மசௌமே அலினெஜாத்-கோமிகோலாய்

மசௌமே அலினெஜாத்-கோமிகோலாய் (Masoumeh Alinejad-Ghomikolayi) (பாரசீகம்: معصومه علینژاد قمی کُلایی), (பிறப்பு:11 செப்டம்பர் 1976) ஒரு ஈரானிய-அமெரிக்கப்[3] ஊடகவியலாளர், எழுத்தாளர் மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர்.[4][5] அலினெஜாத் தற்போது ஐக்கிய அமெரிக்க நாட்டின் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா ஒளிபரப்பு நிறுவனத்தில் பாரசீக சேவையில் தொகுப்பாளர்/தயாரிப்பாளராக பணிபுரிகிறார். ஈரானில் மனித உரிமைகள், குறிப்பாக பெண்களின் உரிமைகள் பற்றிய விமர்சனத்தில் அலினெஜாத் கவனம் செலுத்துகிறார்.[6] இவர் தற்போது நியூ யார்க் நகரத்தில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். மேலும் 2015 ஆம் ஆண்டு மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான ஜெனிவா மாநாடு, மெஹ்தி செம்சார் அறக்கட்டளையின் ஓமிட் ஜர்னலிசம் விருது மற்றும் அகில இந்திய பாக்சோட்[7] ஊடக விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.[8] 2019ம் ஆண்டில், அலினெஜாத் ஈரானிய அரசு மீது ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் எதிரான துன்புறுத்தலுக்காக வழக்கு தொடர்ந்தார்.[9] இவர் 2018ம் ஆண்டில் தி விண்ட் இன் மை ஹேர் என்ற நூலை வெளியிட்டார்.[10] அதில் ஈரானில் அவரது அனுபவங்களை விவரித்துள்ளார்.[11]

மாசிக் அலினெஜாத்
مسیح علی نژاد
2018ல் அலினெஜாத்
தாய்மொழியில் பெயர்مسیح علی نژاد
பிறப்புமசௌமே அலினெஜாத்-கோமிகோலாய்
செப்டம்பர் 11, 1976 (1976-09-11) (அகவை 48)
குவாமி கோலா, பாபோல் மாவட்டம், மாசாந்தரான் மாகாணம், ஈரான்
தேசியம்ஈரானியர்
குடியுரிமைஐக்கிய அமெரிக்கா[1]
கல்விஆக்ஸ்போர்டு புரூக்ஸ் பல்கலைக்கழகம்
பணிஊடகவியலாளர் & எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2001–தற்போது வரை
பணியகம்பன்னாட்டு ஊடகத்திற்கான ஐக்கிய அமெரிக்க முகமை[2]
வாழ்க்கைத்
துணை
காம்பிஸ் பொரௌகர் (திருமணம்:2014)
பிள்ளைகள்1

ஈரானில் ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

தொகு

11 செப்டம்பர் 1976 அன்று மசௌமே அலினெஜாத்-கோமிகோலாய் என்ற இயற்பெயரில் ஈரானில் பிறந்த இவர்[12] சிறு வயதிலிருந்தே அரசியல் உணர்வுடன் வளர்ந்தார். மேலும் ஈரான் அரசாங்கத்தை விமர்சிக்கும் துண்டு பிரசுரங்களை வெளியிட்டதற்காக 1994ல் அலினெஜாத் கைது செய்யப்பட்டார். 2001ம் ஆண்டில் ஈரானின் உள்ளூர் நாளிதழான ஹம்பஸ்டெகி செய்தித்தாளில் தனது ஊடக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் ஈரானிய தொழிலாளர் செய்தி நிறுவனத்திற்காக (ILNA)[13] பணியாற்றினார்.

