மகாராட்டிர நாள்
மகாராட்டிர நாள் (Maharashtra Day) என்பது இந்திய மாநிலமான மகாராட்டிரத்தின் ஒரு அரசு விடுமுறை நாளாகும். [1] இது இந்தியாவில் மகாராட்டிர மாநிலம் உருவானதை நினைவுகூரும் நாளாகும். [2] 1 மே 1960 அன்று பம்பாய் மாநிலத்தைப் பிரித்து இந்தப் புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. [1] மராத்தி மொழி பேசும் மக்களுக்காக தனியாக மகாராட்டிர மாநிலம் உருவாக்கப்பட்டதன் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. மகாராட்டிர நாளானது பொதுவாக அணிவகுப்புகள், அரசியல் சொற்பொழிவுகள், விழா போன்றவற்றைக் கொண்டதாக இருக்கும். மேலும் மகாராட்டிரத்தின் வரலாறையும், மரபுகளையும் கொண்டாடும் அரசு மற்றும் தனியார் நிகழ்வுகள் நடக்கும்.
மகாராட்டிர நாள் | |
---|---|
ஜவகர்லால் நேரு, ஒய். பி. சவான், சிறீ பிரகாசா ஆகியோர் 1 மே 1960 அன்று மும்பை ராஜ்பவனில் புதிய மகாராட்டிர மாநிலத்தின் வரைபடத்தை வெளியிட்டனர். | |
பிற பெயர்(கள்) | Maharashtra Din |
கடைபிடிப்போர் | இந்தியா, மகாராட்டிரம் |
முக்கியத்துவம் | பம்பாய் மறுசீரமைப்புச் சட்டம், 1960 மூலம் மகாராட்டிர மாநிலம் உருவாக்கப்பட்டது |
கொண்டாட்டங்கள் | அணிவகுப்பு |
நாள் | 1 மே |
நிகழ்வு | ஆண்டு |
பின்னணி
தொகு1956 மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் மொழிகளின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கான எல்லைகளை வரையறுத்தது. [3] 1950 இல் உருவாக்கபட்ட பம்பாய் மாநிலமானது மராத்தி, குஜராத்தி, குச்சி மற்றும் கொங்கணி போன்ற பல்வேறு மொழிகள் பேசப்படும் வெவ்வேறு பகுதிகளைக் கொண்டதாக இருந்தது. சம்யுக்த மகாராட்டிர சமிதி பம்பாய் மாநிலத்தை இரு மாநிலங்களாகப் பிரிக்கும் இயக்கத்தில் முன்னணியில் இருந்தது. பம்பாய் மாநிலத்தை குசராத்தி மற்றும் குச்சி மொழி பேசும் பகுதிகளை ஒன்றாகவும், மராத்தி மற்றும் கொங்கனி பேசும் பகுதிகளைக் கொண்டு ஒன்றாகவும் என இருமாநிலங்களாக பிரிக்கும் கோரிக்கைக் கொண்டது. [4] [5]
இந்த இயக்கத்தின் விளைவாக இந்திய நாடாளுமன்றத்தால் 1960 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் நாள் பம்பாய் மறுசீரமைப்புச் சட்டம் இயற்றபட்டது. அதன்படி மகாராட்டிரம், குசராத்து என மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இந்தச் சட்டம் 1 மே 1960 இல் நடைமுறைக்கு வந்தது, அதனால்தான் ஆண்டுதோறும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
கடைபிடித்தல்
தொகுஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா அரசு மே முதல் தேதியை பொது விடுமுறை நாளாக அறிவித்து மகாராட்டிர நாளாக கொண்டாடுகிறது. மாநில மற்றும் ஒன்றிய அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் போன்றவற்றிற்கு இந்த விடுமுறை பொருந்தும். பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இந்த நாளை கொண்டாடுகின்றனர். [6]
மரபுகள்
தொகுஒவ்வொரு ஆண்டும் மகாராட்டிர ஆளுநர் உரை நிகழ்த்தும் சிவாஜி பூங்காவில் அணிவகுப்பு நடத்தப்படுகிறது.
வெளிநாட்டினரைத் தவிர்த்து மகாராட்டிரம் முழுவதும் இந்த நாளில் இந்தியர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. [7]
தனித்துவமான வரலாற்று கொண்டாட்டங்கள்
தொகுமகாராட்டிர நாளுக்கான பொன்விழா கொண்டாட்டங்கள் 1 மே 2011 அன்று மகாராஷ்டிரா முழுவதும் நடத்தப்பட்டது.
புதிய திட்டங்கள் துவக்கம்
தொகுமகாராட்டிர மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் துறை பல்வேறு புதிய திட்டங்களை மே 1 அன்று தொடங்கி வைப்பது வழக்கம்.
மராத்தி விக்கிப்பீடியா 1 மே 2003 இல் தொடங்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Public Holidays in Maharashtra, India in 2014 – Office Holidays". http://www.officeholidays.com/countries/india/maharashtra/2014.php.
- ↑ "Maharashtra Day – Maharashtra Day Celebration".
- ↑ "THE STATES REORGANISATION ACT, 1956".
{{cite web}}
: Missing or empty|url=
(help) - ↑ Guha, Ramachandra (2007). India After Gandhi: The History of the World's Largest Democracy.
- ↑ Kaminsky, Arnold P.; Long (23 September 2011). India Today: An Encyclopedia of Life in the Republic.
- ↑ "Public Holiday – 2015" (PDF). மகாராஷ்டிர அரசு. மகாராஷ்டிர அரசு. பார்க்கப்பட்ட நாள் 11 May 2015.
- ↑ "List of dry days to be followed by retail licensee every year".
{{cite web}}
: Missing or empty|url=
(help)