மகாலெட்சுமி அர்ஜூனன்

மலேசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அறிவியலாளர்

மகாலெட்சுமி அர்ஜூனன் (பிறப்பு: 25 மே 1969); (மலாய்: Mahaletchumy Arujanan; ஆங்கிலம்: Mahaletchumy Arujanan); என்பவர் மலேசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அறிவியலாளர் ஆவார்.[1]

மகாலெட்சுமி அர்ஜூனன்
Mahaletchumy Arujanan
மகாலெட்சுமி அர்ஜூனன் தன் தொழில் பயணம் குறித்து உரை நிகழ்த்துகிறார்
பிறப்பு25 மே 1969 (1969-05-25) (அகவை 54)
கிள்ளான், சிலாங்கூர், மலேசியா
பெற்றோர்அர்ஜூனன் பெரியசாமி
மரியாயி
வாழ்க்கைத்
துணை
செல்வமுத்து ராஜா
பிள்ளைகள்கோமளா
தீபா

அனைத்துலக விவசாய உயிரித் தொழில்நுட்பப் பயன்பாட்டு அமைப்பின் (International Service for the Acquisition of Agribiotech Applications) ஒருங்கிணைப்பாளராகப் பணி புரிகிறார்.

அதே வேளையில் மலேசிய உயிரித் தொழில்நுட்பத் தகவல் மையத்தின் (Malaysian Biotechnology Information Center) நிர்வாக இயக்குனராகவும் சேவை செய்கிறார்.[2][3]

வாழ்க்கைக் குறிப்புகள் தொகு

மகாலெட்சுமி அர்ஜூனன், மலேசியா, சிலாங்கூர், கிள்ளான், நகரில் பிறந்தவர். இவருடைய தந்தையார் செல்வமுத்து ராஜா, ஒரு தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணி புரிந்தவர்.

கிள்ளானில் தன் தொடக்க நிலைக் கல்வியைத் தொடங்கினார். 1993-ஆம் ஆண்டில் மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல்; உயிர் வேதியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். 2013-ஆம் ஆண்டில் மலாயா பல்கலைக்கழகத்தில் அறிவியல் தகவல் தொடர்பு துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

நிர்வாக இயக்குநராகப் பொறுப்பு தொகு

 
தாய்லாந்து சியாங் ராய் நகரில் வேளாண் தொழில்நுட்ப பயிலரங்கு

2003-ஆம் ஆண்டு சனவரி மாதம், மலேசிய உயிரித் தொழில்நுட்பத் தகவல் மையத்தில் திட்டமிடல் அதிகாரியாகச் சேர்ந்தார். பின்னர் 2005-ஆம் ஆண்டு மே மாதம், அதே மையத்தின் நிர்வாக இயக்குநராகவும் பொறுப்பு ஏற்றார்.[4]

மலேசியாவின் முக்கிய அமைச்சகங்களுக்கும்; அரசாங்க நிறுவனங்களுக்கும் மலேசிய உயிரித் தொழில்நுட்பத் தகவல் மையத்தை அறிமுகப் படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார். மேலும் அனைத்துலக அமைப்புகளுடன் வலுவான உறவுகளை உருவாக்கினார்.[5][6]

சாதனை விவரங்கள் தொகு

மலேசியப் பெண்கள் வார இதழின் (Malaysian Women's Weekly) 2015 டிசம்பர் இதழில், சிறந்த பெண்களில் ஒருவராக இவர் அங்கீகரிக்கப் பட்டார்.[7]

அமெரிக்க அறிவியல் சஞ்சிகையின் (The Scientific American Worldwide View) 7-ஆவது பதிப்பில் உலகளாவிய உயிரித் தொழில்நுட்பத் துறையில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக இவர் பட்டியலிடப்பட்டு உள்ளார்.[8]

உலக அறிவியல் அகாடமி பரிசு தொகு

மலேசியாவின் முதல் உயிரியல் தொழிநுட்பச் செய்தித்தாள் தி பெட்ரி டிஷ் (The Petri Dish). அதை மகாலெட்சுமி அர்ஜூனன் தான் நிறுவினார்.

2010-ஆம் ஆண்டு, ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான அறிவியல் பொதுப் புரிதலுக்கான உலக அறிவியல் அகாடமி (The World Academy of Sciences) பரிசைப் பெற்றவர்.

தொழில்முறை பணிகள் தொகு

மகாலெட்சுமி அர்ஜூனன் பல அமைப்புகளுக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளார்.[9]

  • மலேசிய அறிவியல், தொழில்நுட்பம் புத்தாக்க அமைச்சின் உயிரியல்சார் அறவியல் மன்றத்தின் ஆலோசகர்.[10]
  • துணை விரிவுரையாளர், அறிவியல் துறை, மலேசியா மோனாஷ் பல்கலைக்கழகம்.[11]
  • தற்காலிகக் குழு, உயிரியல் பாதுகாப்பு, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், மலேசியா[21]

மேற்கோள் தொகு

  1. MUTHIAH, WANI. "Scientist from Klang does country proud". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 March 2022.
  2. "Dr. Maha Arujanan is the global coordinator of the International Service for the Acquisition of Agri-biotech Applications (ISAAA). She is also the executive director of the Malaysian Biotechnology Information Centre (MABIC)". Alliance for Science. பார்க்கப்பட்ட நாள் 10 March 2022.
  3. "Executive director of MABIC Dr Mahaletchumy Arujanan pushes for science literacy by putting research in public domain". www.optionstheedge.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 March 2022.
  4. "Mahaletchumy Arujanan - is a renowned science communicator in the agribiotechnology field and was listed as the world's 100 most influential people in biotechnology by Scientific American Worldview 2015". Science Journalism Forum (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 March 2022.
  5. Crop Biotech Update. "New ISAAA Global Coordinator".
  6. "Dr Mahaletchumy says, women scientists often get discredited in their research and further nudged into the shadows partly due to their bashfulness". Prestige Woman. 24 March 2021. பார்க்கப்பட்ட நாள் 10 March 2022.
  7. "Mahaletchumy Arujanan is also listed in the honorific list of Women in Biotechnology Law and Regulation as part of Biotechnology Law Report 2015 published by Mary Ann Liebert Inc, among 23 other women scientists and lawyers. Maha won the 2010 Third World Academy of Science Regional Prize for Public Understanding of Science for East, Southeast Asia and Pacific Region". பார்க்கப்பட்ட நாள் 10 March 2022.
  8. Wani Mutthiah (20 June 2015). "Mahaletchumy Arujanan listed as one of the 100 most influential people in the field of biotechnology by the 7th edition of The Scientific American Worldwide View: A Global Biotechnology Perspective Journal". The Star. பார்க்கப்பட்ட நாள் 10 March 2022.
  9. "APAARI" (PDF).
  10. MOSTI. "Bioetika". Bioetika. Archived from the original on 6 ஜூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 10 March 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. Monash University. "School of Science". Archived from the original on 16 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 10 March 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாலெட்சுமி_அர்ஜூனன்&oldid=3716516" இலிருந்து மீள்விக்கப்பட்டது