தனர். தூபிக் கட்டிடத்தின் பண்டைய வரலாற்றைப் பற்றிய ஒரு புத்தகம் பௌத்த மன்னர் சிஹாதிபா தனது அமைச்சர்களில் ஒருவரிடம் புத்தரின் முடியும் மற்றும் சிலைகளும் கொடுத்தார். அந்த அமைச்சர், அவரது நற்குணத்திற்கும் விசுவாசத்திற்கும் புகழ்பெற்றவர். அவர் ஒரு புகழ்பெற்ற மதத் தலைவரிடம் ஆலோசனைப் பெற்றார். அந்த மதகுருவின் ஆலோசனைப்படி, சவேடகன் அடுக்குத் தூபி இருந்து சுமார் ஆயிரம் டார்ஸ் (7,000 முழம் - சுமார் 10000 அடிகள்) தொலைவில், தென்கிழக்குத் திசையில் புனிதமான புத்தரின் நினைவுச்சின்னங்களை தற்போது இருக்கும் இடத்தில் வைக்கப்பட்டு பொததாங் தூபி எழுப்பப்பட்டது. [2]

இரண்டாம் உலகப் போர் தொகு

நவம்பர் 8, 1943 அன்று RAF யாங்கன் அருகில் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்ட போது தூபி முற்றிலும் அழிக்கப்பட்டது, தூபி இடிந்து சிதைந்து காணப்பட்டது. [2]

மறுசீரமைப்பு தொகு

4 சனவரி 1948 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலிருந்து மியான்மர் சுதந்திரம் பெற்ற நாளில் தூபி மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியது: அப்போது செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியின் ஒரு பகுதியாக, ஒரு இரகசிய அறை 20' x 20' அளவிலும் மற்றும் 6 அடி உயரத்திற்கும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அறை பார்ப்பதற்கு ஒரு பானையை தலை கீழாக கவிழ்த்து வைத்தது போன்று இருந்தது. இந்த புதையல் அறையின் மிக மையத்தில் 23 அங்குலம் விட்டம் மற்றும் 39 அங்குலம் உயரமும் கொண்ட ஒரு தூபி வடிவத்தில் ஒரு அற்புதமான கல்லால் ஆன கலசம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கலசத்தை சுற்றிலும் நாட் (மனித ஆன்மா) உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. அங்கு காவலாளிகளாக செயல்படுவதற்காக நாட் உருவங்கள் வெளிப்படையாக வைக்கப்பட்டன. இந்தக் கல் தூபி பல நூற்றாண்டுகளாக தண்ணீரில் மூழ்கி இருந்திருக்கிறது. இந்தத் தூபி-வடிவ கல் அமர்ந்திருந்த அறையில் பலவிதமான பொக்கிஷங்கள் காணப்பட்டன: விலையுயர்ந்த கற்கள், ஆபரணங்கள், நகைகள், மண்பாண்ட சிற்பங்கள் மற்றும் தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் கல் உருவங்கள் என மொத்தம் எழ நூறு வகையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மண்பாண்ட சிற்பங்கள் புத்தரின் வாழ்க்கையை சித்தரிப்பதாக உள்ளது.

இரகசிய அறையில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மண்பாண்ட சிற்பங்களில் ஒன்று புத்தரின் திருஉருவம் கொண்டிருக்கிறது, இது காலத்தாலும் மற்றும் ஈரப்பதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இந்தச் சிற்பம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் தென் இந்தியாவில் இருந்து வந்த பிராமணிய எழுத்துக்கள் நெருக்கமாக இருக்கும் எழுத்துகள் அந்தச் சிலையின் பின்புறம் பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Botataung Pagoda". Myanmar Travel Information Committee. Archived from the original on January 1, 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-02-05.
  2. 2.0 2.1 Ohn Ghine (1953). Shrines of Burma: The Botataung Pagoda. 1 இம் மூலத்தில் இருந்து 2007-11-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071113002844/http://www.triplegem.plus.com/botataun.htm. பார்த்த நாள்: 2009-02-12. 

வெளிப்புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொததாங்_அடுக்குத்_தூபி&oldid=3587742" இலிருந்து மீள்விக்கப்பட்டது