ஆறாவது மற்றும் ஏழாவது ஈரானிய நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, அலினெஜாத் செய்தி நிருபராக பணியாற்றினார். 2005ல் அரசாங்க அமைச்சர்கள் மதம் சார்ந்த பணிகளுக்காக ஊதியம் பெற்றதை கட்டுரையாக வெளியிட்டார். இந்தக் கட்டுரை சர்ச்சையைக் கிளப்பியதால், நாடாளுமன்ற செய்தி நிருபர் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.[14] 2008ம் ஆண்டில் ஈரான் அதிபர் மகுமூத் அகமதிநெச்சாத்தை விமர்சனம் செய்தார். இதனால் செய்தித்தாளின் இயக்குனரின் அழுத்தம் காரணமாக, அலினெஜாத் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டியதாயிற்று.[15] 2009ம் ஆண்டின் கோடையில், அமெரிக்காவில் தங்கியிருந்த போது, பராக் ஒபாமாவுடன் நேர்காணலைப் பெற அலினெஜாத் மிகவும் கடினமாக முயற்சி செய்தார். ஆனால் அவர் நேர்காணலுக்கு மறுக்கப்பட்டார். இருப்பினும் அந்த அடிப்படையிலேயே அலினெஜாத்திற்கு ஐக்கிய அமெரிக்காவில் தங்க தற்காலிக விசா வழங்கப்பட்டது. அவரது விசா காலாவதியானதால், அவர் ஐக்கிய இராச்சியத்திற்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அமெரிக்காவில் இருந்தபோது, இவர் சில ஈரானிய அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று, சான் பிரான்சிஸ்கோவில் ஒரு உரையை நிகழ்த்தினார். வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவுடனான அவரது நேர்காணல், "எ ஸ்டார்ம் ஆஃப் ஃப்ரெஷ் ஏர்" என்று அவர் தயாரித்த காணொளி பகுதிகளுடன் வெளியிடப்பட்டது. 2010ல் அலினெஜாத் உள்ளிட்ட ஈரானிய எழுத்தாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் குழுக்கள் இணைந்து ஈரான்நேத்தா ("IranNeda") அறக்கட்டளையை நிறுவினர். அலினெஜாட் ஆக்ஸ்போர்டு புரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் தொடர்புத்துறையில் படிப்பில் பட்டம் பெற்றார்.[16]

தொழில்

தொகு

ஈரான் அரசுக்கு எதிர்ப்பு

தொகு
 
2009ல் அமெரிக்காவில் குடியேறிய போது அலினேஜாத்தின் புகைப்படம்

2014ம் ஆண்டில், அலினேஜாத் மை ஸ்டெல்தி ஃப்ரீடம் (ஈரானிய பெண்களின் திருட்டுத்தனமான சுதந்திரம் என்றும் அழைக்கப்படுகிறது) என்ற முகநூல் பக்கத்தை தொடங்கினார். இது ஈரானிய பெண்களை ஹிஜாப் இல்லாமல் தங்கள் படங்களை இடுகையிட அழைத்தது. இந்த பக்கம் விரைவில் பன்னாட்டுக் கவனத்தை ஈர்த்தது. மேலும் நூறாயிரக்கணக்கான விருப்பங்களைப் பெற்றது.[17] 2015 ஆம் ஆண்டில், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான ஜெனிவா மாநாடு, "குரலற்றவர்களுக்கு குரல் கொடுத்ததற்காகவும், அடிப்படை மனித உரிமைகள், சுதந்திரம் மற்றும் சமத்துவத்துக்காக ஈரானியப் பெண்களின் போராட்டத்தை ஆதரிப்பதற்காக மனிதகுலத்தின் மனசாட்சியைக் கிளறிவிட்டதற்காகவும்" அதன் பெண்கள் உரிமைப் பரிசை அவருக்கு வழங்கியது.[18]

சூன் 13, 2022 அன்று, ஈரானிய அரசாங்கத்தால் ஒடுக்கப்படும் ஈரானிய மக்களுக்கு ஆதரவாக அச்சமின்றிப் பேசியதற்காக அவருக்கு அமெரிக்க யூதக் குழுவின் தார்மீக வீர விருது வழங்கப்பட்டது.

