ப. கிருட்டிணமூர்த்தி
பத்திரிராசு கிருட்டிணமூர்த்தி (Bhadriraju Krishnamurti, பத்ரிராஜு கிருஷ்ணமூர்த்தி[1] சூன் 19, 1928 - ஆகத்து 11, 2012) புகழ்பெற்ற திராவிட மொழியியல் ஆய்வாளரும்,[2][3][4] அறிவியலாளரும் ஆவார். பெருமை மிக்க எடின்பரோ வேந்தியக் குமுகத்தின் பேராளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இரண்டு இந்தியர்களுள் இவரும் ஒருவர் (2004)[5]. அமெரிக்க மொழியியல் குமுகத்தின் பெருமைய உறுப்பினராக, சுனிதக்குமார் சட்டர்ச்சிக்கு அடுத்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது ஆய்வாளர் இவர்.
பத்திரிராசு கிருட்டிணமூர்த்தி Bhadriraju Krishnamurti | |
---|---|
மொழியியல் பேராசிரியர் (முன்னாள் துறைத் தலைவர்) உசுமானியா பல்கலைக்கழகம் | |
பதவியில் 1962 – 1988 (விடுப்பில் 1986-88) | |
துணைவேந்தர் ஐதராபாத்து பல்கலைக்கழகம் | |
பதவியில் 1986–1993 | |
தங்கி இருக்கும் பேராளர் நடத்தையிய அறிவியல் மேலாய்வுக் கழகம் (நடத்தை அறிவியலில் மேம்பட்ட ஆய்வு மையம்) இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் | |
பதவியில் 1975 – 1976, 2000 இலையுதிர்காலம் | |
உறுப்பினர் மேலாய்வுக்கான கல்விக்கழகம் பிரின்சிட்டன் பல்கலைக்கழகம் | |
பதவியில் 1999–2000 | |
பெருமையப் பேராசிரியர் ஆந்திரா பல்கலைக்கழகம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2003 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஒங்கோலு, பிரகாசம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் இந்தியா | சூன் 19, 1928
துணைவர் | திருவாட்டி ப. சியாமளா |
தொழில் | வரலாற்று மொழியியல் திராவிட மொழியியல் கல்வியாளர் |
இவர் ஆந்திரப் பிரதேசத்தில், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோல் என்னும் ஊரில் பிறந்தார்.[6] ஐதராபாத்து நடுவண் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக 1986 முதல் 1993 வரை இருந்தார். உசுமானியா பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையை இவர் முதன்முதலாக தொடக்கி வைத்து அங்கேயே 1962 முதல் 1986 வரை பேராசிரியராக இருந்தார். இவர் இயற்றிய பெருநூலாகக் கருதப்படுவது, "திராவிட மொழிகள்" என்பதாகும். இதனைக் கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகப் பதிப்பகம் 2003 இல் வெளியிட்டது. இவர் புகழ்பெற்ற திராவிட மொழியியல் அறிஞர் மரே எமெனோவின் மாணவராகவும் அவருடன் பணியாற்றிய உடன் ஆய்வாளராகவும் இருந்தார். கிருட்டிணமூர்த்தி தம் முதுகலைப் பட்டத்தையும் முனைவர் பட்டத்தையும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இருந்து முறையே 1955 இலும் 1957 இலும் பெற்றார்.
மொழியியல் துறைக்குப் பங்களிப்பு
தொகுகிருட்டிணமூர்த்தி தான் முதன்முதலாக தற்கால ஒப்பீட்டு மொழியியல் கோட்பாட்டை முறைசார்ந்து பயன்படுத்தி திராவிட மொழிகளை ஆய்வு செய்தார் என்பர். இவருடைய தெலுங்கு வினையடிகள் (1961) என்னும் ஆக்கமே தற்கால முறைப்படி திராவிட மொழிகளின் வினை வடிவங்களை வருவித்துத் தந்தது, குறிப்பாக தெலுங்கின் நோக்கில் இருந்து, எனக் கருதப்படுகின்றது. திராவிட மொழியாகிய கோண்டி மொழியின் இலக்கணத்தை இவர் ஆய்ந்து பதிவு செய்தது, இலக்கிய எழுத்து வடிவு பெறாத திராவிட மொழிகளுள் குறிப்பிடத்தகுந்ததாகும்.
