போகன்ட் பலகைத் தேவாலயம்

போகன்ட் பலகைத் தேவாலயம் (Borgund Stave Church) என்பது நோர்வேயின் போகன்ட் எனும் கிராமத்தில் அமைந்துள்ள ஓர் பலகைத் தேவாலயம் ஆகும். இது மூன்று நடுக்கூடங்களுடன் கொண்ட பலகைத் தேவாலயமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது நோர்வேயின் 28 அழிந்து வரும் பலகைத் தேவாலயங்களில் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்ட ஒன்றாகும். தற்போது இது தேவாலயமாக அன்றி அருங்காட்சியகமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

போகன்ட் பலகைத் தேவாலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்போகன்ட், நோர்வே
புவியியல் ஆள்கூறுகள்61°02′50″N 7°48′44″E / 61.04724°N 7.81224°E / 61.04724; 7.81224
சமயம்நோர்வே திருச்சபை
செயற்பாட்டு நிலைஅருங்காட்சியகம்
இணையத்
தளம்
Fortidsminneforeningen Webpage

போகன்ட் பலகைத் தேவாலயம் 1180 முதல் 1250 வரையான காலப்பகுதியில் கட்டப்பட்டது. இதன் சுவர்கள் மரப்பலகைகளைக் கொண்டு ஆக்கப்பட்டுள்ளது. நான்கு மூலைக் கம்பங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு அடித்தள கல் மீது வைக்கப்பட்டுள்ளது.[1]

உசாத்துணை தொகு

  1. "Borgund Stave Church". Fortidsminneforeningen (The Society for the Preservation of Norwegian Ancient Monuments). Archived from the original on 17 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 1 November 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புக்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Borgund stavkirke
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போகன்ட்_பலகைத்_தேவாலயம்&oldid=3565732" இலிருந்து மீள்விக்கப்பட்டது