மக்வான்பூரின் சேனர்கள்
மக்வான்பூர் சேனர்கள் (Senas of Makwanpur) நேபாளத்தின் மிதிலைப் பகுதியின் வடக்குப் பகுதிகளில் அமைந்திருந்த ஒரு பேரரசு ஆகும்.[3][4] இவர்களின் வரலாற்றின் ஒரு பகுதியாக, 1675 வரை, அவர்கள் தர்பங்கா இராச்சியத்திற்கு அடிபணிந்து ஆட்சி செய்து வந்தனர்.[5] மேலும் அவர்களுக்கு கப்பம் செலுத்தி வந்தனர். மக்வான்பூர் போருக்குப் பின்னர் நேபாளத்தை ஒருங்கிணைத்த போது பிருத்வி நாராயண் ஷாவால் நேபாளத்துடன் இணைக்கப்பட்டனர்.[6] போரில் மக்வான்பூர் வீரர்களில் 60 கோர்காலி வீரர்கள் காயமடைந்தனர். மேலும், 400 வீரர்கள் இறந்தனர். [6]
மக்வான்பூரின் சேனர்கள் मकवानपुर | |||||||
---|---|---|---|---|---|---|---|
1518–1762 | |||||||
தலைநகரம் | மக்வான்பூர் | ||||||
பேசப்படும் மொழிகள் | மைதிலி (அலுவல் மொழி)[1][2] | ||||||
சமயம் | இந்து சமயம் | ||||||
வரலாற்று சகாப்தம் | இடைக்கால நேபாளம் | ||||||
• தொடக்கம் | 1518 | ||||||
• முடிவு | 1762 | ||||||
|
தோற்றம்
தொகுவங்காளத்தில் சென் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, இவர்களின் சந்ததியினர் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றதாக நம்பப்படுகிறது. மிதிலையின் வடக்குப் பகுதிகளில் ஒரு குடும்பம் குடியேறியதாகவும் நம்பப்படுகிறது. 13 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் நவீனகால சப்தரி மாவட்டத்திலுள்ள ரூபநகரில் முதலில் குடியேறிய முகுந்தசேனா என்ற சேனா குடும்பத்தின் உறுப்பினரால் மக்வான்பூர் குடும்பம் நிறுவப்பட்டது. மக்வான்பூர் பகுதியை கைப்பற்றும் வரை அவர் தனது ஆட்சியை மெதுவாக விரிவுபடுத்தினார். இராச்சியம் பால்பாவை நோக்கி விரிவடைந்து பின்னர் ராஜாபூர், தனஹு, லாமா, பியூதன், மதரியா, தர்ச்சா, ரைசிங்க, விநாயகப்பூர் மற்றும் குல்மி ஆகிய பகுதிகளிம் விரிவடைந்தது. [8]
1631 முதல் 1672 வரை ஆட்சி செய்த ஹரிஹரசேனன் என்ற மன்னன், ஒரு முஸ்லிம் நவாப்பின் கீழ் இருந்த கோந்த்தவரா பகுதியைக் கைப்பற்றிய பின்னர் இந்துபதி என்ற பட்டத்தை வைத்துக் கொண்டார். [8]
ஜகதசேனனின் கல்வெட்டு
தொகுமக்வான்பூர் இளவரசரான ஜகதசேனாவின் கல்வெட்டு, ஜனக்பூரில் ஜானகி ராம் மடாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது மாநிலத்தின் பொருளாதார நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.[9]
ஜானகி ராம் மடத்திற்கு மக்வான்பூர் சாம்ராஜ்யத்தால் நிதி உதவி செய்ய முடியவில்லை என்று கல்வெட்டு விவரிக்கிறது. [10]
சான்றுகள்
தொகு- ↑ Das, Basudevlal (2013). "Maithili in Medieval Nepal: A Historical Apprisal". Academic Voices 3: 1–3. doi:10.3126/av.v3i1.9704. https://doi.org/10.3126/av.v3i1.9704.
- ↑ Jha, Amar Kant (2009). "Planning Maithili for social change in Nepalese context". Contributions to Nepalese Studies 36. https://go.gale.com/ps/i.do?id=GALE%7CA215924574&sid=googleScholar&v=2.1&it=r&linkaccess=abs&issn=03767574&p=AONE&sw=w&userGroupName=anon%7E77ca121e.
- ↑ Basudevlal Dad (2014). "The Sena Dynasty: From Bengal to Nepal". Academic Voices 4.
- ↑ Vaidya, Tulasi Rama Vaidya (1985). Crime and Punishment in Nepal: A Historical Perspective. Bini Vaidya and Purna Devi Manandhar. p. 65.
- ↑ Ansari, Tahir Hussain (2019). Mughal Administration and the Zamindars of Bihar. Routledge. p. 214. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781000651522.
- ↑ 6.0 6.1 Hamal, Lakshman B. (1995). Military History of Nepal (in ஆங்கிலம்). Sharda Pustak Mandir. p. 113.
- ↑ Dharamdasani, M. D. (1997). Nepal in Transition: Studies on Contemporary Issues & Trends. Rajdhani Publications. p. 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780785574439.
- ↑ 8.0 8.1 Basudevlal Dad (2014). "The Sena Dynasty: From Bengal to Nepal". Academic Voices 4.Basudevlal Dad (2014).
- ↑ Das, Basudevlal (2012). "The Banjama Inscription of Jagatasena". Academic Voices 2. https://www.nepjol.info/index.php/AV/article/view/8276.
- ↑ Das, Basudevlal (2012). "The Banjama Inscription of Jagatasena". Academic Voices 2. https://www.nepjol.info/index.php/AV/article/view/8276.Das, Basudevlal (2012).