மகாபைரவர் கோயில்
மகாபைரவர் கோயில் (Mahabhairav Temple)இந்தியாவின் அஸ்ஸாமில் உள்ள தேஜ்பூர் நகரின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு மலையில் அமைந்துள்ளது. பழமையான இந்த சிவன் கோவில் முதலில் கல்லால் கட்டப்பட்டது. ஆனால், தற்போதுள்ள சிவன் கோவில் புதுப்பிக்கப்பட்டு பைஞ்சுதைப் பூச்சால் கட்டப்பட்டுள்ளது. அஹோம் ஆட்சியின் போது, குறிப்பாக துங்குங்கியா வம்சத்தின் மன்னர்கள் இந்த கோயிலுக்கு ஏராளமான நிலத்தை நன்கொடையாக அளித்தனர். மேலும் கோயிலைக் கவனிக்க பூசாரிகளை நியமித்தனர். சோனித்பூர் துணை ஆணையர் தலைமையிலான நிர்வாகக் குழுவின் மூலம் இந்த கோயிலை இப்போது அசாம் அரசு நிர்வகிக்கிறது. இந்து மதத்தின் சைவக் கிளையின் ஆண்டு விழாவான மகா சிவராத்திரி கோயில் வளாகத்தில் வெகு தொலைவில் இருந்து வரும் பக்தர்களுடன் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. லட்டு, கஞ்சாவின் உண்ணக்கூடிய தயாரிப்பு மற்றும் பால் மற்றும் மசாலாப் பொருட்களுடன் கலந்து, சடங்குகளின்படி சிவபெருமானுக்கு அர்ப்பணித்த பின்னர், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த கோவிலில் பல்வேறு பூசைகளும் நடத்தப்பட்டு, முன்னோர்களின் ஆவி விடுவிக்கப்படுவதைக் குறிக்கும் விதமாக புறாக்களும் விடுவிக்கப்படுகின்றன.
புராணம்
தொகுஇந்த கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டு பாணாசூரன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. இந்த கோயிலின் சிவலிங்கம் 'வாழும் கல்லால்' ஆனது என்று கூறப்படுகிறது. இது பல ஆண்டுகளாக மெதுவாக வளர்ந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது. இக்கோயிலில் சிவபெருமானை வழிபட்டதன் மூலம் பாணாசூரன் செழிப்பு அடைந்ததாக சிலர் நம்புகின்றனர். [1] [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Maha Bhairav Temple, Maha Bhairav Temple Assam, Maha Bhairav Temple in India". Indianmirror.com. பார்க்கப்பட்ட நாள் 10 March 2013.
- ↑ "Online Information about the Mahabhairav Temple of Assam". Assamspider.com. பார்க்கப்பட்ட நாள் 10 March 2013.
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ தளம் பரணிடப்பட்டது 2017-03-26 at the வந்தவழி இயந்திரம்