மகேந்திர குமார் வர்மா

இந்திய இயற்பியலாளர்

மகேந்திர குமார் வர்மா (Mahendra Kumar Verma) ஓர் இந்திய இயற்பியலாளர் ஆவார். 1966 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். திரவ இயக்கவியல், கொந்தளிப்பு மற்றும் நேரியல் அல்லாத இயக்கவியல் ஆகிய பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.

மகேந்திர குமார் வர்மா
Mahendra Kumar Verma
பிறப்பு27 மே 1966
துறைகொந்தளிப்பு ஓட்டம், பாய்ம விசையியல்
பணியிடங்கள்இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர்
கல்வி கற்ற இடங்கள்இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (B.Tech. 1988),
மேரிலன்ட் பல்கலைக்கழகம் (காலேஜ் பார்க்) (Ph.D. 1994)
ஆய்வேடுசூரியக்காற்றின் பரிணாம வளர்ச்சியில் காந்தநீர்ம இயக்கவியல் கொந்தளிப்பு மாதிரிகள் (1994)
இணையதளம்
https://sites.google.com/view/mahendra-verma/

1988 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் கணினி அறிவியலில் இளநிலைப் பட்டமும், 1994 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்திலுள்ள கல்லூரிப் பூங்கா நகரில் அமைந்துள்ள மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டமும் பெற்றார். 2006 ஆம் ஆண்டில் வர்மாவுக்கு இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் சுவர்ண செயந்தி உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் உயர்-செயல்திறன் கணினி பங்களிப்புகளை கௌரவிக்கும் அப்துல் கலாம் கிரே உயர்-செயல்திறன் கணினி விருது வழங்கப்பட்டது.[1][2] இதைத்தவிர வர்மா இந்திய தேசிய அறிவியல் அகாதமியிலும்[3] இந்திய அறிவியல் அகாதமியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் உள்ளார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Mahendra K. Verma". Indian Institute of Technology Kanpur. பார்க்கப்பட்ட நாள் 2017-03-12.
  2. "2nd Annual Awards Honor HPC Contributions in India". Cray Inc. 29 May 2018. Archived from the original on 3 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 3 August 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Fellows Elected 2019" (PDF). Indian National Science Academy. Archived from the original (PDF) on 2 August 2019. பார்க்கப்பட்ட நாள் 2 August 2019.
  4. "Fellow Profile". Indian Academy of Sciences. Archived from the original on 23 April 2020. பார்க்கப்பட்ட நாள் 23 April 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேந்திர_குமார்_வர்மா&oldid=3566033" இலிருந்து மீள்விக்கப்பட்டது