போஜஸ்

பாரசீக அதிகாரி மற்றும் இராணுவ தளபதி

போஜஸ் (Boges) என்பவர் ஒரு பாரசீக அதிகாரி மற்றும் இராணுவத் தளபதி ஆவார். இவர் பேரரசர் முதலாம் செர்கஸ் ( r. கிமு 486–465) மன்னரின் கீழ் திரேசில் உள்ள இயோனின் ஆளுநராக ( ஹைபார்ச்சோஸ் ) பணியாற்றினார். [1] [2] [3] எரோடோடசின் கூற்றின்ப்படி, பிளாட்டீயா போர் மற்றும் மைக்கேல் போர்களில் பாரசீகம் தோல்வியுற்றதைத் தொடர்ந்து, 476/5 இல் ஏதெனியர்கள் படையானது சிமோன் (மில்டியாடீசின் மகன்) தலைமையில் இயோனை முற்றுகையிட்டபோது போஜஸ் இயோனைக் கைவிட்டு வெளியேற மறுத்தார். [1] [4] [5] ஒருவேளை இவர் நகரத்தைக் கைவிட்டு, கிரேக்கர்களிடன் சரணடைந்து பாதுகாப்பாக வெளியேறி இருக்கலாம். ஆனால் எதிரிக்கு பணியும் அவமானத்தை அடையக்கூடாது என்று கருதியதால், கடைசி வரை கோட்டையை காத்து இருக்க முடிவு செய்தார். [1] [4] முற்றுகை நீடித்து வந்த நிலையில் இயோனில் சேகரிப்பில் இருந்த தானியங்கள் தீர்ந்து மேலும் தாக்குப்பிடிக்க முடியாது என்ற நிலை ஏற்ப்பட்டது. அதனால் போஜஸ் ஒரு பெரிய தீயை எழுப்பி, தன் மனைவி, குழந்தைகள், காமக்கிழத்திகள், வேலையாட்கள் போன்றோரை கொன்று அதில் வீசினார். [1] [4] பின்னர் இவர் இயோனின் கருவூலத்தில் சேமித்து வைத்திருந்த வெள்ளி, தங்கக் கட்டிகள் என செல்வம் அனைத்தையும் ஸ்ட்ரூமா ஆற்றில் வீசினார். [1] [4] பின்னர் இவரும் தீயில் பாய்ந்தார். [1] [4] போஜசின் வீரம் மற்றும் விசுவாசத்தை பேரரசர் செர்கசால் மிகவும் பாராட்டினார். [1] மேலும் அதை எரோடோடஸ் கூட ஒப்புக்கொண்டார். [3] கி.மு. ஐந்தாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் எரோடோடஸ் தனது இஸ்டரிஸ் என்ற நூலில், போஜசி்ன் செயல்களுக்காக பாரசீகர்களால் அவர் மறக்கப்படாமல் பாராட்டப்பட்டுவந்தார். [1] [1] பேரரசிற்குள் உயிரோடு இருந்த போஜசின் பிள்ளைகளும் முதலாம் செர்க்சால் பெரிதும் கௌரவிக்கப்பட்டனர்.

இயோனில் உள்ள பண்டைய பாரசீக கோட்டை (இடது) மற்றும் ஸ்ட்ரூமா ஆற்றின் முகத்துவாரம் (வலது), என்னியா ஹோடோயிலிருந்து (ஆம்பிபோலிஸ்) தோற்றம்.

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=போஜஸ்&oldid=3397925" இலிருந்து மீள்விக்கப்பட்டது