மங்கலநாத் கோயில்
மங்கலநாத் கோயில் (Mangalnath Temple) என்பது மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இது நகரின் காவல் தெய்வமான மகாதேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஷிப்ரா நதிக்கரையில் அமைந்துள்ள இந்த கோயில், நகரின் மிகவும் சுறுசுறுப்பான கோவில்களில் ஒன்றாக உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மச்ச புராணத்தின் படி, இது செவ்வாய் கிரகத்தின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது.[1] செவ்வாய் கிரகத்தின் தெளிவான பார்வைக்கு பிரபலமானது. எனவே வானியல் ஆய்வுகளுக்கு ஏற்றது எனச் சொல்லப்படுகிறது.[2][3][4] மகந்த் ராசேந்திர பார்தி என்பவர் கோயிலின் அதிகாரபூர்வ கதிபதி ஆவார். இந்த கோயில் செவ்வாய் தோஷ நிவாரண பூஜைக்கு பிரபலமானதாக அறியப்படுகிறது.
இணைப்பு
தொகுவிமானம் மூலம் - அருகிலுள்ள விமான நிலையம் தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையம் ஆகும், இது கோயிலில் இருந்து 53 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த விமான நிலையம் நாட்டின் பல முக்கிய நகரங்களிலிருந்து விமானங்களைப் பெறுகிறது.
சாலை வழியாக - உஜ்ஜைனியை மாநிலம் மற்றும் நாட்டின் பல நகரங்களுடன் இணைக்கும் வழக்கமான பேருந்து சேவைகள் உள்ளன.
தொடருந்து மூலம் - உஜ்ஜைனியில் மேற்கு ரயில்வே மண்டலத்தின் ஒரு பகுதியாக தொடருந்து நிலையம் உள்ளது. நிலையத்தின் குறியீடு UJN ஆகும். பல பெரிய நகரங்களுக்கு இங்கு தொடர்வண்டிகள் எளிதாகக் கிடைக்கின்றன.[5]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "मंगल देव से जुड़ा है उज्जैन के इस मंदिर का रहस्य!". 2020-11-11. பார்க்கப்பட்ட நாள் 2021-11-23.
- ↑ "Home".
- ↑ People throng city temples on New Year
- ↑ Man regularly sending spiritual messages on WhatsApp declared spiritual guru
- ↑ "Mangalnath | District Ujjain, Government of Madhya Pradesh | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-23.