போர்க் கலை (நூல்)

போர்க்கலை (The Art of War) என்பது கிமு 5 ஆம் நூற்றாண்டு அளவில் சீன போரியல் மேதை சுன் த்சு என்பவரால் எழுதப்பட்ட நூல் ஆகும். இந்நூல் போர்க் கலையில் பயன்படும் மூல உபாயங்களையும், உத்திகளையும் சிறப்பாக விவரிக்கிறது. உலகின் முக்கிய போர் நுட்ப நூல்களில் இதுவும் ஒன்று. இது "சுன் த்சு" காலத்தில் முற்றுப் பெறவில்லை. தொடர்ந்து வந்த போரிடும் நாடுகள் காலத்திலேயே [1] முற்றுப்பெற்றது என்பது சில அறிஞர்களின் கருத்து. இது 13 பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொரு பிரிவும் போரின் வெவ்வேறு அம்சங்களைக் குறித்து எழுதப்பட்டுள்ளது.

போர்க்கலை (The Art of War)
மூங்கில் கீற்றுக்களில் எழுதப்பட்ட போர்க்கலை நூல். சான்டோங்கில் லின்யி பகுதியில் உள்ள யிங்க் மலையில் 1972 ஆம் ஆண்டில் அகழ்ந்தெடுக்கப்பட்டது. கிமு 2 ஆம் நூற்றாண்டைக் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது.
நூலாசிரியர்சுன் த்சு
நாடுசீனா
மொழிசீனம்
வகைபோரியல் நூல்

இது தன் காலத்தின் போர் வியூகம், உத்தி போன்ற போர் சார்ந்த செயல்களை அடிப்படையாகக் கொண்ட நூலாக விளங்கியது. இந்நூலை, இன்றும் அதன் போரியல் உள்நோக்குக்காக பலரும் வாசிக்கின்றனர். போர்க்கலை நூல் உலகின் மிகப் பழையதும், வெற்றிகரமானதுமான போரியல் நூல்களுள் ஒன்று. சீனாவின் ஏழு போர்க்கலை நூல்கள் என வழங்கப்படுவனவற்றுள் மிகவும் புகழ் பெற்றதும், செல்வாக்கு மிக்கதுமான நூலும் இதுவே ஆகும். கடந்த 2000 ஆண்டுகளுக்கு மேலாக, ஆசியாவின் மிகச் சிறந்த போர்க்கலை நூலாக இது விளங்கி வருகிறது. சாதாரண மக்கள் கூட இதன் பெயரை அறிந்திருந்தனர்.[2]

போர்க் கலை (நூல்)
நூலாசிரியர்(trad.) சுன் த்சு
நாடுசீனா
மொழிசீன மொழி
பொருண்மைபோரியல் மூல உபாயம் மற்றும் போர் உத்தி
வெளியிடப்பட்ட நாள்
ஐந்தாம் நூற்றாண்டு
உரைபோர்க் கலை (நூல்) விக்கிமூலத்தில்

நூல் பரவல்

தொகு
போர்க் கலை
பண்டைய சீனம் 孫子兵法
நவீன சீனம் 孙子兵法
Literal meaningசூரியத் தலைவனின் போர் விதிகள்

இது 1080ல் ஸாங்(Song) நாட்டின் மாமன்னன் ஷென்ஸாங்(Shenzong) என்பவரால் தொகுக்கப்பட்டது. இத்தொகுப்பு சீனாவின் ஏழு அடிப்படை போர்ப்படைத் தளங்களிலும், தலைமை வழிகாட்டியாக வைக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு பல ஆண்டு காலங்களுக்கு மேலாக கிழக்கு ஆசியாவில் மிகவும் செல்வாக்குள்ள போர்ப் படிநிலை வழிகாட்டி தொகுப்பாக செயல்பட்டு வந்தது. இத்தொகுப்பு கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளின் போர்ப்படை சிந்தனைகள், வாணிக உத்திகள், சட்டப் படிநிலைகள் இன்னும் இவற்றை தாண்டிய பல்வேறு கருத்துகளையும் விளக்கும் தொகுப்பாக விளங்குகிறது.

