போனிலி கோங்மென்
போனிலி கோங்மென் (Bonily Khongmen)(25 சூன் 1912 - 17 மார்ச் 2007) என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் 1952-ல் அசாமின் தன்னாட்சி மாவட்ட மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முதலாவது மக்களவை உறுப்பினராக இருந்தார். அசாம் சட்டசபையில் துணைச் சபாநாயகராகவும் இருந்துள்ளார்.[2][3][4][5]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்
தொகுகோங்மென் வெல்ஷ் சேவை பெண்கள் உயர்நிலைப் பள்ளி, சில்லாங்கிலும், கல்கத்தாவில் உள்ள மறைமாவட்டக் கல்லூரியிலும் படித்தார்.[6] 1932 மற்றும் 1946க்கு இடையில், கோலாகாட் பெண்கள் பள்ளி (1932-33), அசாமியப் பெண்கள் பள்ளி, சில்லாங் (1935-1940), மற்றும் சீமாட்டி ரீட் பள்ளி, சில்லாங் (1940-1946) ஆகியவற்றின் தலைமையாசிரியையாகக் கல்விப் பணியாற்றியுள்ளார்.[6]
அரசியல் வாழ்க்கை
தொகு1946-ல், அசாம் சட்டமன்றத்திற்கான மாகாணத் தேர்தல்களில் கோங்மென் பங்கேற்று, அப்போது அசாமின் ஒரு பகுதியாக இருந்த சில்லாங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[7] இதைத்தொடர்ந்து சட்டசபை துணைச் சபாநாயகராகவும் தேர்வு செய்யப்பட்டார். துணைச் சபாநாயகர் பதவிக்கு வந்த முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார், கோங்மென்.[8] கோங்மென் 1951ஆம் ஆண்டு முதல் மக்களவைத் தேர்தலில் அசாமின் தன்னாட்சி மாவட்டத் தொகுதியில் போட்டியிட்டார்.[9] இந்த தேர்தலில் 54% வாக்குகளைப் பெற்று, 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்த கே. ஜெ. டி. வில்சன் ரீடை தோற்கடித்தார். [9]
பிற பணி
தொகுகோங்மென் முதலாவது மக்களவை உறுப்பினராகப் பணியாற்றிய பிறகு, அசாம் பொதுப் பணி சேவை தேர்வாணைய முதல் பெண் தலைவராக பணியாற்றினார்.[10]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுகோங்மென் வயலின் வாசித்தல், நூற்பு மற்றும் துணிகளை நெசவு செய்தல், புத்தகங்கள் சேகரிப்பு, தோட்டம், வாசிப்பு மற்றும் பின்னல் ஆகியவற்றில் ஆர்வம் காட்டினார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kabon Neli (Khongmen) Timungpi: the first woman from Northeast India to be a Member of Parliament (M.P.)[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Name of Deputy Speakers of Assam Legislative Assembly since 1937 . http://assamassembly.gov.in/dyspeaker-list.html(2012-08-13) பரணிடப்பட்டது 13 சூன் 2015 at the வந்தவழி இயந்திரம். Retrieved on 2012-08-13.
- ↑ 1st Lok Sabha Assam (2012-08-13). Retrieved on 2012-08-13. பரணிடப்பட்டது 4 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Woman MP of first Parliament passes away (2007-03-18) . Retrieved on 2012-08-13.
- ↑ Khongmen, first woman MP from NE, passes away (2007-03-18) . Retrieved on 2012-08-13.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 6.0 6.1 6.2 "Members Bioprofile". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2017-07-29.
- ↑ Nag, Sajal (2007). Making of the Indian union: merger of princely states and excluded areas. Akansha Publishing House. pp. 177. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788183701105.
- ↑ Proceedings of North East India History Association (Volume 21). 2000. p. 203.
- ↑ 9.0 9.1 Statistical Report on General Elections, 1951 to the First Lok Sabha. Election Commission of India. p. 68.
- ↑ Hazarika, Niru (1979). Public Service Commissions: A Study. Leeladevi Publications. p. 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780391018471.