போ. சுபாசன் ரெட்டி
போ. சுபாசன் ரெட்டி (B. Subhashan Reddy)(2 மார்ச் 1943 - 1 மே 2019) என்பவர் இந்தியாவின் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாகவும், ஆந்திரப் பிரதேசத்தின் மனித உரிமைகள் ஆணையத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றிய இந்திய நீதிபதி ஆவார்.
போ. சுபாசன் ரெட்டி | |
---|---|
தலைமை நீதிபதி கேரள உயர் நீதிமன்றம் | |
பதவியில் 21 நவம்பர் 2004 – 2 மார்ச் 2005 | |
பின்னவர் | ராஜிவ் குப்தா |
தலைமை நீதிபதி மதராசு உயர் நீதிமன்றம் | |
பதவியில் 12 செப்டம்பர் 2001 – 21 நவம்பர் 2004 | |
முன்னையவர் | நரேந்திர குமார் ஜெயின் |
பின்னவர் | மார்க்கண்டேய கட்சு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஐதராபாத், ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியா | 2 மார்ச்சு 1943
இறப்பு | 1 மே 2019 காச்சிபௌலி, ஐதராபாத் | (அகவை 76)
முன்னாள் கல்லூரி | உசுமானியா பல்கலைக்கழகம் |
வாழ்க்கையும் கல்வியும்
தொகுரெட்டி 1943-ல் ஐதராபாத்தில் உள்ள பாக் ஆம்பர்பேட்டையில் பிறந்தார். இவரது தந்தை, போ. ஆகா ரெட்டி ஆவார். ஐதராபாத் மாநிலத்தில் கணக்கு நிர்வாகத்தின் தேர்வாளராக சேவையாற்றினார்.[1] இவர் ஐதராபாத்தில் உள்ள சுல்தான் காட்சிசந்தை மற்றும் சதர்காட் உயர்நிலைப் பள்ளிகள், புது அறிவியல் கல்லூரியில் பயின்றார். உசுமானியா பல்கலைக்கழகத்தில் சட்ட பாடத்தில் தேர்ச்சி பெற்றார். இவர் 1 மே 2019 அன்று ஐதராபாத் காச்சிபௌலியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இறந்தார்.[2]
நீதிபதி பணி
தொகுரெட்டி 1966 முதல், அரசியலமைப்பு, குடிமையியல், குற்றவியல், வருவாய் மற்றும் வரிவிதிப்பு விடயங்களில் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சியைத் தொடங்கினார். ரெட்டி இந்திய உச்ச நீதிமன்றத்திலும் பயிற்சி பெற்றார். 1991ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் செப்டம்பர் 12, 2001 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார். சிறிது காலம் சென்னையில் பணியாற்றிய ரெட்டி, 21 நவம்பர் 2004 அன்று கேரள உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாறுதல் பெற்றார். ரெட்டி 2005ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் நாள் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.[3] இவர் ஆந்திரப் பிரதேச மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார். மேலும் அக்டோபர் 2012-ல், ரெட்டி ஆந்திரப் பிரதேசத்தின் லோகாயுக்தா தலைவராகப் பொறுப்பேற்றார்.[4][5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://tshc.gov.in/retjudges/bsrj.html
- ↑ "Telangana: KCR condoles death of Justice Subhashan Reddy". பார்க்கப்பட்ட நாள் 1 May 2019.
- ↑ "Chief Justice B. Subhashan Reddy". பார்க்கப்பட்ட நாள் 16 January 2019.
- ↑ "Justice B Subhashan Reddy is the new AP Lokayukta". பார்க்கப்பட்ட நாள் 16 January 2019.
- ↑ "Justice B Subhashan Reddy becomes AP Lokayukta". பார்க்கப்பட்ட நாள் 16 January 2019.
- ↑ "Justice B Subhashan Reddy becomes AP Lokayukta". பார்க்கப்பட்ட நாள் 16 January 2019.