இந்த நூலை 1772ஆம் ஆண்டு முதன் முதலாக ஜெஸூய்ட் ஜீன் ஜோஸஃப் மேரி அமியோட்(Jesuit Jean Joseph Marie Amiot) என்பவர் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்தார். மேலும் இந்நூலை 1905ஆம் ஆண்டு இங்கிலாந்து அதிகாரி எட்வார்டு ஃபெர்குஸான் கால்த்ரோப்(Everard Ferguson Calthrop) என்பவர் ஆங்கில மொழியில் பகுதியளவு மொழிபெயர்த்தார். இருப்பினும் குறிப்புரைகளைக் கொண்ட முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் 1910ஆம் ஆண்டு லயனெல் கில்ஸ்(Lionel Giles) என்பவரால் நிறைவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[3] மாவோ ஸெடாங்(Mao Zedong), படைத் தளபதி வோ குயன் ஜிஆப்(Võ Nguyên Giáp), படைத் தளபதி டக்ளஸ் மாக் ஆர்தர்(Douglas MacArthur) போன்ற பேரரசுக்குரிய கம்பீரமான ஜப்பான் நாட்டின் பல தலைவர்களும் இந்த நூலைப் படித்து அகத்தூண்டுதல் பெற்று தம் பணியில் மேன்மை கண்டனர்.

சன் வு - ஒரு குறிப்பு

தொகு

"சன் வு" ஒரு இராணுவக் கொள்கையாளர். இவர் கி.மு. 776-471 வரையிலான காலத்தில், வசந்த மற்றும் இலையுதிர்கால காலத்தின் பின்பகுதியில் "வூ" அரசாங்கத்தின் தென்கிழக்குப் பகுதியிலிருந்த தனது சொந்த மாநிலமான 'கீ" பகுதிக்குச் சென்றார். அவருடைய போர்த்திறனால் 'சூ' மாநில ராஜா ஈர்க்கப்பட்டார். "சன் வு" அரண்மனையின் அழகிய பெண்களுக்குக் கூட போரில் பயிற்சியளித்து போருக்குத் தயார் செய்திருந்தார்.[4] சக்தி வாய்ந்த எதிரி நாடுகளையும் போருக்கு அழைக்கும் அளவிற்கு அந்நாட்டு படைகளைத் தயார் செய்திருந்தார் என்பது சீனாவில் எந்நாளும் போற்றப்படும் ஒரு காவியமாகும்.

போர்க்கலை எனும் இந்நூலின் முற்பகுதிகள் 100 ஆண்டுகளுக்கு[5] முற்பட்டதாக இருப்பினும் கிமு 6ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் "சூரிய குரு" "சுன் த்சு"(Sunzi or Sun-tzu)என்ற தலைப்பில் போர்ப்படைத் தளபதிகளின் பாரம்பரியமிக்க இயற்பண்பு நூலாகப் பயன்படுத்தப்பட்டன. இந்நூலின் பயன்பாட்டை உணர்ந்து சிமா கியான்(Sima Qian) எழுதிய கிமு 1ஆம் நூற்றாண்டில் எழுதிய "மாபெரும் வரலாற்றாளரின் பதிவுகள்" எனும் பொருளுடைய ஷிஜி (Shiji) என்பது சீனாவை ஆண்ட 24 வம்சங்களின் முதல் வரலாற்றுத் தொகுப்பாகும். "கி மாகாணத்திலிருந்து" என்ற நூல் சன் வூ ("Sun Wu") என்பவரால் எழுதப்பட்டது.[6] இந்நூல், ஆரம்பகால சீனர்களின் பாரம்பரியம், போர்ப்படைத் தகவல்கள் போன்றவை சார்ந்த பதிவாக உள்ளது. இந்நூல் கிமு 514–495ல் வாழ்ந்த "வூ" நாட்டின் அரசர் ஹெலு (Helü) என்பவரால் படிக்கப்பட்டது.[4] இந்த கருத்துக்கள் பாரம்பரிய நிலையில் கண்டறியப்பட்டு "குரு சூரியனின் போர்க்கலை" என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.

