போர்க்கப்பல் பத்தியோம்கின்
போர்க்கப்பல் பத்தியோம்கின் (Battleship Potemkin; உருசியம்: Бронено́сец «Потёмкин», பிரனினோசெத்சு பத்தியோம்கின்) என்பது 1925ஆம் ஆண்டு வெளிவந்த சோவியத்து நாட்டு பேசாத திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை செர்கீ ஐசென்ஸ்டைன் இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படத்தை மோஸ்பிலிம் தயாரித்து இருந்தது. 1905ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கலகத்தின் நாடக வடிவமாக இந்தத் திரைப்படம் உருவானது. அந்நிகழ்வின்போது உருசியப் போர்க்கப்பலான பத்தியோம்கின்னில் இருந்த குழுவினர் தங்களது அதிகாரிகளுக்கு எதிராகக் கலகம் செய்தனர்.
போர்க்கப்பல் பத்தியோம்கின் | |
---|---|
![]() அசல் சோவியத் வெளியீட்டுச் சுவரொட்டி | |
இயக்கம் | செர்கீ ஐசென்ஸ்டைன் |
வெளியீடு | திசம்பர் 21, 1925(சோவியத் ஒன்றியம்) |
ஓட்டம் | 1:15 மணி நேரம் |
நாடு | சோவியத் ஒன்றியம் |
மொழி |
|
1958 ஆம் ஆண்டு நடைபெற்ற புரூசெல்ஸ் உலகக் கண்காட்சியில் இந்தத் திரைப்படம் அதுவரை வெளிவந்த திரைப்படங்களிலேயே சிறந்த திரைப்படம் எனப் பெயரிடப்பட்டது.[1][2][3] 2012ஆம் ஆண்டு பிரித்தானிய திரைப்பட நிறுவனமானது எக்காலத்திலும் வெளிவந்த திரைப்படங்களில் 11வது சிறந்த திரைப்படமாக இத்திரைப்படத்தைத் தரவரிசைப்படுத்தியது.[4]
மேற்கோள்கள்தொகு
- ↑ Snider, Eric (23 November 2010). "What's the Big Deal?: Battleship Potemkin (1925)". MTV News. எம் டிவி. 23 May 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 23 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Ebert, Roger. "Battleship Potemkin". 22 November 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 November 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Top Films of All-Time". Filmsite. 23 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The 50 Greatest Films of All Time". British Film Institute. Sight & Sound. September 2012. 1 January 2018 அன்று பார்க்கப்பட்டது.