பொலோனியம்(IV) சல்பேட்டு

வேதிச் சேர்மம்

பொலோனியம்(IV) சல்பேட்டு (Polonium(IV) sulfate) என்பது Po(SO4)2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொலோனியம் மற்றும் சல்பேட்டு அயனிகள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. நீரற்ற சேர்மமெனில் அடர் ஊதா நிற படிக திடப்பொருளாக உருவாகிறது. ஒரு நீரேற்று சேர்மமெனில் நிறமற்ற அல்லது வெள்ளை நிற படிகங்களாக உருவாகிறது. பொலோனியம்(IV) சல்பேட்டு நீரில் கரையக்கூடியதாகும்.

பொலோனியம்(IV) சல்பேட்டு
இனங்காட்டிகள்
66256-57-3 Y
InChI
  • InChI=1S/2H2O4S.Po/c2*1-5(2,3)4;/h2*(H2,1,2,3,4);/q;;+4/p-4
    Key: MIJPRCZICLLYHP-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
  • [O-]S(=O)(=O)[O-].[O-]S(=O)(=O)[O-].[Po+4]
பண்புகள்
Po(SO4)2
வாய்ப்பாட்டு எடை 401.11 g·mol−1 (நீரிலி)
தோற்றம் அடர் ஊதா நிற படிக திடப்பொருள் (நீரிலி)[1]
வெள்ளை அல்லது நிறமற்ற படிகங்கள் (நீரேற்று)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பொலோனியம் டெட்ராகுளோரைடு அல்லது நீரேற்றப்பட்ட பொலோனியம் டையாக்சைடு[1] கந்தக அமிலத்தை சேர்த்து வினை புரியச் செய்தால் பொலோனியம்(IV) சல்பேட்டு உருவாகும்.[2] பொலோனியம்(IV) சல்பேட்டை அமிலக் கரைசல்களில் ஐதராக்சிலமீன் மூலம் PoSO4 ஆகக் குறைக்கலாம்.[3] இது 550 °செல்சியசு வெப்பநிலையில் பொலோனியம் டையாக்சைடாகச் சிதைகிறது. கதிரியக்கத்தன்மை கொண்டிருப்பதால் இச்சேர்மம் சிதைவடையும் போது வாயுக்களை உருவாக்குகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Susan A Brown, Paul L Brown. The Aqueous Chemistry of Polonium and the Practical Application of its Thermochemistry. Elsevier, 2019.
  2. 2.0 2.1 Bagnall, K. W.; Freeman, J. H. (1956). "878. The sulphates and selenate of polonium". Journal of the Chemical Society (Resumed): 4579. doi:10.1039/jr9560004579. பன்னாட்டுத் தர தொடர் எண்:0368-1769. 
  3. 无机化学丛书 第五卷 氧 硫 硒分族. 科学出版社. pp 424-425.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொலோனியம்(IV)_சல்பேட்டு&oldid=3888971" இலிருந்து மீள்விக்கப்பட்டது