மகேந்திரா உலக நகரம், புது சென்னை

மகேந்திரா உலக நகரம், புது சென்னை (ஆங்கிலம்: Mahindra World City, New Chennai aka Mahindra City) இயக்கத்திலிருக்கக் கூடிய இந்தியாவின் முதல் சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகும். மகேந்திரா குழுமத்தாலும் தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகத்தாலும்(டிட்கோ-TIDCO) பொதுத்துறை,-தனியார்துறை முனைவால் உருவாக்கப்பட்ட இது இந்தியாவின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட வணிக நகரம் ஆகும்.[1][2][3]

மகேந்திரா சிட்டிக்குள் அமைந்துள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கட்டடம்
மகேந்திரா சிட்டிக்குள் அமைந்துள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கட்டடம்

அமைவிடம்

தொகு

மகேந்திரா உலக நகரம், புது சென்னை என்று குறிப்பிடப்பட்டாலும் இந்நகரம் சென்னையிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 45-ல் செங்கல்பட்டுக்கு அருகில்தான் அமைந்துள்ளது. ஏறத்தாழ 1,500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்நகரம் சாலை வழியாகவும் தொடர்வண்டி வழியாகவும் எளிதில் அடையும் வகையில் அமைந்துள்ளது. இந்நகருக்கு அருகில் பரணூர் தொடர்வண்டி நிலையம் அமைந்துள்ளது.

 
சென்னை மகேந்திரா உலக நகரத்தின் வளாகம்


மேற்கோள்கள்

தொகு
  1. "World City becomes a global draw". Financial Times. 6 March 2007. http://www.ft.com/intl/cms/s/0/ced31a5a-cbf9-11db-a661-000b5df10621.html#axzz35CrVjuBj. பார்த்த நாள்: 20 June 2014. 
  2. "BMW rolls out luxury variant ‘3 Series Gran Turismo’". The Hindu Business Line. 15 March 2014. http://www.thehindubusinessline.com/companies/bmw-rolls-out-luxury-variant-3-series-gran-turismo/article5789124.ece. பார்த்த நாள்: 20 June 2014. 
  3. "Mahindra World School wins sanitation award". The New Indian Express. 3 December 2012 இம் மூலத்தில் இருந்து 5 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305202736/http://www.newindianexpress.com/cities/chennai/article1364091.ece. பார்த்த நாள்: 20 June 2014.