பொலோனியம் சல்பைடு
பொலோனியம் சல்பைடு (Polonium sulfide) என்பது PoS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. பொலோனியமும் கந்தகமும் சேர்ந்து இந்த கனிமச் சேர்மம் உருவாகிறது.[3] கருப்பு நிறப் படிகங்களாக உருவாகும் பொலோனியம் சல்பைடு கதிரியக்கப் பண்பு கொண்டதாகும்.[4]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பொலோனியம் மோனோசல்பைடு[1]
| |
இனங்காட்டிகள் | |
19268-62-3 | |
பண்புகள் | |
PoS | |
வாய்ப்பாட்டு எடை | 241.07 கி/மோல் |
தோற்றம் | கருப்பு நிறப் படிகங்கள் |
உருகுநிலை | 500 °C (932 °F; 773 K) |
கரையாது[2] | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகு1. பொலோனியம்(II) உப்புகளின் அமைலக் கரைசலில் ஐதரசன் சல்பைடு வாயுவைச் செலுத்தினால் பொலோனியம் சல்பைடு உருவாகிறது:[5][6]
2. அமோனியம் சல்பைடின் நீரியக் கரைசலுடன் பொலோனியம்(II) ஐதராக்சைடை சேர்த்து வினைபுரியச் செய்தாலும் பொலோனியம் சல்பைடு கிடைக்கிறது:
பண்புகள்
தொகுஇயற்பியல் பண்புகள்
தொகுகருப்பு நிறப் படிகங்களாக உருவாகும் பொலோனியம் சல்பைடு தண்ணீரில், எத்தனால், அசிட்டோன், தொலுயீன், அமோனியம் சல்பைடு போன்ற கரைப்பான்களில் கரையாது.
வேதிப்பண்புகள்
தொகுபொலோனியம் சல்பைடு வலுவான குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. குளோரின் நீர், புரோமின் நீர், சோடியம் ஐப்போகுளோரைட்டு மற்றும் இராச திராவகம் போன்ற வேதிப் பொருள்களால் ஆக்சிசனேற்றம் செய்யப்படுகிறது. பொலோனியம் சல்பைடு வெப்பமாக்கினால் சிதைகிறது. வெற்றிடத்தில் 274.85°செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கப்படும் போது தனிம பொலோனியம், தனிம கந்தகமாக சிதைகிறது:[7]
அடர் அமிலங்களுடன் கீழ்கண்டவாறு வினையில் ஈடுபடுகிறது:
மேற்கோள்கள்
தொகு- ↑ "polonium | Definition, Symbol, Properties, Uses, & Facts". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 November 2021.
- ↑ Schweitzer, George K.; Pesterfield, Lester L. (14 January 2010). The Aqueous Chemistry of the Elements (in ஆங்கிலம்). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 243. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-539335-4.
- ↑ Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3779. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 2 November 2021.
- ↑ Sergeevа, V. I.; Stepanova, N. Yu.; Savenko, A. V.; Sapozhnikov, Yu. A. (2015). "Use of Iron Sulfide for Removing Polonium from Liquid Radioactive Waste". Radiochemistry 57 (5): 534–536. doi:10.1134/S1066362215050148. https://istina.msu.ru/download/10702342/1gdyYu:rGRfA8vK1MsZtub1PT_rZq-gIYY/. பார்த்த நாள்: 2 November 2021.
- ↑ Wiberg, Egon; Holleman, A. F.; Wiberg, Nils (2001). Inorganic Chemistry (in ஆங்கிலம்). Academic Press. p. 594. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-352651-9. பார்க்கப்பட்ட நாள் 2 November 2021.
- ↑ Considine, Douglas M.; Considine, Glenn D. (11 December 2013). Van Nostrand's Scientific Encyclopedia (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 2503. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4757-6918-0. பார்க்கப்பட்ட நாள் 2 November 2021.
- ↑ Brown, Susan A.; Brown, Paul L. (25 September 2019). The Aqueous Chemistry of Polonium and the Practical Application of its Thermochemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-819309-9. பார்க்கப்பட்ட நாள் 2 November 2021.