போனி கேப்ரியல்
ஆர் போனி நோலா கேப்ரியல் (R'Bonney Nola Gabriel) (பிறப்பு: மார்ச் 20, 1994) ஒரு அமெரிக்க அழகுப் போட்டியின் அணிவகுப்பு வடிவழகி ஆவார். இவர் பிரபஞ்ச அழகி 2022 பட்டத்தை வென்றார். அமெரிக்காவிலிருந்து பட்டத்தை வென்ற ஒன்பதாவது போட்டியாளர் ஆனார். முன்னதாக, நெவாடாவின் ரெனோவில் நடைபெற்ற அமெரிக்க அழகி 2022 (மிஸ் யுஎஸ்ஏ) போட்டியில் வெற்றி பெற்றவர்.
ஆர்'போனி கேப்ரியேல் | |
---|---|
பிறப்பு | ஆர்'போனி நோலா கேப்ரியேல் மார்ச்சு 20, 1994 ஹியூஸ்டன், டெக்சாசு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
கல்வி | வடக்கு டெக்சாசு பல்கலைக்கழகம் (இளங்கலை ஆடை வடிவமைப்பு) |
பணி |
|
உயரம் | 1.70 m (5 அடி 7 அங்)[சான்று தேவை] |
அழகுப் போட்டி வாகையாளர் | |
பட்டம் |
|
தலைமுடி வண்ணம் | பழுப்பு[சான்று தேவை] |
விழிமணி வண்ணம் | Hazel[சான்று தேவை] |
முக்கிய போட்டி(கள்) |
|
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுகேப்ரியல் டெக்சாஸின் ஹியூஸ்டனில் பிலிப்பைன்ஸ் தந்தை ரெமிஜியோ போன்சன் "ஆர். பான்" கேப்ரியல் மற்றும் அமெரிக்க தாய் டானா வாக்கர் ஆகியோருக்குப் பிறந்தார். இவருக்கு மூன்று மூத்த சகோதரர்கள் உள்ளனர். இவரது தந்தை பிலிப்பைன்சில் பிறந்தவர் மற்றும் மணிலாவைச் சேர்ந்தவர். 25 வயதில் வாஷிங்டன் மாநிலத்திற்கு குடிபெயர்ந்தார். இவரது தாயார் டெக்சாஸின் பியூமண்ட் நகரைச் சேர்ந்தவர். [1] கேப்ரியல் நார்த் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் ஆடை வடிவமைப்புத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். [2] [3] இவர் இப்போது[எப்போது?] சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆடைகளை உருவாக்கும் வடிவமைப்பாளராகவும், விளம்பர வடிவழகியாகவும் பணியாற்றுகிறார். [1]
காட்சி அணிவகுப்பு
தொகுஇவர் கெமா அமெரிக்க அழகி 2020 போட்டியில் கலந்து கொண்டதே இ்வ்வாறான போட்டிக்கான இவரது முதல் பயணமாகும். அங்கு இவர் முதல் 5 இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இடம் பிடித்தார். [4] இவர் டெகசாசு அமெரிக்க அழகி 2021 போட்டியில் ஹாரிஸ் கவுண்டி அழகியாக போட்டியிட்டார் மற்றும் மெக்அலனின் விக்டோரியா ஹினோஜோசாவிடம் முதல் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.[சான்று தேவை]
இவர் டெக்சாசு அமெரிக்க அழகி 2022 பட்டத்தை வென்றார் மற்றும் அமெரிக்க அழகி 2022 இல் டெக்சாஸை பிரதிநிதித்துவப்படுத்தினார். [5] [6] இப்போட்டியில் இவர் அமெரிக்க அழகி 2022 ஆக முடிசூட்டப்பட்டார், பிலிப்பைன்ஸ் வம்சாவளியின் முதல் அமெரிக்க அழகி ஆனார்.[7] [8]
பிரபஞ்ச அழகி 2022
தொகுஅமெரிக்க அழகி 2022 ஆக போட்டியில் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தினார். கடந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற இந்தியாவின் ஹர்னாஷ் சந்து அவர்களால் கிரீடம் சூட்டப்பட்டார். இவரது வெற்றி, 2012-ஆம் ஆண்டில் பிரபஞ்ச அழகி ஒலிவியா கல்போவுக்குப் பிறகு, ஐக்கிய அமெரிக்க நாடுகளிலிருந்து பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் பிரதிநிதி என்ற பெருமையையும் பெற்றார். [9] [10] [11]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Maines, Don (23 September 2022). "How R'Bonney Gabriel, first Filipina American to win Miss Texas, is readying for shot at Miss USA". Houston Chronicle. பார்க்கப்பட்ட நாள் 4 October 2022.
- ↑ Quintana, Anna (3 October 2022). "Miss USA 2022 Is R'Bonney Gabriel — Here Is What You Need to Know About the Texas Beauty". Distractify. பார்க்கப்பட்ட நாள் 4 October 2022.
- ↑ "Fashion Design alumna R'Bonney Gabriel wins Miss USA 2022". UNT COLLEGE OF VISUAL ARTS AND DESIGN CVAD News & Views. பார்க்கப்பட்ட நாள் 15 January 2023.
- ↑ Maines, Don (31 July 2020). "Clear Falls cheerleader wins Miss Kemah Teen". Houston Chronicle. பார்க்கப்பட்ட நாள் 4 October 2022.
- ↑ "For the first time, Texas represented by Asian American women in Miss USA and Miss America pageants". ABC News. Good Morning America. பார்க்கப்பட்ட நாள் 2022-10-04.
- ↑ Diaz, John (July 4, 2022). "First Filipina crowned Miss Texas USA". KHOU-TV. பார்க்கப்பட்ட நாள் July 4, 2022.
- ↑ "Averie Bishop and R'Bonney Gabriel - win Miss USA, Miss America pageant". ManipurSana. 4 October 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-10-04.
- ↑ "Fil-Am beauty queen crowned Miss USA 2022". Manila Bulletin. 4 October 2022. பார்க்கப்பட்ட நாள் 4 October 2022.
- ↑ "The moment you've been waiting for… The #71stMISSUNIVERSE Competition is heading to… NEW ORLEANS, LOUISIANA! 🇺🇸". இன்ஸ்ட்டாகிராம்.
- ↑ Bracamonte, Earl (2022-09-19). "Miss Universe 2022 reveals date, venue; confirms moms, wives can join". The Philippine Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-19.
- ↑ "Miss USA 2022 Winner: R'Bonney Gabriel — Miss Texas Wins". TVLine. October 4, 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-10-04.