செருகாடு
செருகாடு கோவிந்த பிசரோடி (Cherukad Govinda Pisharodi) (26 ஆகத்து 1914-28 அக்டோபர் 1976), பொதுவாக செருகாடு என்று அழைக்கப்படும் இவர், மலையாள மொழி நாடகாசிரியரும், புதின எழுத்தாளரும், கவிஞரும் அரசியல் ஆர்வலரும் ஆவார். இவர் இந்தியாவின் கேரள மாநிலத்தில் பொதுவுடைமை இயக்கத்துடன் தொடர்புடையவர்.[1]
செருகாடு Cherukad | |
---|---|
பிறப்பு | செருகாடு கோவிந்த பிசரோடி 26 ஆகத்து 1914 செம்மலச்சேரி, பெரிந்தல்மண்ணை, சென்னை மாநிலம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 28 அக்டோபர் 1976 | (அகவை 62)
தொழில் | நாடகாசிரியர்,அரசியல் ஆர்வலர், ஆசிரியர் |
மொழி | மலையாளம் |
தேசியம் | இந்தியா |
வகை | நாடகம், புதினம், சிறுகதை, கவிதை, கட்டுரை |
இலக்கிய இயக்கம் | முற்போக்கு எழுத்தாளர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஜீவிதப்பதா, முத்தாசி, மன்னிந்தே மரிள் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்திய அகாதமி விருது, கேரள சாகித்திய அகாதமி விருது |
வாழ்க்கை வரலாறு.
தொகுபெரிந்தல்மண்ணை வட்டத்தில் உள்ள செம்மலசேரியில் கிழேட்டில் பிசராத் கருணாகர பிசரோடி மற்றும் செருகாட்டில் பிசரோடி நாராயணி பிசரோடியார் ஆகியோருக்கு மகனாக செருகாடு பிறந்தார்.[1] குரு கோபாலன் எழுதச்சனிடம் சமசுகிருதத்தில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்த பிறகு, செம்மளா நிதியுதவி மாப்பிளா பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார்.[1] பின்னர் வித்வான் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பட்டாம்பி சமசுகிருதக் கல்லூரியில் விரிவுரையாளராக சேருவதற்கு முன்பு பல பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றினார்.[1]
1936இல், கிழேட்டில் பிசராத் லட்சுமி பிசரோடியரை மணந்தார்.[1] இவர்களது மகன் கே. பி. மோகனனும் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார்.[1]
இலக்கியம்
தொகுஐம்பதுகள் மற்றும் அறுபதுகளின் மலையாள இலக்கியத்தை வரையறுப்பதில் செருகாட்டின் அரசியல் ரீதியான எழுத்துக்கள் செல்வாக்கு செலுத்தியது. இவரது அரசியல் வாழ்க்கை கேரளாவின் முன்னணி அரசியல்வாதிகள் மற்றும் தேசபக்தர்களின் வாழ்க்கையுடன் பிணைக்கப்பட்டுள்ளது.[2] கேரளாவின் முற்போக்கு இலக்கிய இயக்கமான தேசாபிமானி ஆய்வு வட்டத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும், புரோகமன கலா சாகித்ய சங்கத்தின் முன்னோடியாகவும் இருந்தார்.[1] ஜீவிதப்பதா, தாராவதிதம், மனுஷ்யபந்தங்கள், நாமல் ஓன்னு, மனுஷ்ய இருதயங்கள், ஜன்மபூமி, தேவலோகம், மன்னிந்தே மரிள் (மண்ணின் அடிப்பகுதியில்) முத்தாசி மற்றும் சனிதசா போன்றவை இவரது முக்கியமான படைப்புகளில் சில.[1] இவரது சுயசரிதையான ஜீவிதப்பதா (1974) 1975இல் கேரள சாகித்ய அகாடமி விருதையும், 1977இல் கேந்திர சாகித்ய அகாதமி விருதையும் பெற்றது.[3]
இறப்பு
தொகுசெருகாடு 1976 அக்டோபர் 28 அன்று இறந்தார்.[1] செருகாடு விருது என்ற இலக்கிய விருது இவரது நினைவாக வருடந்தோறும் வழங்கப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "ചെറുകാട് ഗോവിന്ദപ്പിഷാരഡി" [Cherukad Govinda Pisharodi] (in மலையாளம்). Kerala Sahitya Akademi.
{{cite web}}
: Missing or empty|url=
(help) - ↑ "Remembering Mundassery, Cherukad". தி இந்து (கோழிக்கோடு). 26 October 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/remembering-mundassery-cherukad/article4033477.ece.
- ↑ Amaresh Datta (1988). Encyclopaedia of Indian Literature. Vol. 2. p. 1846.
- ↑ "Cherukad Award presented". தி இந்து. 30 October 2005 இம் மூலத்தில் இருந்து 9 November 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061109005110/http://www.hindu.com/2005/10/30/stories/2005103008610300.htm.
வெளி இணைப்புகள்
தொகு- Article by C Radhakrishnan
- Public Relations Department, கேரள அரசு. Retrieved 11 April 2011. [1]
- Deshabhimani Weekly special issue on the birth centenary of Cherukad