பொன்குன்னம் தாமோதரன்

நாடகாசிரியர்

பொங்குன்னம் தாமோதரன் (Ponkunnam Damodaran) ((1915-1994)) 1940 முதல் 1970 வரை தீவிரமாக செயல்பட்ட இந்தியக் கவிஞரும், புதின எழுத்தாளரும், நாடகாசிரியரும் மற்றும் பொதுவுடைமை ஆதரவாளரும் ஆவார். நோட்டம் என்ற மலையாளப் படத்தில் இடம்பெற்ற "பச்சப்பனம்தத்தே"... என்ற பாடலை இவர் எழுதினார். 2006 ஆம் ஆண்டில் இந்த பாடலுக்காக இவருக்கு மரணத்திற்குப் பிறகு கேரள மாநில விருது (சிறந்த பாடலாசிரியர்) வழங்கப்பட்டது. கேரளாவின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள பொன்குன்னத்தில் பிறந்தார். தாமோதரன், சர்பம் கோத்துன்னா சத்தியங்கள், ஆதர்சம் தீச்சுலாயனு ஆகிய நூல்களை எழுதினார். மத்தமேதாயாலும் மனுஷ்யன், நந்தவனமும் ராஷ்டிர சில்பியும் உள்ளிட்ட நாடகங்களையும் எழுதியுள்ளார். செருகாடு கோவிந்த பிசிரோடி எழுதிய நம்மலோனு என்ற நாடகத்தில் வயலார் ராமவர்மாவுடன் இணைந்து ஆறு பாடல்களை எழுதினார்.[1]

பொன்குன்னம் தாமோதரன்
இயற்பெயர்எம். என். தாமோதரன்
பிற பெயர்கள்பொன்குன்னம் தாமோதரன்
பிறப்பு25 நவம்பர் 1915
பொன்குன்னம் , பிரித்தானிய இந்தியா
இறப்பு24 நவம்பர் 1994(1994-11-24) (அகவை 78)
தொழில்(கள்)பாடலாசிரியர், கவிஞர், ஆசிரியர், புதின எழுத்தாளர்

மேற்கோள்கள்

தொகு
  1. Thekkek, Thampy Antony (2020-06-27). Devil Mountain (in ஆங்கிலம்). Notion Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-64899-636-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்குன்னம்_தாமோதரன்&oldid=4112054" இலிருந்து மீள்விக்கப்பட்டது