போர் உத்தியில் நிலைஎடுத்தலின் முக்கியத்துவத்தை சுன் த்சு தன் நூலில் வலியுறுத்திக் கூறுகிறார். ஒரு போர்ப்படையின் நிலையைக் குறித்து முடிவு எடுக்கும்போது, இயற்பியல் சூழலின் புறநிலை சார்ந்த நிலைமைகளையும், சூழலில் உள்ள பிற போட்டியாளரின்/ போட்டியாளர்களின் அகநிலை சார்ந்த நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொள்ள வேண்டும். உத்தி என்பது ஏற்கனவே தீர்மானிக்கபட்ட ஒரு பட்டியலின் அடிப்படையில் செயலாற்றுவது அல்ல என்றும், மாறும் நிலைமைகளுக்கு ஏற்ப விரைவானதும் உகந்ததுமான எதிர்வினையே முக்கியமானது என்றும் "சுன் த்சு" கருதினார். போருக்கான திட்டம் ஒரு கட்டுப்பாடான சூழலில் செயற்படும். ஆனால் மாறும் சூழலில் போட்டித் திட்டங்கள் மோதுவதால், எதிர்பாராத நிலைமைகள் ஏற்படுகின்றன.

இந்நூல் முதன் முதலாக 1772 ஆம் ஆண்டில் பிரெஞ்சு யேசு சபையைச் சேர்ந்த யோன் யோசேப் மாரி அமியட் என்பவரால் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. பின்னர் 1905ல், பிரித்தானிய அலுவலர் எவரார்ட் பெர்கூசன் கல்தார்ப் என்பவர் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். மாவோ சேடொங், தளபதி வே ங்குயேன் கியாப், பாரன் ஆன்டொவின்-என்றி யொமினி (Antoine-Henri Jomini), தளபதி டக்ளசு மக்ஆர்தர், சப்பானியப் பேரரசின் தலைவர்கள் போன்றோர் உட்பட பலர் இந்த நூலிலிருந்து அகத்தூண்டல் பெற்றுள்ளனர். இந்த நூல், வணிகம், நிர்வாகம் ஆகியவற்றுக்கான உத்திகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.[2][7]

நூலின் 13 பிரிவுகள்

தொகு
 
பேரரசர் கியான்லோங்கின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த, மூங்கில் கீற்றுக்களால் ஆன "போர்க்கலை நூலின் தொடக்கப் பகுதி

போர் கலை எனும் நூல் பைன் (piān) எனப்படும் 13 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இவற்றின் "முழு" அல்லது "காலமுறையிலான" தொகுப்பு ஒரு ஸூவான் (zhuàn) எனப்படுகிறது. ஏறத்தாழக் கடந்த ஒரு நூற்றாண்டில் மொழிபெயர்த்த பலரும் வெவ்வேறு விதமாகத் தலைப்புக்களைக் கொடுத்துள்ளனர். தலைப்புகள் பின்வருமாறு:

ஆசிரியர்கள் லயனல் கில்ஸ், ஆர். எல். விங், ரால்ப் டி. சாயர் மற்றும் சௌ-ஹௌ வீ ஆகியோரின் மொழிபெயர்ப்புகளில் போர் கலை எனும் நூலின் 13 அத்தியாயங்களின் பெயர்கள்
Chapter லயனல் கில்ஸ்(Lionel Giles) (1910) (ஆர். எல். விங்) R.L. Wing (1988) (ரால்ப் டி. சாயர்) Ralph D. Sawyer (1996) (சௌ-ஹௌ வீ) Chow-Hou Wee (2003)
I விரிவான மதிப்பீடும் திட்டமிடலும் கணக்கீடுகள் தொடக்க மதிப்பீட்டுகள் விரிவான மதிப்பீடும் திட்டமிடலும்
(சீன மொழியில்: 始計,始计)
II போர் தொடுத்தல் சவால்கள் போர் தொடுத்தல் போர் தொடுத்தல்
(சீன மொழியில்: 作戰,作战)
III போர்த்தந்திரத் தாக்குதல் தாக்குதலைத் திட்டமிடல் தீங்கு விளைவிக்கக்கூடிய படையியல் தாக்குதல்களைத் திட்டமிடல் போர்த்தந்திரத் தாக்குதல்
(சீன மொழியில்: 謀攻,谋攻)
IV படை நிலையெடுப்பு குறிப்பிட்ட இடத்தில் படைகளை நிறுத்துதல் இராணுவ ஏற்பாடு இராணுவ நிலை நிறுத்துதல்
(சீன மொழியில்: 軍形,军形)
V ஆற்றல் பயன்பாடு இயக்குதல் மற்றும் வழிகாட்டல் இராணுவ ஆற்றல் தந்திரம் படையினர்
(சீன மொழியில்: 兵勢,兵势)
VI வலிமையும் வலிமைக் குறைவும் உண்மையும் மாயையும் வெறுமையும் சாரப்பொருளும் வலிமையும் வலிமைக் குறைவும்
(சீன மொழியில்: 虛實,虚实)
VII இராணுவ திட்டங்கள் படைகளை ஈடுபடுத்துதல் இராணுவப் போரிடுதல் இராணுவ சூழ்ச்சி
(சீன மொழியில்: 軍爭,军争)
VIII வேறுபாடுகளும் நெகிழ்வுத்திறனும் ஒன்பது வேறுபாடுகள் ஒன்பது மாற்றங்கள் வேறுபாடுகள் மற்றும் இணக்கம்
(சீன மொழியில்: 九變,九变)
IX நகர்வும் படை வளர்ச்சியும் படைகளை நகர்த்துதல் எதிரி இராணுவத்தி மீது சூழ்ச்சி செய்தல் இயக்கம் மற்றும் துருப்புக்களின் அபிவிருத்தி
(சீன மொழியில்: 行軍,行军)
X நில வகை சூழ்நிலைகளை நிலைப்படுத்தல்  தரைப்படைக்