இவருடைய ஆய்வுகள் பெரும்பாலும் அடிப்படையான ஒலியனியல் சொல்வடிவு, தொடரியல் கருத்துகளைப் பற்றியதாகும். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றி வளர்ச்சி அடைந்துகொண்டிருந்த திராவிட மொழிகளின் ஒப்பீட்டு மொழியியல், வரலாற்று மொழியியல் ஆகிய துறைகளுக்கு அரும்பங்கு ஆற்றினார்.[7] இவர் 1955-1998 ஆகிய காலப்பகுதியில் வெளியிட்ட, இருபத்தியொரு கட்டுரைகளின் தொகுப்பாகிய கம்பேரிடிவ் திராவிடியன் லிங்குஸ்டிக்: கரன்ட் பெர்ஸ்பெக்டிவ் என்னும் நூல், திராவிட மொழியியலில் பல கேள்விகளுக்கு விடை பகர்ந்து நின்றது. பின்னர் 2003 ஆம் ஆண்டு கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகப் பதிப்பகம் வெளியிட்ட 'திராவிட மொழிகள்' என்னும் நூல் இவருடைய ஐம்பதாண்டு ஆய்வுகளின் பயனாக உருவாகியது. இராபர்ட்டு கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணத்துக்கு அடுத்து, அதனைவிட சிறந்த, தற்கால படைப்பாகச் சிலர் கருதுகின்றனர்.
1960-61 ஆகிய காலப்பகுதியில் சிறிது காலம் இவர் கலிபோர்னியாவின் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இருந்தார். பின்னர் இந்தியா திரும்பியபின் ஒசுமானியா பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையைத் தொடங்கினார். தெலுங்குக் கிளை மொழிகளில் தொழில்சார் கலைச்சொற்கள் அகராதித் தொகுப்பில் இவர் ஊட்டிய ஊக்கம் பெரிது. இந்த அகராதி வரிசையில் இப்பொழுது 12 தொகுதிகள் வெளிவந்துள்ளன.
பொறுப்பில் இருந்த பதவிகள்
தொகுகிருட்டிணமூர்த்தி ஆந்திரா பல்கலைக்கழகத்தில் தெலுங்கு விரிவுரையாளராக இருந்தார் (1949–61); பின்னர் துணைப்பேராசிரியராக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இருந்தார் (1960-61); தெலுங்கு படிப்பவர், சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகம்(1961–62); மொழியியல் பேராசிரியர், உசுமானியா பல்கலைக்கழகம் (1962–88), கலையியல் துறைத் தலைவர் (1973–76), ஆட்சிக் குழு உறுப்பினர் (1971–75); இயக்குநர், தென் மண்டல மையம், இந்தியக் குமுக அறிவியல் ஆய்வுக் குழுமம் (1978–82); துணை வேந்தர், ஐதராபாத்துப் பல்கலைக்கழகம் (1986–93), பெருமையப் பேராசிரியர், ஐதராபாத்துப் பல்கலைக்கழகம் 1993-99; ஆந்திரா பல்கலைக்கழகம் 2003-2012. கிருட்டிணமூர்த்தி பல மேற்கு நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றி இருக்கின்றார்.
- வருகைப் பேராசிரியர், மிச்சிகன் பல்கலைக் கழகம், அன் ஆர்பர் (1967), கார்ணெல் பல்கலைக்கழகம், இத்தாக்கா, (1967, 1970), ஆத்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம் (1974), தோக்கியோ பல்கலைக்கழகம் (1982), பென்சில்வேனியா பல்கலைக்கழகம், பிலடெல்பியா (1983)[8][9], இல்லினாய்ப் பல்கலைக்கழகம், அர்பேனா இழ்சாம்பேயின் (1986), அவாயி பல்கலைக்கழகம்(1995), தெக்சாசு பல்கலைக்கழகம், ஆர்லிங்டன் (1995)
- அவாயி பல்கலைக்கழகத்தில் இராமா வாட்டுமவுல் சிறப்பு இந்திய ஆய்வாளர் (1995).
