மகிரா ஆந்தை
மகிரா ஆந்தை (Makira owl) மகிரா புள்ளி ஆந்தை என்றும் அழைக்கப்படும் ஏதேன் ரோசோஆக்சில்லாரிசு என்பது இசுட்ரிகிடே குடும்பத்தைச் சேர்ந்த நடுத்தர அளவிலான ஆந்தை சிற்றினமாகும். இது மக்கிராவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இது முன்பு சாலமன் ஆந்தை சிற்றினத்தின் துணையினமாகக் கருதப்பட்டது.[3] மகிரா ஆந்தை அயன அயல் மண்டலத்திலும் வெப்பமண்டல ஈரப்பதமான தாழ் நிலங்களின் வாழ்விடங்களை விரும்புகிறது. இது உகி தீவு மற்றும் ஒவாரிகி வரை காணப்படலாம்.[4]
மகிரா ஆந்தை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ஏதேன்
|
இனம்: | A. roseoaxillaris
|
இருசொற் பெயரீடு | |
Athene roseoaxillaris (கார்ட்லெட், 1929) | |
வாழக்கூடிய
வாழ்வதாக கருதப்படும்
| |
வேறு பெயர்கள் | |
|
பரவலும் வாழிடமும்
தொகுபெரும்பாலும் மகிரா தீவில் காணப்படும் மகிரா ஆந்தை சாலமன் தீவுகளைப் பூர்வீகமாகக் கொண்டது. இது அடர்த்தியான வெப்பமண்டல மழைக்காடுகளில் வாழ்கிறது. இந்த சிற்றினம் பெரும்பாலும் நீர் ஆதாரங்களுக்கு அருகில் காணப்படும். மேலும் இவை பிரதான மற்றும் இரண்டாம் நிலை காடுகளில் காணப்படுகின்றன. இது ஆழமான தாவரங்களை விரும்புவதால் சாத்தியமான எதிரிகளிடமிருந்து எளிதில் மறைந்து தப்பிக்க முடியும்.[5]
உணவு
தொகுமகிரா ஆந்தைகள் பூச்சிகள் மற்றும் பறவைகள் போன்ற சிறிய விலங்குகளை உண்ணுகின்றன. இரவு பார்வை மற்றும் தீவிரமான செவிப்புலன் மூலம் உணவை இவை கண்டுபிடிக்கும். பொதுவாக இது ஒரு கிளையில் அமர்ந்து வேட்டையாடும். இந்த ஆந்தை இதன் ஆழ்ந்த பார்வை காரணமாக வேட்டையாடவும் இரையைப் பிடிக்கவும் முடிகிறது.[6]
உடலமைப்பு
தொகுமகிரா ஆந்தையின் பழுப்பு நிற இறகுகள், பிரகாசமான மஞ்சள் கண்கள் மற்றும் வட்டமான தலை அனைத்தும் வனப்பகுதி சூழலுடன் நன்கு மறைந்து வாழ உதவுகின்றன. குறிப்பாக இதன் உரோசா நிற அடிப்பகுதி மறைப்புகள் வனப்பரப்புடன் ஒத்துப்போகின்றது. இதன் அளவு மற்றும் தனித்துவமான அடையாளங்களால் இப்பகுதியில் உள்ள பிற ஆந்தை இனங்களிலிருந்து இவற்றை எளிதில் வேறுபடுத்தலாம்.[7]
நடத்தை
தொகுமகிரா ஆந்தைகள் தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை ஆழமான விதானத்தில் செலவிடுகின்றன. இங்கு இவை நாள் முழுவதும் ஓய்வெடுக்கின்றன. இது அமைதியாக இருப்பதாகக் கூறப்பட்டாலும் எப்போதாவது இரவில் சில மென்மையான கூச்சல்களை வெளியிடுகிறது. குறிப்பாக இனச்சேர்க்கையின் போது. மகிரா ஆந்தை மற்ற ஆந்தை இனங்களுக்கு மாறாக, அறியப்பட்ட வரம்பை விட்டு வெளி காணப்படுவதற்கான சான்றுகள் குறைவாகவே உள்ளன. வாழிட இழப்பு மற்றும் வாழிடத் துண்டாக்கக் காரணமாக மிகச் சமீபத்திய மதிப்பீடுகளின்படி "அச்சுறுத்தலுக்கு அண்மிய இனமாக" என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இனச்சேர்க்கை காலத்தில் இணைகள் ஒன்றாகக் காணப்பட்டாலும், இவை பொதுவாகத் தனிமையாக இருக்கும்.[1]
பாதுகாப்பு நிலை
தொகுபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் மகிரா ஆந்தையைப் பெரும்பாலும் வாழ்விட இழப்பு காரணமாக அழிவாய்ப்பு இனமாக வகைப்படுத்தியுள்ளது. விவசாய வளர்ச்சி மற்றும் மரங்களை வெட்டுதல், மகிரா தீவு காடழிப்பு காரணமாக இந்தச் சிற்றினம் கடுமையாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. ஆந்தைகள் ஒரே ஒரே தீவில் மட்டுமே காணப்படுகிறது. இது வாழிட சீரழிவு போன்ற சுற்றுச்சூழல் அழுத்தங்களால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை. மனிதச் செயல்பாட்டின் விளைவுகளைக் குறைப்பதும், மகிராவின் மீதமுள்ள முதன்மை காடுகளைப் பாதுகாப்பதும் மகிரா ஆந்தையைப் பாதுகாப்பதற்கான மனிதர்களின் முக்கிய முயற்சிகளாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Ninox roseoaxillaris". IUCN Red List of Threatened Species 2016: e.T45449334A95157057. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T45449334A95157057.en. https://www.iucnredlist.org/species/45449334/95157057. பார்த்த நாள்: 18 February 2023.
- ↑ "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 18 February 2023.
- ↑ "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 February 2023.
- ↑ "Ninox roseoaxillaris" (in அமெரிக்க ஆங்கிலம்). BirdLife International. 2023. பார்க்கப்பட்ட நாள் 18 February 2023.
- ↑ "Makira Owl - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-16.
- ↑ Erica (2020-10-29). "Silent Hunters: Seven Facts About Owls' Hunting and Eating Habits". American Bird Conservancy (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-16.
- ↑ "Owl Adaptations I Owl Research Institute". owlresearchinstitute (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-16.