மசக்கை
மசக்கை (Morning sickness அல்லது nausea gravidarum ) என்பது பெண்களில் கருவுற்ற ஆரம்ப நாட்களில் காணப்படும் உடற்சோர்வு, வாந்தி, மயக்கம் முதலான அசாதாரண உடல்நிலையாகும். இது பொதுவாக கருவுறும் பெண்களில் அரைவாசிக்கு மேல் ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது. அனேகமாக காலைவேளைகளிலே இது ஏற்பட்டு பின் படிப்படியாக குறைவதுண்டு. கருவுற்று முதல் 12 வாரங்கள் வரைக் காணப்படும்.
மசக்கையின் போது உணவை வாயருகே கொண்டு சென்றாடலே ஓங்காளமும் வாந்தியும் ஏற்படும். பலருக்குப் பசி எடுப்பதில்லை. சிலரில் பசி எடுத்தாலும் சாப்பிட முடிவதில்லை. வியர்வை மணம், புகை, எண்ணெய் வாசனை எதை நுகர்ந்தாலும் வாந்தி வரும். இவ்வாறு வாந்தி காரணமாக நீரிழப்பு ஏற்பட்டு உடல் வறட்சி அடைவதனால் குருதி அமுக்கம் குறைவடைந்து உடல் சோர்வு காணப்படும்.
காலை நோய்க்கான காரணம் பொதுவாக அறியமுடியவில்லை. ஆனால் மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி என்ற இயக்குநீர் அளவின் மாறுபாடோடு தொடர்புடையதாக இருக்கலாம். [1] பரிணாமத்தின் அடிப்படையில் காணும்போது காலை நோயானது பயனுள்ளதாக இருக்கும் என்று சிலர் முன்மொழிகின்றனர். [2] பிற சாத்தியமான காரணங்கள் நிராகரிக்கப்பட்ட பின்னரே நோயின் தன்மையறிதல் வேண்டும். [3] வயிற்று வலி, காய்ச்சல் மற்றும் தலைவலி பொதுவாக காலை வியாதிகள் இல்லை.
கர்ப்பத்திற்கு முன் பெற்றோர் ரீதியான வைட்டமின்களை உட்கொள்வது ஆபத்தை குறைக்கும். [4] லேசான நிகழ்வுகளுக்கு எளிதில் செரிமானமா உணவைத் தவிர வேறு சிகிச்சை தேவையில்லை. [5] [6] [4] சிகிச்சையின் ஆரம்பத்தில், டாக்ஸிலமைன் மற்றும் பைரிடாக்சின் கலவையானது பரிந்துரைக்கப்படுகிறது. [4] [7]இவ்வைக சிகிச்சைக்கு இஞ்சி பயனுள்ளதாக இருக்கும் என்று சில சான்றுகள் குறிக்கின்றது.
மசக்கைக்கான காரணங்கள்
தொகுகருத்தரித்தல் காரணமாக
- குருதியில் ஈத்திரோசன் இயக்குநீர்யின் அளவு அதிகரித்தல். கருத்தரிப்பின்போது ஈத்திரோசன் நூறுமடங்கு அளவிலதிகரிக்கும் என சொல்லப்படுகின்றது.[8][நம்பகத்தகுந்த மேற்கோள்?] எவ்வாறயினும் பெண்களில் ஈத்திரோசன் மற்றும் பிலுரூபின் மட்ட வேறுபாடுகள் காரணமாக நோய் நிலைமை தோன்றுமா? இல்லையா? என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை.[9]
- சூல்வித்தகத்திலிருந்து சக்தி குழந்தைக்கு செல்வதால் உடலின் குருதி வெல்லத்தின் அளவு குறைவது. இது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்படவில்லை.[10]
- குறைப் பிரசவங்களைத் த்டுக்கும் வகையில் கருப்பைத் தசைகளை தளரச் செய்வதற்காக சுரக்கப்படும் புரசெத்திரோன் உதரப்பகுதியியும் தளர்த்தும். இதனால் அதிகளவு உதரச்சாறு சுரப்பது வாந்திக்கு வழிவகுக்கும்.
மசக்கை ஏற்படுத்தும் பாதுகாப்பு முறை
தொகுமருத்துவ முறைகள்
தொகுசான்றாதாரங்கள்
தொகு- ↑ .
- ↑ .
- ↑ "Practice Bulletin Summary No. 153: Nausea and Vomiting of Pregnancy". Obstetrics and Gynecology 126. September 2015. பப்மெட்:26287781.
- ↑ 4.0 4.1 4.2 .
- ↑ .
- ↑ "Pregnancy". Office on Women's Health. September 27, 2010. Archived from the original on 10 December 2015. பார்க்கப்பட்ட நாள் 5 December 2015.
- ↑ .
- ↑ "First Trimester Pregnancy". The Visible Embryo. பார்க்கப்பட்ட நாள் 2008-07-06.
- ↑ n Elizabeth Bauchner; Wendy Marquez. "Morning Sickness: Coping With The Worst". NY Metro Parents Magazine. பார்க்கப்பட்ட நாள் 2008-07-06.
- ↑ Erick, Miriam (2004). Managing Morning Sickness: A Survival Guide for Pregnant Women. Bull Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-923521-82-8. பார்க்கப்பட்ட நாள் 2008-07-06.