கட்டமைப்புகள்

நிலக்கூறு
(சீன மொழியில்: 地形)
XI ஒன்பது வகைப் போர்க்களங்கள் ஒன்பது வகைப் போர்க்களங்கள் ஒன்பது வகை நிலக்கூறுகள் ஒன்பது வகைப் போர்க்களங்கள்
(சீன மொழியில்: 九地)
XII தீயினால் தாக்குதல் கனல் தெறிக்கும் தாக்குதல் கொடூரமான தாக்குதல்கள் தீ கொண்டு தாக்குதல்
(சீன மொழியில்: 火攻)
XIII புலனாய்வும் ஒற்றாடலும் நுண்ணறிவுப் பயன்பாடு உளவாளிகளைப் பயன்படுத்துதல் உளவுத்துறை மற்றும்

ஒற்றர்படை
(சீன மொழியில்: 用間,用间)

  1. விவரமான மதிப்பீடும் திட்டமிடலும்
  2. போர் தொடுத்தல்
  3. போர்த்தந்திரத் தாக்குதல்
  4. படை நிலையெடுப்பு
  5. ஆற்றல்
  6. வலிமையும் வலிமைக் குறைவும்
  7. இராணுவ திட்டங்கள்
  8. வேறுபாடுகளும் நெகிழ்வுத்திறனும்
  9. நகர்வும் படை வளர்ச்சியும்
  10. நிலவகை
  11. ஒன்பது வகைப் போர்க்களங்கள்
  12. தீயினால் தாக்குதல்
  13. புலனாய்வும் ஒற்றாடலும்

