மசுகெலியா

இலங்கையில் உள்ள இடம்

6°50′9″N 80°34′13″E / 6.83583°N 80.57028°E / 6.83583; 80.57028

மஸ்கெலியா

மஸ்கெலியா
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - நுவரெலியா
அமைவிடம் 6°48′N 80°36′E / 6.8°N 80.6°E / 6.8; 80.6
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 1205 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2010)
 - நகரம் (2010)
1250 குடும்பங்கள் (சாதாரண நடுநிலை தொழில் செய்பவார்களும் அரசாங்க தொழில் செய்பவார்களும்)

 - மஸ்கெலியா
அம்பகமுவ பிரதேச சபை வெள்ளையான் தினேஸ்
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 22070
 - +9452
 - CP

மஸ்கெலியா இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். மஸ்கெலியா என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான நுவரெலியா நகரத்தில் இருந்து தெற்குத் திசையில் அமைந்துள்ளது. இங்கே அமைந்திருந்த பழைய நகரம் காசல்றி நீர்த்தேக்கத்தை அமைத்த போது மூழ்கிவிட்டமையால் புதிய நகரம் அதற்கு அருகிலேயே உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று ஒவ்வொரு வருடமும் கோடைக்காலங்களில் பழைய மஸ்கெலியா நகரை காணக்கூடியதாகயிருக்கின்றது. இங்கு கோயில், முஸ்லிம் பள்ளிவாயல், பெளத்தகோயில் எனைய கட்டிடங்களையும் காணமுடியும்


புவியியலும் காலநிலையும்

தொகு

மஸ்கெலியா, மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் ஏறத்தாழ 1205 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு ஆண்டு சராசரி வெப்பநிலை 25 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை மூலம் கிடைக்கிறது. 3750-5000 மி.மீ. ஆண்டு சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

கைத்தொழில்

தொகு

இங்கு தேயிலைப் பயிர்ச் செய்கை முக்கிய இடத்தை வகிக்கிறது. இரத்தினக்கல் அகழ்வும் அண்மைக்காலங்களில் வளர்ந்து வருகிறது.

போக்குவரத்து

தொகு

மஸ்கெலியா நகரை கினிகத்தனை நகரிலிருந்து நோட்ட்ன் பிரிஜ் வழியாக அடையலாம். மாற்றாக அட்டன் நகரிலிருந்து நோர்வுட் வழியாகவும் அடைய முடியும். நகரை அண்டி காசல்றி நீர்தேக்கம் அமைந்துள்ளபடியால் அப்பகுதியைச் சாராதவர்கள் நகரை அடைவதில் பாதுகாப்புக் கெடுபிடிகள் இருக்கலாம். இங்கிருந்து நல்லத்தண்ணி, அப்கொட் குடியிருப்புகளை அடைவதற்கான பெருந்தெருக்களும் காணப்படுகின்றன.

மஸ்கெலியா ஹட்டன் நகரில் இருந்து 20 கிலோமீட்டரைக்கொண்டதாகும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மசுகெலியா&oldid=3932823" இலிருந்து மீள்விக்கப்பட்டது