அக்டோபர் புரட்சி

1917 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் உருசிய நாட்டில் புனித பீட்டர்ஸ்பர்க் நகரில் ஆயுதம் தாங்கிபோரா
(போல்ஷெவிக் புரட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அக்டோபர் புரட்சி (October Revolution) (உருசியம்: Октя́брьская револю́ция, ஒ.பெ Oktyabr'skaya revolyutsiya, பஒஅ[ɐkˈtʲabrʲskəjə rʲɪvɐˈlʲutsɨjə]) அல்லது சோவியத் இலக்கியத்தில் மாபெரும் அக்டோபர் சமவுடைமைப் புரட்சி (Great October Socialist Revolution) எனப்படும் (Вели́кая Октя́брьская социалисти́ческая револю́ция, Velikaya Oktyabr'skaya sotsialističeskaya revolyutsiya அல்லது பொதுவாக சிவப்பு அக்டோபர் அல்லது அக்டோபர் எழுச்சி அல்லது போல்செவிக் புரட்சி, எனப்படும்[2] போல்செவிக் முறியடிப்பு (Bolshevik Coup) என்பது விளாதிமிர் லெனினாலும் போல்செவிக் கட்சியாலும் தலைமை தாங்கிய மாபெரும் உருசியப் புரட்சியாகும். இது புனித பீட்டர்சுபர்கில் 1917 அக்தோபர் 25 (7 நவம்பர், 7 புதுமுறையில்) ஆம் நாளன்று நிகழ்ந்த ஆயுதந் தாங்கிய எழுச்சியால் நிறைவேற்றப்பட்டது.

அக்டோபர் புரட்சி
உருசியப் புரட்சி, 1917–23 புரட்சி பகுதி

1917 இல் வல்கன் தொழிலகத்தில் செம்படைகள்
நாள் 7 நவம்பர், (25 அக்டோபர், OS) 1917
இடம் பெத்ரோகிராது, உருசியக் குடியரசு
போல்செவிக் வெற்றிவுருசியத் தாற்காலிக அரசின் முடிவுவூருசியக் குடியரசு, இரட்டை அதிகாரம்
  • சோவியத் உருசியாவின் உருவாக்கம்
  • இரண்டாம் அனைத்துருசிய சோவியத்துகள் மீஉயர் ஆட்சி அமைப்பாதல்
  • உருசிய உள்நாட்டுப் போரின் தொடக்கம்
பிரிவினர்
போல்செவிக் கட்சி
செம்படைகள்
உருசியத் தற்காலிக அரசு
தளபதிகள், தலைவர்கள்
விளாதிமிர் லெனின்
லியோன் டிராட்சுகி
பாவெல் துபியென்கோ
உருசியா அலெக்சாந்தர் கெரென்சுகி
உருசியா பியோத்தர் கிராசுனோவ்
பலம்
10,000 செம்படை மாலுமிகள், 20,000–30,000 செம்படை வீரர்கள் 500–1,000 தன்னர்வ வீரர்கள், 1,000 பெண்படை வீராங்கனைகள்
இழப்புகள்
சில காயமுற்ற செம்படை வீரர்கள்[1] சிறையான, வெளியேறிய அனைவரும்


போல்செவிக் (1920), போரிசு குசுதோதியேவ் வரைந்தது
நியூயார்க் டைம்சு தலைப்பு, 9 நவம்பர் 1917.

இது அதே ஆண்டில் நடந்த பிப்ரவரி புரட்சியைப் பயன்படுத்தியே அக்டோபர் புரட்சி வெற்றி கண்டது. பிப்ரவரி புரட்சி சார்மன்னர் ஆட்சிக்கு முடிவுகட்டித் தற்காலிக உருசிய அரசை உருவாக்கியது. இதே வேளையில், நகரத் தொழிலாளர்கள் சோவியத்துகளாக அணிதிரண்டனர்: இவற்றில் பங்கேற்ற புரட்சியாளர்கள் தற்காலிக உருசிய அரசையும் அதன் செயல்பாடுகளையும் தாக்கிப் பேசினர். அனைத்து உருசிய சோவியத்துகளின் பேராயம் உருவாகியதும் அது ஆட்சியமைப்பாகி, தனது இரண்டாம் கருத்தரங்கப் பிரிவை நடத்தியது. இது புதிய நிலைமைகளின் கீழ் போல்செவிக்குகளையும் இடதுசாரி சமவுடைமைப் புரட்சியாளர்கள் போன்ற பிற இடதுசாரிக் குழுக்களையும் முதன்மைப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுத்தது. இது உடனே உருசிய சமவுடைமை கூட்டாட்சி சோவியத் குடியரசை நிறுவும் முயற்சியைத் தொடங்கியது; இதுவே உலகின் முதல் சமவுடைமை அரசினைத் தானே அறிவித்த சமவுடைமை அரசாகும். சாரும் அவரது குடும்பமும் 1918 ஜூலை 17 இல் தூக்கில் இடப்பட்டனர்.

