பொய்த்தோற்ற உறுப்பு

(பொய்த்தோற்ற உறுப்புகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பொய்த்தோற்ற உறுப்பு, மாய உறுப்பு அல்லது பூத உறுப்பு (phantom limb) என்பது உடலில் துண்டிக்கப்பட்ட அல்லது விடுபட்ட உறுப்பு இன்னும் இணைந்து உள்ளது போன்ற உணர்வு ஆகும். இது பொரும்பாலும் சிகிச்சைக்கு இசைந்து கொடுக்காத ஒரு நாட்பட்ட நிலையாகும்.[1] தனது துண்டுபட்ட தொடையின் அசைவுகளின் போது அங்குள்ள உணர்ச்சி இழைகளின் வெட்டுபட்ட முனைகள் தூண்டப்படுகையில் இல்லாத உறுப்பிலிருந்து உணர்வு எழுவது போல் நோயாளி உணர்வார். சில நேரங்களில் இல்லாத இந்த உறுப்பில் வலியைக் கூட நோயாளி உணரலாம். உறுப்புகளை இழந்த நபர்களில் தோராயமாக 80%–100% பேர் துண்டிக்கப்பட்ட உறுப்புகளில் வலி உணர்வுகளை அனுபவிக்கின்றனர். இருப்பினும் இவர்களில் ஒரு சிறிய சதவீதம் மட்டுமே வலிமிகுந்த பொய்த்தோற்ற உறுப்பு உணர்வை (பொய்த்தோற்ற வலி) அனுபவிக்கின்றனர். ஒப்பீட்டளவில் உறுப்புகள் நீக்கப்பட்ட நபர்களில் பொதுவாகக் காணப்படும் இந்த உணர்வுகள் பெரும்பாலும் சிகிச்சையின்றி இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் தானாகவே சரியாகிவிடும். பொய்த்தோற்ற உறுப்பு வலி (phantom limb pain [PLP]) குறித்தும் அதற்கான சிகிச்சை முறைகள் குறித்துமான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.[2]

பொய்த்தோற்ற உறுப்பு
இடது முன்னங்காலை இழந்த ஒரு பூனை பல மாதங்களுக்குப் பிறகும் அவ்வுறுப்பு இன்னும் உள்ளதாக எண்ணி அதைக் கொண்டு மணலைத் தோண்ட முயலும் காட்சி
சிறப்புநரம்பியல்

அறிகுறிகள்

தொகு

உடலுறுப்பு நீக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் (80–100%) பொய்த்தோற்ற உறுப்பு உணர்வினை அனுபவிக்கிறார்கள். அவர்களில் சிலருக்கு இது ஒரு வலியற்ற உணர்வாகவே இருக்கும்.[3] இந்நபர்கள் இப்பூத உறுப்பினை தங்கள் உடலின் ஒரு பகுதியாகவே உணர்வர்.[4]

பூத உறுப்பினை உணரும் நபர்கள் சில சமயங்களில் சைகை செய்வது, அரிப்பு, இழுப்பு, அல்லது பொருட்களை எடுக்க முயற்சிப்பது போன்ற உணர்வுகளை அடைவதுண்டு.[5] தங்களது விடுபட்டுப் போன உறுப்பு பெரும்பாலும் குறுகியதாக உள்ளது போலும் சிதைந்தும் வலிமிகுந்த நிலையில் இருப்பது போலும் அவர்கள் உணரவர். சமயத்தில் மன அழுத்தம், பதற்றம், வானிலை மாற்றங்கள் போன்றவற்றால் அவ்வலியானது மோசமாக உணரப்படும்.[6] தீவிர வானிலை காரணமாக — குறிப்பாக உறைபனி வெப்பநிலைக்குக் கீழே — இவ்வுணர்வு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. பூத உறுப்பு வலி பொதுவாக இடைப்பட்டதாக இருப்பதென்றாலும் சில சமயங்களில் தொடர்ந்து உணரப்படும். காலப்போக்கில் இவற்றின் தீவிரம் பொதுவாகக் குறைந்து விடும்.[6]