- தங்கியிருக்கும் பேராளர், நடத்தையியல் அறிவியலுக்கான மேம்பட்ட ஆய்வு மையம், இசுட்டான்போர்டு (2000–2001),
- உறுப்பினர், மேலாய்வுக் கழகம் , பிரின்சிட்டன் (1999–2000), வருகைப் பேராளர், மொழியியல் வகைப்பாட்டியலுக்கான ஆய்வு மையம், மேலாய்வுக் கழகம், இலா திரோபெ பல்கலைக்கழகம், மெல்போர்ண் ஆத்திரேலியா (2001), வருகை அறிவியலாளர், மாக்சு பிளாங்குக் கழகம் கூர்ப்பியல் மாந்தவியல், இலைப்புசிகு, இடாய்ச்சுலாந்து (2003 செப்டம்பர்-நவம்பர்) இந்திய மொழியியல் குமுகத்தின் தலைவர் (1970), தலைவர், திராவிட மொழியியல் குமுகம் (1980).
ஆங்கிலத்தில் வெளியீடுகள்
தொகுஆக்குநராக
தொகு- Krishnamurti, Bhadriraju (1961). Telugu Verbal Bases: A Comparative and Descriptive Study (reprinted 1972). UCPL. Vol. 24. Berkeley and Los Angeles: University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-258-17843-7.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|month=
(help) - Krishnamurti, Bhadriraju (1968). A Basic Course in Modern Telugu. Hyderabad: Department of Linguistics, Osmania University (reprinted in 2006 by Telugu Akademi, Himayatnagar, Hyderabad).
{{cite book}}
: Cite has empty unknown parameter:|month=
(help); Unknown parameter|coauthors=
ignored (help) - Krishnamurti, Bhadriraju (1969). koṃḍa or Kūbi: A Dravidian Language. Tribal Cultural Research and Training Institute. Vol. 2. Hyderabad: Tribal Cultural Research and Training Institute, Govt. of Andhra Pradesh.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|month=
(help) - Krishnamurti, Bhadriraju (1977). A Short Outline of Telugu Phonetics. Calcutta: Indian Statistical Institute.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|month=
(help); Unknown parameter|coauthors=
ignored (help) - Krishnamurti, Bhadriraju (1985). A Grammar of Modern Telugu. New Delhi: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-561664-4.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|month=
(help); Unknown parameter|coauthors=
ignored (help) - Krishnamurti, Bhadriraju (1995). Evaluation of Total Literacy Campaigns: Chittoor and Nizamabad Districts of Andhra Pradesh. Hyderabad: Book Links Corporation. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85194-35-6.
{{cite book}}
: Cite has empty unknown parameters:|trans_title=
and|month=
(help); Unknown parameter|coauthors=
ignored (help) - Krishnamurti, Bhadriraju (1998). Language, Education and Society. New Delhi: Sage. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7036-695-9.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|month=
(help) - Krishnamurti, Bhadriraju (2001). Comparative Dravidian Linguistics: Current Perspectives. Oxford University Press, USA. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-824122-5.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|month=
(help) - Krishnamurti, Bhadriraju (2003). The Dravidian Languages. Cambridge Language Surveys (1 ed.). Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-77111-5.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|month=
(help) - Krishnamurti, Bhadriraju (2010). Studies in Telugu Linguistics. Hyderabad: C P Brown Academy. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-8012-099-7.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|month=
(help)
தொகுப்பாசிரியராக
தொகு- Emeneau, M.B. (1968). Krishnamurti, Bhadriraju (ed.). Studies in Indian Linguistics: Professor M. B. Emeneau Ṣaṣṭipūrti Volume. Poona and Annamalainagar: Centres of Advanced Study in Linguistics.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|month=
(help) - Krishnamurti, Bhadriraju; Mukherji, Aditi, eds. (1984). Modernization of Indian Languages in News Media. Hyderabad: Department of Linguistics, Osmania University.
