பொம்பெய் (திரைப்படம்)

பொம்பெய் இது ஒரு 2014ம் ஆண்டு தமிழில் வெளியான ஆங்கிலமொழித் திரைப்படம். இந்த திரைப்படத்தை பால் டபிள்யூ.எஸ்.ஆன்டர்சன் இயக்கி உள்ளார். கிட் ஹாரிங்டன், கேரி அன்னே மோஸ், எமிலி ப்ரௌனிங், அக்பஜே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை கோன்ச்டடின் பிலிம், இம்பாக்ட் பிக்சர்ஸ், டான் கார்மொடி ப்ரோடக்ஸன் போன்ற நிறுவனங்கள் விநியோகம் செய்கின்றன. இத்திரைப்படம் பிப்ரவரி 18 ஆம் திகதி புவெனஸ் ஐரிஸிலும், பிப்ரவரி 21 ஆம் திகதி கனடாவிலும், பிப்ரவரி 27 ஆம் திகதி செருமனியிலும் வெளியானது.

பொம்பெய்
Pompeii
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்பால் டபிள்யூ.எஸ்.ஆன்டர்சன்
தயாரிப்புபால் டபிள்யூ.எஸ்.ஆன்டர்சன்
ஜெர்மி போல்ட்
டான் கர்மோடி
ரொபேர்ட் குல்செர்
திரைக்கதை
  • ஜானெட் ஸ்காட் பட்ச்ளீர்
    லீ பட்ச்ளீர்
    மைக்கில் ரொபேர்ட் ஜோன்சன்
இசைகிளிண்டன் சார்ட்டர்
நடிப்புகிட் ஹாரிங்டன்
கேரி அன்னே மோஸ்
எமிலி ப்ரௌனிங்
அடேவலே அகினுவா-அக்பாஜே
ஜெசிக்கா லூகாஸ்
சற்றேத் ஹாரிஸ்
கிபிர் சுத்ர்லாந்
ஒளிப்பதிவுகிளென் மேக்பெர்சன்
படத்தொகுப்புமைக்கேல் கான்ராய்
கலையகம்
  • கோன்ச்டடின் பிலிம்
  • இம்பாக்ட் பிக்சர்ஸ்
  • டான் கார்மொடி தயாரிப்பு
விநியோகம்
வெளியீடுபெப்ரவரி 18, 2014 (2014 -02-18)(புவெனஸ் ஐரிஸ்)
பெப்ரவரி 21, 2014 (கனடா)
பெப்ரவரி 27, 2014 (ஜேர்மனி)
ஓட்டம்104 நிமிடங்கள்
நாடுஜேர்மனி
கனடா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$80[1]–100 மில்லியன்[2]
மொத்த வருவாய்$84,035,575[2]

கதைச் சுருக்கம்

தொகு

கி.பி. 62ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் ரோமானியர்களால் தனிப்பட்ட இனம் ஒன்று முழுமையாக அழிக்கப்படுகிறது. அந்த இனத்தில் மிஞ்சும் ஒரேயொருவனான ‘மிலோ’ (கிட் ஹாரிங்டன்) அடிமையாக வளர்க்கப்பட்டு மிகப்பெரிய ‘க்ளாடியேட்டர்’ வீரனாக உருவாகிறான். ரோமானியர்களால் புதிதாக உருவாக்கப்படும் பொம்பெயி நகரவிழா கொண்டாட்டத்திற்காக அடிமைகள் அனைவரும் அந்த நகருக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

அங்கே வரும் நாயகன் மிலோவுக்கும் பொம்பெயி நகரை உருவாக்கிய தலைமை நிர்வாகியின் மகள் கேஸியாவுக்கும் (எமிலி ப்ரெளிங்) காதல் மலர்கிறது. ஆனால் ரோமானிய செனட்டரும் கேஸியாவை அடைய நினைக்கிறான். அடிமைகளுக்கும் ரோமானியர்களுக்கும் மிகப்பெரிய மோதல் ஒன்று நடக்கிறது. அப்பொழுது பொம்பெயி நகரின் தூரத்தில் இருக்கும் எரிமலை ஒன்று வெடித்துச்சிதறுகிறது. மொத்த நகரமும் கலவரப் பூமியாகிறது. அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை.

நடிகர்கள்

தொகு
  • கிட் ஹாரிங்டன்
  • கேரி அன்னே மோஸ்
  • எமிலி ப்ரௌனிங்
  • அக்பஜே

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Ryan Faughnder (February 20, 2014). "'Lego Movie' to block newcomers 'Pompeii' and '3 Days to Kill'". Los Angeles Times. to the tune of $80 million
  2. 2.0 2.1 "Pompeii (2014)". பாக்சு ஆபிசு மோசோ. February 21, 2014. பார்க்கப்பட்ட நாள் April 22, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொம்பெய்_(திரைப்படம்)&oldid=2905935" இலிருந்து மீள்விக்கப்பட்டது