பிரிவுச் சுருக்கங்கள்

தொகு
  1. விவரமான மதிப்பீடும் திட்டமிடலும் என்னும் தலைப்பின் கீழ், வழி, பருவகாலம், நிலம், தலைமை, நிர்வாகம் ஆகிய ஐந்து அடிப்படையான காரணிகள் குறித்தும், போரின் முடிவைத் தீர்மானிக்கும் ஏழு விடயங்கள் குறித்தும் நூல் ஆராய்கிறது. இவ்விடயங்கள் குறித்துச் சிந்தித்து, மதிப்பீடு செய்து, ஒப்பிடுவதன் மூலம் ஒரு தளபதி வெற்றிக்கான வாய்ப்புக்களைக் கணித்துக்கொள்ள முடியும். இந்தக் கணிப்புக்களிலிருந்து விலகுவது முறையற்ற செயற்பாடுகள் மூலம் தோல்வியை உறுதிப்படுத்திவிடும்.
  2. போர் தொடுத்தல் என்னும் பிரிவு, போர் தொடர்பான பொருளியலை எவ்வாறு புரிந்து கொள்வது என்பது குறித்தும், சண்டைகளில் தீர்மானமான வெற்றி பெறுவது குறித்தும், இறுதி வெற்றிக்கு திட்டமிட்டு செயலாற்றுதலின் அவசியம் குறித்தும் விளக்குகிறது. போட்டிகளுக்கும், முரண்பாடுகளுக்குமான செலவைக் குறைப்பது, வெற்றிகரமான படை நடவடிக்கைகளுக்கு இன்றியமையாதது என்பது குறித்தும் இந்தப் பிரிவு ஆலோசனை கூறுகிறது.
  3. போர்த்தந்திரத் தாக்குதல் என்னும் மூன்றாம் பிரிவு, வலிமைக்கான மூலம், படைகளின் எண்ணிக்கையில் அல்ல; படைகளுக்கிடையே உள்ள ஒற்றுமையே என்று வலியுறுத்துகிறது. இது எத்தகைய போர்களிலும் வெற்றி பெறுவதற்குத் தேவையான ஐந்து காரணிகள் பற்றி ஆராய்கிறது. போர்முறையின் முக்கியத்துவ ஒழுங்கின் ஐந்து காரணிக் கூறுகள்: தாக்குதல், உத்தி, கூட்டணி, படை, நகரங்கள் என்பன ஆகும்.
  4. படை நிலையெடுப்பு என்னும் பிரிவு, படைகளைப் பாதுகாப்பான முறையில் முன்னே நடத்திச் செல்வதற்கு பொருத்தமான நிலை ஏற்படும் வரை ஏற்கனவே உள்ள நிலைகளைப் பாதுகாப்பதன் இன்றியமையாமை குறித்து விளக்குகிறது. இது வாய்ப்புக்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது குறித்துத் தளபதிகளுக்குக் கற்பிப்பதுடன், எதிரிகளுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடாது என்றும் எடுத்துக் கூறுகிறது.
  5. ஆற்றல் என்னும் ஐந்தாம் பிரிவின் கீழ், படைகளுக்கு உந்து சக்தியைக் கொடுப்பதற்கு, ஆக்கத் திறனையும், காலத் தெரிவையும் பயன்படுத்துவது குறித்து விளக்குகிறது.
  6. வலிமையும் வலிமைக் குறைவும் என்னும் பிரிவு, எதிரியின் பலவீனத்தைப் பயன்படுத்தி போர் சூழலை எப்படி தனக்கு சாதகமாய் பயன்படுத்துவது என்பதை பற்றியும், மாறும் தன்மைக் கொண்ட போர்களத்தில் எப்படி சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்வது என்பதை பற்றியும் தெளிவாக்குகிறது.
  7. இராணுவ திட்டங்கள் நேரடி மோதல் ஆபத்துகளைப் பற்றியும், தம் தளபதி மீது தாக்குதல் நேரிடும் போது அந்த மோதல்களை எதிர்த்து வெற்றி பெறுவது பற்றியும், எதிரித் தளபதி மீது தாக்குதல் நடத்தி வெற்றி பெறுவது பற்றியும் கூறுகிறது.
  8. வேறுபாடுகளும் நெகிழ்வுத்திறனும் ஒரு இராணுவத்தில் பதிலளிப்புகளுக்கு இடையேயான நெகிழ்வு தேவை என்று கூறுகிறது. இத்தொகுப்பு இக்கருத்தில் கவனம் செலுத்துகிறது. அதாவது வெற்றிகரமாக சூழ்நிலையில் மாற்றம் பதிலளிக்கும் என்பதை பற்றி விளக்குகிறது.
  9. நகர்வும் படை வளர்ச்சியும் என்னும் பிரிவில், புதிய எதிரி பிரதேசங்கள் மூலம் நகர்தல், மற்றும் இந்த சூழ்நிலைகளில் எவ்வாறு செயற்படுதல் என வெவ்வேறு சூழ்நிலைகளைப் பற்றி விவரிக்கிறது. இந்த பிரிவில் பெரும்பங்கு பிறரின் நோக்கங்களை மதிப்பீடு செய்வதிலும், எதிர்ப் படையின் மீது கவனம் செலுத்துவதையும் முதன்மைப்படுத்துகிறது.
  10. நிலவகை என்னும் பிரிவில் எதிர்ப்புத் தன்மையுடைய 3 பொது பகுதிகள் தெரிகிறது (தொலைவு, ஆபத்து, தடைகள்). அவர்களிடம் இருந்து எழும் நிலப் படைகளை ஆறு வகையான நிலங்கள் உள்ளது என்றும் இந்த ஆறு வகையான நில அமைப்பில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு என்பதையும் விளக்குகிறது.
  11. ஒன்பது வகைப் போர்க்களங்கள் என்னும் பிரிவில், போர்த்தொடர் பயன்பாட்டு வியூகம் அமைக்கும் போது, ஒரு தளபதிக்கு ஒன்பது பொதுவான சூழ்நிலைகளிலிருந்து (அல்லது நிலைகள்) சிதறடிக்கும் ஆபத்தானது வரக்கூடும் எனக் கூறப்படுகிறது. அந்நிலையில் அவர், தன் படைகளை வெற்றிகரமான வழியில் செலுத்துவது குறித்து விளக்கப்பட்டுள்ளது
  12. தீயினால் தாக்குதல் என்னும் பிரிவில் ஆயுதப் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழலினை எவ்வாறு ஒரு சிறப்பு ஆயுதமாகப் பயன்படுத்துவது என்பது நன்கு விளக்கப்பட்டுள்ளது. இந்நூலானது தாக்குதலுக்கு ஏற்ற ஐந்து இலக்குகள், சுற்றுச்சூழல் தாக்குதல்களின் ஐந்து வகைகள் மற்றும் அத்தகைய தாக்குதல்களுக்கு பொருத்தமான எதிர்த்தாக்குதல்கள் சார்ந்து ஆராய்கிறது
  13. புலனாய்வும் ஒற்றாடலும் என்னும் பிரிவில் நல்ல தகவல் ஆதாரங்களை வளர்ப்பதற்கான முக்கியத்துவம், ஐந்து வகை உளவுத்துறை ஆதாரங்கள், அவை ஒவ்வொன்றையும் எவ்வாறு சிறப்பாக நிர்வகிப்பது என்பது குறித்து முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது.