{{cite book}}
: Cite has empty unknown parameters:|trans_title=
and|month=
(help) - Krishnamurti, Bhadriraju; Sinha, A.K, eds. (1986). South Asian Languages: Structure, Convergence, and Diglossia (Proceedings of the Second International Conference of the South Asian Languages and Linguistics). Delhi: Motilal Banarsidass.
{{cite book}}
:|editor2-first=
has generic name (help);|editor2-first=
missing|editor2-last=
(help); Cite has empty unknown parameters:|month=
and|coauthors=
(help)CS1 maint: numeric names: editors list (link) - Krishnamurti, Bhadriraju; Dimock, Edward C.; Kachru, Brah, eds. (1992). Dimensions of Sociolinguistics in South Asia: Papers in Memory of Gerald Kelley. Delhi: Oxford & IBH Publishing Co. P.Ltd.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|month=
(help) - Krishnamurti, Bhadriraju (ed.). Gold Nuggets: An Anthology of Telugu Short Stories of the Post-Independence Period in Translation. Chaganti Vijayasree. New Delhi: Sahitya Akademi.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|month=
(help)
தெலுங்கில் வெளியீடுகள்
தொகுஆக்குநராக
தொகு- Krishnamurti, Bhadrinath (1980). janawācakam in 5 Volumes (One primer and workbook, two readers and a teacher's guide for Telugu non-literates). Hyderabad: Director of Adult Education, Government of Andhra Pradesh.
{{cite book}}
: Cite has empty unknown parameters:|laydate=
,|separator=
,|trans_title=
,|laysummary=
,|month=
,|trans_chapter=
,|chapterurl=
, and|lastauthoramp=
(help); Unknown parameter|coauthors=
ignored (help) - Krishnamurti, Bhadrinath. Tēlika telugu wācakam (Literacy Primer in Telugu, Parts I & II). Hyderabad: Visalandhra Publishers.
{{cite book}}
: Cite has empty unknown parameters:|laydate=
,|coauthors=
,|separator=
,|trans_title=
,|laysummary=
,|month=
,|trans_chapter=
,|chapterurl=
, and|lastauthoramp=
(help) - Krishnamurti, Bhadrinath (1998). cinnanāTi padyālu (Poems of Younger Days). Hyderabad: Author.
{{cite book}}
: Cite has empty unknown parameters:|laydate=
,|coauthors=
,|separator=
,|trans_title=
,|laysummary=
,|month=
,|trans_chapter=
,|chapterurl=
, and|lastauthoramp=
(help) - bhāSa, samājam, saṃskṛti (Language, Society and Culture). Hyderabad: Nilkamal Publishers. 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-86804-46-3.
{{cite book}}
: Cite has empty unknown parameters:|laydate=
,|coauthors=
,|separator=
,|trans_title=
,|laysummary=
,|month=
,|trans_chapter=
,|chapterurl=
, and|lastauthoramp=
(help)
தொகுப்பாசிரியராக
தொகு- Krishnamurthi, Bhadriraju, ed. (1962). (Ed. & Comp.) Mānṇḍalika Writtipadakōśam: A Telugu Dialect Dictionary of Occupational Vocabularies. Vol. I: Agriculture Vocabulary. Hyderabad: A.P.: A.P.Sahitya Akademi (Reprinted 1974). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-179-07882-3.
{{cite book}}
: Cite has empty unknown parameters:|laydate=
,|coauthors=
,|separator=
,|trans_title=
,|laysummary=
,|month=
,|trans_chapter=
,|chapterurl=
, and|lastauthoramp=
(help) - Krishnamurti, Bhadriraju, ed. (1972). Māṇḍalika Writtipadakōśam: A Telugu Dialect Dictionary of Occupational Vocabularies. Vol. II: Handloom Vocabulary. Hyderabad: A.P. Sahitya Akademi.
{{cite book}}
: Cite has empty unknown parameters:|laydate=
,|coauthors=
,|separator=
,|trans_title=
,|laysummary=
,|month=
,|trans_chapter=
,|chapterurl=
, and|lastauthoramp=
(help) - Krishnamurti, Bhadriraju, ed. (1971). Tikkana padaprayōga kōśam (A Concordance of Tikkana's Māhābhārata, a literary work of the 13th century). Vol. I. Hyderabad: A.P. Sahitya Akademi.
