முதலாம் பராக்கிரமபாகு

இலங்கை அரசர்
(மகா பராக்கிரமபாகு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முதலாம் பராக்கிரமபாகு (சிங்களம்: මහා පරාක්‍රමබාහු) அல்லது மகா பராக்கிரமபாகு [1][2] என்பவன் இலங்கையின் பொலன்னறுவை இராச்சியத்தை கி.பி 1153 முதல் 1186 வரை ஆட்சி புரிந்த மன்னர் ஆவார். அரசர் மானாபரணவுக்கும் அரசி ரத்னாவலிக்கும் 1123 ஆம் ஆண்டு தக்கிண தேசத்தின் கேகாலைப் பகுதியில் புங்ககம எனும் கிராமத்தில் பிறந்தார். இவரது பாட்டனார் இலங்கையில் குடிபுகுந்த பாண்டிய இளவரசன் ஆவார். இலங்கையின் முக்கிய மூன்று இராச்சியங்களையும் பராக்கிரமபாகு ஒன்றிணைத்தார். அக்காலத்திலே இவ்விராச்சியத்தின் தலைநகரமாக விளங்கியது பொலன்னறுவை ஆகும். தன்னுடைய தலைநகரை அழகாகப் பேணல், மேற்பார்வை செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தார். இவரின் காலத்தில் நாட்டில் விரிவாக நிர்மாணிக்கப்பட்ட நீர்ப்பாசனத் தொகுதிகள் காணப்பட்டன, நாட்டின் இராணுவப் படைகள் மறுசீரமைக்கப்பட்டன, பௌத்தம் வளர்க்கப்பட்டது, கலைகளும் வளர்க்கப்பட்டன. தென்னிந்தியாவுடனும், மியான்மாருடனும் பராக்கிரமபாகு இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இவரின் காலத்தில் இலங்கை தெற்காசியாவின் தானியக் களஞ்சியம் என அழைக்கப்பட்டது.[சான்று தேவை] இவரே பராக்கிரம சமுத்திரத்தையும் கட்டுவித்தார். "வானிலிருந்து விழும் ஒரு துளி நீரையும் விவசாயத்திற்குப் பயன்படுத்தாது வீணாகக் கடலைச் சென்றடைய விடமாட்டேன்" என்பது பராக்கிரமபாகுவின் புகழ்மிக்க கூற்றுக்களில் ஒன்றாகும்.[3]

முதலாம் பராக்கிரமபாகு
பொலன்னறுவையின் அரசர்
ஆட்சி1153–1186
முன்னிருந்தவர்இரண்டாம் கஜபாகு
இரண்டாம் விஜயபாகு
அரசிஅரசி லீலாவதி
மரபுபொலன்னறுவை அரசகுடும்பம்
தந்தைஅரசர் மானாபரண
தாய்அரசி ரத்னாவலி
பிறப்பு1123
புங்ககம
இறப்பு1186
பொலன்னறுவை

பராக்கிரமபாகு தனது இளம் வயதை தனது மாமன்மாரான கீர்த்தி சிறீ மேகன், ஸ்ரீ வல்லப போன்றோரின் அரண்மனைகளில் கழித்தார். இவர்கள் முறையே தக்கிண தேசம் மற்றும் உருகுணை இராச்சியத்தின் மன்னர்கள். அத்துடன் இராசரட்டையின் இரண்டாம் கஜபாகுவுடனும் இளமையில் நட்புறவு வைத்துள்ளார். சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடனும் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தார்.[4]

பின்னணி

தொகு

12ஆம் நூற்றாண்டுக்கு முன்

தொகு

இலங்கைத் தீவானது ஒருகாலத்தில் சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. கி.பி. 993 இல் இலங்கையில் முதலாம் இராஜராஜ சோழ மன்னன் படையெடுப்பு நடாத்தினான். முதலாம் விஜயபாகு (1055–1100) மன்னனின் ஆட்சிக்கு முன் சோழர்களே இலங்கையை ஆதிக்கம் செய்துவந்தனர். தன்னுடைய சிறந்த ஆட்சியினாலும் படையெடுப்பாலும் சோழர்களை இலங்கையிலிருந்து விரட்டி புராதன தலைநநகரமான அனுராதபுரத்தை கைவிட்டு திட்டமிடப்பட்ட புதிய நகரமான பொலன்னறுவைக்கு (புலத்தி நகர்) தலைநகரை மாற்றிக்கொண்டான். முதலாம் விக்கிரமபாகு மன்னன் (1111–1132) இலங்கையை மூன்று பிரிவுகளாகப் பிரித்தான். அவையாவன: இராசரட்டை, உருகுணை, தக்கிண தேசம் என்பவையாகும். இருப்பினும் இம்மூன்றிலும் விக்கிரமபாகு ஆண்டுவந்த இராசரட்டையே சமய ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் முக்கியமான பிரதேசமாகக் கருத்தப்பட்டது. தக்கிண தேசத்து மன்னர்களான மானாபரண மன்னன் அவரது தம்பிமாரான ஸ்ரீ வல்லப மன்னன் மற்றும் கீர்த்தி ஸ்ரீ மேகன் போன்றோர்களுக்கும் மற்றும் உருகுணை மன்னர்களுக்கும் இராசரட்டையின் அரியணையைப் பிடிப்பதில் போட்டியிருந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. Paranavitana, History of Ceylon, p. 199
  2. Encyclopædia Britannica, Parakramabahu I
  3. Culavamsa, LXVIII, 8
  4. Kenneth Hall, "Economic History of Early South Asia", in Nicholas Tarling (ed), The Cambridge History of South East Asia, Vol. I, Cambridge 1994

உசாத்துணைகள்

தொகு
  • Paranavitana, Senarat; Nicholas, Cyril Wace (1961). A Concise History of Ceylon. Colombo: Ceylon University Press. இணையக் கணினி நூலக மைய எண் 465385.
  • Muller, E.B., Ancient Inscriptions in Ceylon, Trubner & Co., London 1883
  • Parker, H., Ancient Ceylon: An Account of the Aborigines and of Part of the Early Civilisation பரணிடப்பட்டது 2006-09-27 at the வந்தவழி இயந்திரம், Luzac, London 1909. Retrieved 7 December 2006.
  • de Silva, K. M. (1981). A History of Sri Lanka. Colombo: University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-04320-0.

மேலும் வாசிக்க

தொகு
  • Mitton, G.E., The Lost Cities of Ceylon, J.Murray, London 1916
  • Perera, L.H.H., Additional chapters to H.W. Codringto

n’s A short history of Ceylon, Macmillan, London 1952.

வெளி இணைப்புகள்

தொகு
முதலாம் பராக்கிரமபாகு
பிறப்பு: ? 1123 இறப்பு: ? 1186
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் பொலநறுவையின் மன்னன்
1153–1186
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_பராக்கிரமபாகு&oldid=3823151" இலிருந்து மீள்விக்கப்பட்டது