மகுவா
மகுவா (Mahuva), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் பவநகர் மாவட்டத்தில் உள்ள மகுவா வருவாய் வட்டத்தின் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது சௌராட்டிரா தீபகற்பத்தில் அமைந்த காம்பே வளைகுடாவில் உள்ள கடற்கரை நகரம் ஆகும். மகுவா நகரம் பவநகருக்கு தெற்கே 94.4 கிலோ மீட்டர் தொலைவிலும்; தரங்கா சமணக் கோயிக்கு தெற்கே 71.4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புகழ்பெற்ற சமண சமய அறிஞர் வீரசந்த் காந்தி மகுவா நகரத்தில் பிறந்தவர்.
மகுவா
மதுமதி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 21°05′00″N 71°48′00″E / 21.0833°N 71.8000°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | பவநகர் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | மகுவா நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 7.07 km2 (2.73 sq mi) |
ஏற்றம் | 128 m (420 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 98,519 |
• அடர்த்தி | 14,000/km2 (36,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | குஜராத்தி மொழி, இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 364290 |
தொலைபேசி குறியீடு | (02844) |
வாகனப் பதிவு | GJ-4 |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 13 வார்டுகளும், 17,607 வீடுகளும் கொண்ட மகுவா நகராட்சியின் மக்கள் தொகை 98,519 ஆகும். அதில் ஆண்கள் 50,588 மற்றும் பெண்கள் 47,931 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 947 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 79.2% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,439 மற்றும் 129 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 72.96%, இசுலாமியர் 25.35% சமணர்கள் 1.45%, கிறித்தவர்கள் 0.14% மற்றும் பிறர் 0.10% ஆகவுள்ளனர்.[1]
தட்ப வெப்பம்
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், மகுவா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 23 (73) |
19 (66) |
26 (79) |
33 (91) |
30 (86) |
27 (81) |
22 (72) |
29 (84) |
28 (82) |
31 (88) |
28 (82) |
22 (72) |
26.5 (79.7) |
தாழ் சராசரி °C (°F) | 13 (55) |
13 (55) |
13 (55) |
14 (57) |
19 (66) |
22 (72) |
22 (72) |
22 (72) |
22 (72) |
24 (75) |
20 (68) |
16 (61) |
18.3 (65) |
ஆதாரம்: World Weather Online |