மக்கள் கோயில்
மக்கள் கோயில் (Peoples Temple) என்பது 1955 ஆம் ஆண்டில் ஜிம் ஜோன்ஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சமூக அமைப்பாகும். 1970களின் நடுப்பகுதிக்குள் கலிபோர்னியாவில் பல இடங்களில் இதன் கிளைகள் நிறுவப்பட்டன. இதன் தலைமையகமும் கலிபோர்னியாவில் உள்ளது. கயானாவில் ஜோன்ஸ்டவுன் என்ற இடத்தில் இவ்வமைப்பின் கிளையொன்றில் 1978, நவம்பர் 18 ஆம் நாள் 900 பேர் வரையில் இறந்த நிகழ்வு இவ்வமைப்பு பற்றி உலகறியச் செய்த நிகழ்வாகும்.
ஜோன்ஸ்டவுன் நகரில் இடம்பெற்ற நிகழ்வு அமெரிக்காவின் வரலாற்றில் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்கு முன்னர் ஒரே நாளில் பெரும் தொகையானோர் இயற்கை அழிவல்லாத நிகழ்வு ஒன்றில் இறந்தது இதுவே ஆகும். இதன் போது கொலை செய்யப்பட்டவர்களில் ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர் லியோ ராயன் என்பவரும் ஒருவர்.
வரலாறு
தொகுகம்யூனிசத் தத்துவத்தால் கவரப்பட்ட ஜிம் ஜோன்ஸ் மார்க்சியத்தை கிறிஸ்தவத் தேவாலயங்களில் பயன்படுத்தத் திட்டமிட்டார். இன்டியனாபொலிஸ் மாநிலத்தில் 1952 ஆம் ஆண்டு மெதடிஸ்த தேவாலயத்தில் மதகுருவானார். அங்கிருந்து அவர் விலகி தனக்கெனத் தனியே ஒரு தேவாலயத்தை நிறுவி செயற்படலானார். 1956 ஆம் ஆண்டில் அவ்வாலயத்துக்கு "Peoples Temple Full Gospel Church" என்ற பெயரைச் சூட்டி நிதி சேகரிக்கலானார். இவரது கோயில் குறிப்பாக ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கிடையே பிரபலமானது.
கயானா கோயில் நிகழ்வு
தொகு1974 ஆம் ஆண்டில் மக்கள் கோயில் கயானாவில் நிலம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து மக்கள் கோயில் விவசாயத் திட்டம் என்ற பெயரில் ஒரு பெரும் திட்டத்தை ஆரம்பித்தது. அப்பஓது அங்கிருந்த மக்கள் 50 பேர் மட்டுமே. ஜிம் ஜோன்ஸ் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கயானாவுக்குக் குடி பெயர்ந்தார். அவருடன் அவரது கோயில் உறுப்பினர்களும் இடம்பெயர்ந்தனர். கயானா கோயிலின் மக்கள் தொகை 1978 இல் 900 ஆக அதிகரித்தது. அங்கு குடி பெயர்ந்தவர்களுக்கு அக்கோயிலை சுவர்க்க புரியாகவும், உலகின் தீய பழக்கங்கள் அற்ற பிரதேசமாக மாற்றியமைக்கவும் உறுதிமொழி கொடுக்கப்பட்டது.
இக்கோயில் முறைகேடுகள் நடைபெறுவதாக கூறப்பட்ட புகார்களை விசாரிக்கவென அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் லியோ ராயன் 1978, நவம்பர் 17 இங்கு வருகை தந்தார். அக்கோயின் பல உறுப்பினர்கள் கோயிலை விட்டு வெளியேறுவதற்கு தமது விருப்பத்தை அவருக்குத் தெரிவித்தனர். இதனை அடுத்து நவம்பர் 18 ஆம் நாள் மாலையில் இவர்கள் ராயனுடன் அங்கிருந்து வெளியேறினர். கோயில் பாதுகாப்பு அதிகாரிகள் இவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் ராயன், மற்றும் மூன்று ஊடகவியலாளர்கள் உட்பட ஐவர் கொல்லப்பட்டனர்.
அதே நாள் இரவு ஜிம் ஜோன்ஸ் தனது கோயில் உறுப்பினர்கள் அனைவரையும் சயனைட் கலந்த பானம் அருந்த உத்தரவிட்டார். ஜிம் ஜோன்ஸ் துப்பாக்கிச் சூடு பட்டு இறந்ததாகப் பின்னர் அறியப்பட்டது. அத்துடன் அவரது உடலில் போதை மருந்து அதிகளவில் ஏற்றப்பட்டிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் இந்நிகழ்வில் 918 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 270 பேர் சிறுவர்கள்[1].
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- San Diego State University: Extensive site with source documents, list of dead, pictures
- Audio Recording of Jonestown Suicide
- Transcription of Suicide Tape பரணிடப்பட்டது 2014-12-15 at the வந்தவழி இயந்திரம்
- Isaacson, Barry. From Silver Lake to Suicide: One Family's Secret History of the Jonestown Massacre பரணிடப்பட்டது 2012-10-23 at the வந்தவழி இயந்திரம்