பொன்னியின் செல்வன் (வெளிவராத திரைப்படம்)
பொன்னியின் செல்வன் ஒரு வெளியிடப்படாத வரலாற்றுப் பின்னணி கொண்ட தமிழ்த் திரைப்படமாகும். ம. கோ. இராமச்சந்திரன் இப்படத்தைத் தயாரித்து, இயக்கி 1959 ஆம் ஆண்டு வெளியிடவிருந்தார். இது கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினத்தின் திரைப்பட வடிவமாகும்.[1]
பொன்னியின் செல்வன் | |
---|---|
விளம்பரம் | |
இயக்கம் | ம. கோ. இராமச்சந்திரன் |
தயாரிப்பு | ம. கோ. இராமச்சந்திரன் |
மூலக்கதை | பொன்னியின் செல்வன் படைத்தவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி |
இசை | எஸ். எம். சுப்பையா |
நடிப்பு | ம. கோ. இராமச்சந்திரன் வைஜயந்திமாலா ஜெமினி கணேசன் பத்மினி |
வெளியீடு | முடக்கப்பட்டது (1959) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
தொகுபார்க்க: பொன்னியின் செல்வன்
நடிகர்கள்
தொகு- ம. கோ. இராமச்சந்திரன் - வல்லவரையன் வந்தியத்தேவன்
- ஜெமினி கணேசன் - ராஜராஜ சோழன் (அருள்மொழிவர்மன்)
- வைஜயந்திமாலா - குந்தவைப்பிராட்டியார்
- பத்மினி - வானதி
- சாவித்திரி - பூங்குழலி
- பி. சரோஜாதேவி - மணிமேகலை
- எம். என். ராஜம் - நந்தினி
- சித்தூர் வி. நாகையா - சுந்தர சோழர்
- டி. எஸ். பாலையா - ஆழ்வார்க்கடியான்
- எம். என். நம்பியார் - சின்னப் பழுவேட்டரையர்
- ஓ. ஏ. கே. தேவர் - ஆதித்த கரிகாலன்
தயாரிப்பு
தொகுஇத் திரைப்படத்தைத் தயாரிப்பதாக எம். ஜி. ஆர். 1958 ஆம் ஆண்டு அறிவித்தார். கதையின் திரைப்படத்துக்கான உரிமையை ₹10,000 க்கு வாங்கினார்.[1]
முடக்கம்
தொகு1958ஆம் ஆண்டு சீர்காழியில் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது எம். ஜி. ஆருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அது குணமடைய ஆறு மாதங்கள் அவர் ஓய்வில் இருக்கவேண்டி வந்தது. அதனால் மலைநாட்டு இளவரசன், சிரிக்கும் சிலை, சிலம்புக் குகை, தூங்காதே தம்பி தூங்காதே போன்ற மற்றப் படங்களுடன் பொன்னியின் செல்வன் தயாரிப்பும் முடக்கப்பட்டது.
சான்றாதாரங்கள்
தொகு- ↑ 1.0 1.1 ஏ. ஸ்ரீவத்சன் (2011-10-19). "Age hardly withers charm of Ponniyin Selvan". தி இந்து. Archived from the original on 2012-09-11. பார்க்கப்பட்ட நாள் 2016-11-04.