கட்டாய ஜிஜாப் எதிர்ப்பு போராட்டம்

தொகு

அலினெஜாத், தான் ஈரானில் ஹிஜாபை எதிர்க்கவில்லை என்றும், ஆனால் அது பெண்களின் தனிப்பட்ட விருப்பமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். ஈரானில், ஹிஜாப் அணியாமல் பொது இடங்களில் தோன்றும் பெண்களை இசுலாமியப் பண்பாட்டுக் காவல் துறையினர் கைது செய்யது சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.[19]

மேற்கோள்கள்

தொகு
  1. Weiser, Benjamin (July 13, 2021). "Iranian Operatives Planned to Kidnap a Brooklyn Author, Prosecutors Say". The New York Times. பார்க்கப்பட்ட நாள் July 14, 2021. ... Ms. Alinejad, an American citizen ...
  2. U.S. Agency for Global Media
  3. Steve Inskeep (July 15, 2021). "The Journalist Iran Allegedly Sought To Kidnap Says She Would Have Been Killed" (in en). NPR.org. https://www.npr.org/2021/07/15/1016300591/the-fbi-warned-an-iranian-american-woman-that-she-might-be-kidnapped. 
  4. "Iran: Family of women's rights activist arrested in despicable attempt to intimidate her into silence". September 25, 2019.
  5. Fang, Lee (January 7, 2020), "VOA Persian Awarded Journalism Contract to Controversial Former Trump Campaign Operative", The Intercept, பார்க்கப்பட்ட நாள் March 20, 2020
  6. Morris, Cheryl (November 1, 2007). "How Masih Alinejad is paying the price for confronting Iran's leaders". New Internationalist. பார்க்கப்பட்ட நாள் July 26, 2010.{{cite web}}: CS1 maint: url-status (link)
  7. All India Bakchod
  8. "Radio Farda and Radio Free Afghanistan Honored By AIB". Pressroom. Radio Free Europe/Radio Liberty. November 7, 2013. Archived from the original on நவம்பர் 8, 2013. பார்க்கப்பட்ட நாள் May 30, 2018.
  9. "Anti-headscarf law activist sues Iran in US over harassment". AP News. April 21, 2021.
  10. "The wind in my hair: one Iranian woman's courageous struggle against being forced to wear the hijab". The Guardian. June 2, 2018.
  11. Smith, Jordan Michael (August 13, 2019). "How Voice of America Persian Became a Trump Administration PR Machine". The Intercept (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் July 22, 2020.
  12. Tanagho, Samy (2017). Glad News!: God Loves You, My Muslim Friend!. Moody Publishers. p. part 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780802495778. பார்க்கப்பட்ட நாள் February 21, 2018.
  13. Iranian Labour News Agency
  14. Morris, Cheryl (November 1, 2007). "Masih Alinejad on the cost of confronting Iran's patriarchal leaders". New Internationalist. பார்க்கப்பட்ட நாள் May 31, 2018.
  15. Siamdoust, Nahid (May 7, 2008). "'Jesus' vs. Ahmadinejad". TIME.com. பார்க்கப்பட்ட நாள் May 31, 2018.
  16. "Brookes student speaks on BBC World Service". Archived from the original on February 21, 2014. பார்க்கப்பட்ட நாள் February 5, 2014.
  17. Saeed Kamali Dehghan (May 12, 2014). "Iranian women post pictures of themselves without hijabs on Facebook". The Guardian. https://www.theguardian.com/world/2014/may/12/iran-women-hijab-facebook-pictures-alinejad. 
  18. Saeed Kamali Dehghan (February 24, 2015). "Iranian woman wins rights award for hijab campaign". The Guardian. https://www.theguardian.com/world/2015/feb/24/iranian-woman-wins-rights-award-hijab-campaign. 
  19. Ghattas, Kim. "Those Who Dare to Bare Their Hair". Foreign Policy (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் March 23, 2019.

வெளி இணைப்புகள்

தொகு
  வெளி ஒளிதங்கள்
  Activist Masih Alinejad fights against the compulsory hijab in Iran, Matter Of Fact With Stan Grant, ABC News