புரட்சியைப் போல்செவிக்குகள் தலைமை தாங்கி நடத்தினர்.அவர்கள் பெத்ரோபகிராது சோவியத்துகளுக்கு ஆர்வம் ஊட்டி ஆயுதந் தாங்கிப் போராடவைத்தனர். படைசார்ந்து புரட்சிக் குழுவின் கீழ் போல்செவிக் செம்படைகள் 1917 நவம்பர் 7 இல் அனைத்து அரசு கட்டிடங்களையும் கைப்பற்றித் தம் கைவசமாக்கினர். அவர்கள் மறுநாளே உருசியத் தலைநகராகிய பெத்ரோகிராதில் மாரி அரண்மனையில் இருந்த தற்காலிக அரசையும் கைப்பற்றினர்.

நெடுநாளாக தள்ளிபோட்ட உருசிய அரசமைப்பு சட்டமன்றத் தேர்தல் (1917 தேர்தல்) 1917 நவம்பர் 12 இல் நடத்தப்பட்டது. போல்செவிக்குகள் சோவியத்துகளில் பெரும்பான்மையாக இருந்த போதிலும், அவர்கள் மொத்தம் 715 இடங்களுக்கு 175 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றனர். சமவுடைமைப் புரட்சிக் கட்சி 370 இடங்களைப் பிடித்தனர், எனவே, இரண்டாம் இடத்தில் வந்தனர். என்றாலும், சமவுடைமைப் புரட்சிக் கட்சி முழுக்கட்சியாக அப்போது செயல்படவில்லை என்பதே உண்மை நிலைமை. இவர்கள் போல்செவிக்குகளுடன் 1917 அக்டோபர் முதல் 1918 ஏப்பிரல் வரை தேர்தல் உடன்பாட்டில் இருந்தனர். முதல் அரசமைப்பு சட்ட மன்றம் 1917 நவம்பர் 28 இல் கூடியது. ஆனால், அதன் ஆணையேற்பை 1918 ஜனவரி 5 வரை போல்செவிக்குகள் காலந்தாழ்த்தினர். அது கூடிய முதல் நாளிலேயே சோவியத்துகளை எதிர்த்துப் போராடத் தொடங்கியது. இது சோவியத்துகளின் அமைதி, நிலம் சார்ந்த தீர்மானங்களை நீக்கியது. எனவே, மறுநாளே சோவியத்துகளின் பேராயம், தன் ஆணையால் அரசமைப்பு சட்ட மன்றத்தைக் கலைத்துவிட்டது.[3]

புரட்சியை அனைவரும் ஏற்காததால் 1917 முதல் 1922 வரை உருசிய உள்நாட்டுப் போர் தொடர்ந்தது. பின்னர், 1922 இல் சோவியத் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.

சொற்பிறப்பியல்

தொகு

முதலில் இந்நிகழ்வு அக்டோபர் படைப்புரட்சி (Октябрьский переворот) அல்லது மூன்றாம் எழுச்சி என்றே வழங்கியுள்ளது. லெனின் முழுநூல்கள் தொகுப்பின் முதல் பதிப்புகளில் இவ்வாறே குறிப்பிடப்படுகிறது. ஆனால், "переворот" எனும் உருசியச் சொல்லின் பொருள் "புரட்சி" அல்லது "எழுச்சி" அல்லது "கவிழ்த்தல்" என்பனவாகும். எனவே, முறியடிப்பு அல்லது படைப்புரட்சி அல்லது ஆட்சிக் கவிழ்ப்பு ("coup") என்பது சரியான மொழிபெயர்ப்பல்ல. நாளடைவில், அக்டோபர் புரட்சி (Октябрьская революция) எனும் சொல் பயன்பாட்டில் வந்தது. புதிய கிரிகொரிய நாட்காட்டியின்படி, நவம்பரில் நடந்ததால் இது "நவம்பர் புரட்சி" எனவும் வழங்கப்படுகிறது. [4] 1927 இல் நடைபெற்ற புரட்சியின் 10 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் பின்னர், இப்புரட்சியின் அதிகார பூர்வமான பெயராக மாபெரும் அக்டோபர் சமூகவுடைமைப் புரட்சி என்னும் பெயரே வழங்கி வருகின்றது.

பின்னணி

தொகு

பிப்ரவரி புரட்சி

தொகு

குறிப்புகள்

தொகு
  1. History.com Staff. “Russian Revolution.” History.com, A&E Television Networks, 2009, www.history.com/topics/russian-revolution.
  2. Samaan, A.E. (2 February 2013). From a "Race of Masters" to a "Master Race": 1948 to 1848. A.E. Samaan. p. 346. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0615747884. பார்க்கப்பட்ட நாள் 9 February 2017.
  3. Jennifer Llewellyn, John Rae and Steve Thompson (2014). "The Constituent Assembly". Alpha History.
  4. Bunyan & Fisher 1934, ப. 385.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Russian Revolution of 1917
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்டோபர்_புரட்சி&oldid=3739613" இலிருந்து மீள்விக்கப்பட்டது