{{cite book}}
: Cite has empty unknown parameters:|laydate=
,|separator=
,|trans_title=
,|laysummary=
,|month=
,|trans_chapter=
,|chapterurl=
, and|lastauthoramp=
(help); Unknown parameter|coauthors=
ignored (help) - Krishnamurti, Bhadriraju, ed. (1974). Tikkana padaprayōga kōśam (A Concordance of Tikkana's Māhābhārata, a literary work of the 13th century). Vol. II. Hyderabad: A.P. Sahitya Akademi.
{{cite book}}
: Cite has empty unknown parameters:|laydate=
,|separator=
,|trans_title=
,|laysummary=
,|month=
,|trans_chapter=
,|chapterurl=
, and|lastauthoramp=
(help); Unknown parameter|coauthors=
ignored (help) - Krishnamurti, Bhadriraju (ed.). Telugu bhāSā caritra (A History of the Telugu Language). Hyderabad: A.P. Sahitya Akademi (2nd edition 1979; reprinted six times by Telugu University till 2006).
{{cite book}}
: Cite has empty unknown parameters:|laydate=
,|coauthors=
,|separator=
,|trans_title=
,|laysummary=
,|month=
,|trans_chapter=
,|chapterurl=
, and|lastauthoramp=
(help); horizontal tab character in|publisher=
at position 13 (help) - Krishnamurti, Bhadriraju, ed. (1977). Tikkana padaprayōga kōśam (A Concordance of Tikkana's Mahābhārata, a literary work of the 13th Century). Vol. III. Hyderabad: A.P. Sahitya Akademi.
{{cite book}}
: Cite has empty unknown parameters:|laydate=
,|separator=
,|trans_title=
,|laysummary=
,|month=
,|trans_chapter=
,|chapterurl=
, and|lastauthoramp=
(help); Unknown parameter|coauthors=
ignored (help) - Krishnamurti, Bhadriraju, ed. (1996). Bhāratīya Sāhityam: Samakālika kathānikalu (Contemporary Indian Short Stories) [in English]. New Delhi: Sahitya Akademi.
{{cite book}}
: Cite has empty unknown parameters:|laydate=
,|separator=
,|trans_title=
,|laysummary=
,|month=
,|trans_chapter=
,|chapterurl=
, and|lastauthoramp=
(help); Unknown parameter|coauthors=
ignored (help)
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ "Brief biography of Bhadriraju Krishnamurti". Archived from the original on 27 September 2011. பார்க்கப்பட்ட நாள் 16 December 2009.
- ↑ R. E. Asher, Bulletin of the School of Oriental and African Studies, University of London Vol. 67, No. 1 (2004), pp. 95–97
- ↑ Ian Smith, Anthropological Linguistics Vol. 46, No. 1 (Spring, 2004), pp. 125–128
- ↑ WISE, Mary Ruth, author. 2009. Review of: The Dravidian languages, by Bhadriraju Krishnamurti. SIL Electronic Book Reviews 2009-001: 4 பரணிடப்பட்டது 2 சூலை 2012 at the வந்தவழி இயந்திரம்
- ↑ மற்றவர் அமர்த்திய சென், 2008 இல் முன்மொழியப்பட்டார்.
- ↑ "Brief biography of Bhadriraju Krishnamurti". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2012-08-21.
- ↑ Krishnamurti, Bhadriraju (1972). Telugu Verbal Bases. Shri Jainendra Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780608110523.
- ↑ "Bhadriraju Krishnamurti – Scholars | Institute for Advanced Study". ias.edu (in ஆங்கிலம்). 9 December 2019. பார்க்கப்பட்ட நாள் 23 October 2020.
- ↑ Staff Reporter (12 August 2012). "Linguist Bhadriraju Krishnamurti dead" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Hyderabad/linguist-bhadriraju-krishnamurti-dead/article3757019.ece. "A Fulbright and Smith-Mundt Fellowship in 1953 paved way for him to pursue masters degree in linguistics at University of Pennsylvania during 1954–55."