போகிலால் காந்தி

போகிலால் சுனிலால் காந்தி (Pogilal Chunial Gandhi) (26 சனவரி 1911-10 சூன் 2001) இந்தியாவின் குசராத்து மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அறிஞர், கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஆர்வலர் ஆவார். குசராத்தி மொழி இலக்கிய-சமூக-அரசியல் இதழான விஸ்வமானவ் என்ற இதழை இவர் தொகுத்தார். லியோ டால்ஸ்டாய், ஜோசப் ஸ்டாலின், சி. ராஜகோபாலாச்சாரி, சுபாஷ் சந்திரபோஸ், ரோமன் ரோலண்ட், துர்காராம் மேத்தா மற்றும் நர்மத் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் வாழ்க்கை வரலாறுகளை இவர் எழுதினார். ஆங்கிலம் மற்றும் பெங்காலி மொழிகளில் இருந்து குஜராத்தி மொழியில் பல படைப்புகளை மொழிபெயர்த்தார். தனது ஆரம்ப ஆண்டுகளில், இவர் பொதுவுடைமை கோட்பாட்டின் செல்வாக்கின் கீழ் வந்து, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தீவிர உறுப்பினராக ஆனார்.

போகிலால் குனிலால் காந்தி
பிறப்பு(1911-01-26)26 சனவரி 1911
மோதசா, குசராத்து, இந்தியா
இறப்பு10 சூன் 2001(2001-06-10) (அகவை 90)
வடோதரா, குசராத்து, இந்தியா
தொழில்
  • அறிஞர்
  • கவிஞர்
  • விமர்சகர்
  • மொழிபெயர்ப்பாளர்
  • விடுதலைப் போராட்ட ஆர்வலர்
மொழிகுஜராத்தி
தேசியம்இந்தியர்
கல்வி நிலையம்குஜராத் வித்யாபீடம்

வாழ்க்கை வரலாறு

தொகு

போகிலால் காந்தி இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள மோதசா என்ற நகரில் 26 சனவரி 1911 அன்று பிறந்தார். 1926 ஆம் ஆண்டில் பரூச்சிலிருந்து பதின்ம வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அகமதாபாத்தில் உள்ள குஜராத் வித்யாபீடத்தில் பட்டம் பெற்றார்.

இவர் தனது தொடக்க கால வாழ்க்கையில் பொதுவுடைமைக் கோட்பாட்டின் செல்வாக்கின் கீழ் வந்து, தனது மனைவி சுபத்ரா காந்தியுடன் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தீவிர உறுப்பினராக ஆனார். அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் 1928 முதல் 1951 வரை பல முறை கைது செய்யப்பட்டார்.[1] இவர் சூன் 10,2001 அன்று குஜராத்தின் வடோதராவில் காலமானார்.

படைப்புகள்

தொகு

இவரின் புனைப்பெயர் உப்வாசி இவரது கவிதைகளின் தொகுப்பான சாதனா 1943 ஆம் ஆண்டில் உமாசங்கர் ஜோஷி முன்னுரையுடன் வெளியிடப்பட்டது. சாதனாவின் கவிதைகள் பிரணயா (காதல்) ஜான்கனா (நீண்ட காலம்) மற்றும் சாதனா (தியானம்) என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவர் தனது இலக்கிய விமர்சனம் மற்றும் புத்தக மதிப்புரைகளை மிதாக்ஷர் (சுருக்கமாக 1970) இல் வெளியிட்டார். பரஜித் பிரேம் (1957) மற்றும் லதா (1967) ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டார்.[2]

இவர் ஆங்கிலம் மற்றும் பெங்காலி மொழிகளில் இருந்து பல படைப்புகளை மொழிபெயர்த்தார். மாக்சிம் கோர்க்கியின் தாயை குஜராத்தி மொழியில் மொழிபெயர்த்தார்.

லியோ டால்ஸ்டாய் ஜீவன்சங்கரம், ஜோசப் ஸ்டாலின் யுகபுருஷ் ஸ்டாலின், சி. ராஜகோபாலாச்சாரி ராஜகோபாலாச்சாரியாக சுபாஷ் சந்திரபோஸ்ஃ சுபாஷ்சந்திரா, ரோமைன் ரோலண்ட்ஃ மஹாமனவ் ரோமைன் ரோலாண்ட், துர்காராம் மேத்தா ஆத்ய சுதாரக் மஹேதாஜி துர்காரம், நர்மத் நவ்யுக் நோ பிரஹாரி ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை இவர் எழுதினார்.

2011 ஆம் ஆண்டில் இவரின் நூற்றாண்டு விழாவில் போகிலால் காந்தி ஜன்மாஷதாப்தி கிரந்தா என்ற நினைவுத் தொகுப்பு வெளியிடப்பட்டது, இது பிரகாஷ் என். ஷா, ராமன் சோனி மற்றும் ராஜேந்திர படேல் ஆகியோரால் தொகுக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Gandhi, Bhogilal Chunilal". Encyclopaedia of Indian Literature: Devraj to Jyoti 2. (1988). New Delhi: Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1194-0. 
  2. "ગાંધી, ભોગીલાલ ચુનીલાલ 'ઉપવાસી'". Gujarati Vishwakosh. 
  3. "ભોગીલાલ ગાંધી જન્મ શતાબ્દી ગ્રંથ : પુસ્તક પરિચય". Opinion Magazine (in குஜராத்தி). 13 January 2017. Archived from the original on 13 February 2022. பார்க்கப்பட்ட நாள் 13 February 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போகிலால்_காந்தி&oldid=3960913" இலிருந்து மீள்விக்கப்பட்டது