பூத உறுப்புகளின் மீதான அடக்கப்பட்ட நினைவுகள் நீக்கப்பட்ட பிறகும் அவ்வுறுப்புகளின் மீதான உணர்வுகளுக்கான காரணமாக அமைகின்றன. குறிப்பாக, நோயாளிகள் தங்களது விரல் நகங்கள் தங்கள் உள்ளங்கையில் புதைவது போன்ற உணர்வினை தங்களது பூத உறுப்புகளில் வலியாக உணர்வதாக பல அறிக்கைகள் வெளிவந்துள்ளன. நீக்கப்பட்ட உறுப்பின் காரணமாக நரம்பு மண்டலத்தின் இயக்க நரம்பணு வெளியீடு பெருக்கப்படும் காரணத்தால் நோயாளி அந்நரம்பணுத் தகவல்களின் மேலோட்டத்தை வலியைப் போல் உணர்கின்றனர். நீக்கப்பட்ட உறுப்பு முன்னர் இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் கையை மடக்குவதற்கான நரம்பியல் இயக்கக் கட்டளைகளும் நகங்களை உள்ளங்கையை அழுத்தும் உணர்வு நரம்பணுத் தகவல்களும் உறுப்பு நீக்கப்பட்ட பின்னர் அடக்கப்பட்ட நினைவுகளாக மாறிவிடுகின்றன. மூளையில் முந்தைய நரம்பியல் இணைப்புகள் காரணமாக இந்த நினைவுகள் அழியாமல் இருந்து விடுகின்றன.[7]

தரவுகள்

தொகு
  1. Sembulingam, K. (11 July 2023). Essentials of medical physiology (9th ed.). K. Sembulingam and prema Sembulingam. p. 717. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5696-326-9.
  2. Manchikanti, Laxmaiah; Singh, Vijay; Boswell, Mark V. (2007-01-01), Waldman, Steven D.; Bloch, Joseph I. (eds.), "chapter 28 - Phantom Pain Syndromes", Pain Management, W.B. Saunders, pp. 304–315, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/b978-0-7216-0334-6.50032-7, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7216-0334-6, பார்க்கப்பட்ட நாள் 2019-12-09
  3. Chahine, Lama; Kanazi, Ghassan (2007). "Phantom limb syndrome: A review". MEJ Anesth 19 (2): 345–55. https://pdfs.semanticscholar.org/0f8d/2b80b5c20ed0e21076de4b5ac48327ca05d2.pdf. பார்த்த நாள்: July 20, 2019. 
  4. Melzack, R. (1992). "Phantom limbs". Scientific American 266 (4): 120–126. doi:10.1038/scientificamerican0492-120. பப்மெட்:1566028. Bibcode: 1992SciAm.266d.120M. 
  5. "Pain Perception in Phantom Limb". flipper.diff.org. பார்க்கப்பட்ட நாள் 2022-12-15.
  6. 6.0 6.1 Nikolajsen, L., Jensen, T. S. (2006). McMahon S, Koltzenburg M (eds.). Wall & Melzack's Textbook of Pain (5th ed.). Elsevier. pp. 961–971.
  7. Ramachandran, V. S. (1998-11-29). "Consciousness and body image: lessons from phantom limbs, Capgras syndrome and pain asymbolia". Philosophical Transactions of the Royal Society of London. Series B: Biological Sciences 353 (1377): 1851–1859. doi:10.1098/rstb.1998.0337. பன்னாட்டுத் தர தொடர் எண்:0962-8436. பப்மெட்:9854257. 

மேலும் படிக்க

தொகு
  • Hanyu-Deutmeyer AA, Cascella M, Varacallo M. Phantom Limb Pain. 2023 Aug 4. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2024 Jan–. PMID: 28846343.

வெளி இணைப்புகள்

தொகு
வகைப்பாடு
வெளி இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொய்த்தோற்ற_உறுப்பு&oldid=4141939" இலிருந்து மீள்விக்கப்பட்டது