மூன்று முக்கிய கட்டளைகள்

தொகு
  • எதிரியையும், உன்னையும் அறி, நூறு போர்களில் நீ ஒருபோதும் ஆபத்தில் இருக்காய்.
  • நூறு போர்களை வெல்வது போரின் உயர்ந்த கலையல்லை, போரிடாமல் எதிரியை அடக்குவதுவதே அக்கலை.
  • பலமானதை தவிர், பலவீனமானத்தை தாக்கு.

குறிப்புகள்

தொகு
  1. Griffith, Illustrated Art of War, p. 17–18
  2. 2.0 2.1 Sawyer, Ralph D. The Seven Military Classics of Ancient China. New York: Basic Books. 2007. p. 149.
  3. Giles, Lionel The Art of War by Sun Tzu - Special Edition. Special Edition Books. 2007. p. 62.
  4. 4.0 4.1 Gawlikowski & Loewe (1993), ப. 447.
  5. Lewis (1999), ப. 604.
  6. Mair (2007), ப. 9.
  7. Floyd, Raymond E. http://www.allbusiness.com/management/benchmarking-strategic-planning/338250-1.html பரணிடப்பட்டது 2011-08-22 at the வந்தவழி இயந்திரம்

வெளியிணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sun Tzu
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • The Art of War இரு மொழிப் பதிப்பு, சீன மொழியும் ஆங்கிலமும் (மொழிபெயர்ப்பு: லயனல் கைல்சு).
  • The Art of War லயனல் கைல்சின் மொழிபெயர்ப்பு (1910)' at குட்டன்பேர்க் திட்டம்
  • Art of War audio book, பொது ஆள்கள ஒலிப்பதிவு. இணையக் காப்பகத்தில் மோரியா பொகார்த்தி.
  • The Art of War translated by Lionel Giles (1910) at குட்டன்பேர்க் திட்டம்
  • The Art of War, Author: Sun Tzu (English and Chinese original available)
  • The Art of War, Restored version of Lionel Giles translation: "Direct link to PDF" (PDF). (216 KB))
  • The Art of War by Sun Tzu Free ebook: Lionel Giles translation available in pdf, ePub and Kindle formats.
  • Sun Tzu's Art of War at Sonshi
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்க்_கலை_(நூல்)&oldid=3252771" இலிருந்து மீள்விக்கப்பட்டது