மகாத்மா: காந்தியின் வாழ்க்கை, 1869–1948

1968ஆம் ஆண்டைய திரைப்படம்

மகாத்மா: காந்தியின் வாழ்க்கை, 1869-1948 [1] (Mahatma: Life of Gandhi, 1869–1948) என்பது மகாத்மா காந்தியின் வாழ்க்கையை விவரிக்கும் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த ஆவணப்படமாகும். இந்திய அரசின் இந்தியத் திரைப்படப் பிரிவின் ஒத்துழைப்புடன் காந்தி தேசிய நினைவு நிதியம் தயாரித்த இந்தப் படத்தை, விட்டல்பாய் சாவேரி திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். [2] சாவேரி படம் முழுக்க வர்ணனையையும் வழங்யுள்ளார். படம் கருப்பு மற்றும் வெள்ளை, 33 ரீல்கள் (14 அத்தியாயங்கள்) கொண்டுள்ளது. மேலும், 330 நிமிடங்கள் ஓடுகிறது.

Mahatma: Life of Gandhi, 1869–1948
இயக்கம்விட்டல்பாய் சாவேரி
தயாரிப்புகாந்தி தேசிய நினைவு நிதி
இந்தியத் திரைப்படப் பிரிவு
கதைவிட்டல்பாய் சாவேரி
வெளியீடு1968 (1968)
ஓட்டம்330 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம்

காந்தியின் வாழ்க்கைக் கதையையும், அவரது இடைவிடாத உண்மைத் தேடலையும் சொல்லும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் இயங்குபடம், நேரடி புகைப்படம் , அவரது வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பழைய அச்சுப் படங்கள் இடம்பெற்றுள்ளன. கதை பெரும்பாலும் காந்தியின் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி விவரிக்கப்பட்டுள்ளது.

படத்தின் பல பதிப்புகள் உள்ளன. ஆங்கிலத்தில் 5 மணிநேர பதிப்பு உள்ளது. இது 2 மணிநேரம் மற்றும் 16 நிமிடங்கள் இயங்கும் ஒரு குறுகிய பதிப்பு மற்றும் ஒரு மணிநேரம் இயங்கும் குறுகிய பதிப்பும் உள்ளது. இந்தி பதிப்பு 2 மணிநேரம் 20 நிமிடங்கள் இயங்கும், ஜெர்மன் பதிப்பு 1 மணி நேரம் 44 நிமிடங்கள் இயங்கும்.

இதனையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Mahatma: Life of Gandhi, 1869–1948 (1968 - 5hrs 10min)". Channel of GandhiServe Foundation. பார்க்கப்பட்ட நாள் 30 December 2014.
  2. "Vithalbhai Jhaveri". GandhiServe Foundation. Archived from the original on 31 December 2014. பார்க்கப்பட்ட நாள் 30 December 2014.

வெளி இணைப்புகள்

தொகு