மஞ்சள் குங்குமம் (1970 திரைப்படம்)

மஞ்சள் குங்குமம் 1970 ஆம் ஆண்டில் இலங்கையில் வெளிவந்த ஒரு முழுநீளத் தமிழ்த் திரைப்படமாகும். கிங்ஸ்லி எஸ். செல்லையா, ஸ்ரீசங்கர் ஆகியோரின் தயாரிப்பிலும், எம். வி. பாலனின் இயக்கத்திலும் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். உதயகுமார், ஸ்ரீசங்கர், ஹெலன்குமாரி, ரொசாரியோ பீரிஸ், சிலோன் சின்னையா, ஏ. நெயினார், ஏ. எஸ். ராஜா, எம். வி. பாலன், மஞ்சுளா, ருத்ராணி, மணிமேகலை உட்பட மற்றும் பலர் நடித்தனர். அந்தனி ஜீவா உதவி இயக்குநராகவும், சுண்டிக்குளி சோமசேகரன் ஒலிப்பதிவாளராகவும் பணியாற்றினார்.

மஞ்சள் குங்குமம்
இயக்கம்எம். வி. பாலன்
அந்தனி ஜீவா
தயாரிப்புகீதாலயம் மூவீஸ்
இசைஆர். முத்துசாமி
நடிப்புஎம். உதயகுமார்
ஸ்ரீசங்கர்
ஹெலன்குமாரி
ரொசாரியோ பீரிஸ் சிலோன் சின்னையா, ஏ. நெயினார், ஏ. எஸ். ராஜா, லீலா நாராயணன், பரீனா லை
ஒளிப்பதிவுஎம். ஏ. சுபைர்
வெளியீடுமார்ச் 14, 1970
நாடுஇலங்கை
மொழிதமிழ்

சில்லையூர் செல்வராஜன், இக்னேசியஸ் மொறாயஸ் ஆகியோரின் பாடல்களுக்கு ஆர். முத்துசாமி இசையமைத்திருந்தார். ஆர். முத்துசாமி, ஏ. சுந்தரஐயர், எம். ஏ. குலசீலநாதன், மீனா மகாதேவன், சுஜாதா ஆகியோர் பாடல்களைப் பாடினர்.

1969ஆம் ஆண்டு முதல் கிங்ஸ்லி செல்லையா 1969 ஆம் ஆண்டு முதல் மேடையேற்றி வந்த “மஞ்சள் குங்குமம்” என்ற நாடகத்தைத் தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. லீலா நாராயணனின் பரதநாட்டியமும், பரீனா லையின் நடனமும் இப்படத்தில் இடம்பெற்றன.

வேறு தகவல்கள்

தொகு
  • கொழும்பு சிலோன் ஸ்ரூடியோவில் பிரபல வர்த்தகர் ஜி. நாராயணசாமி என்பவரின் உதவியுடன் இத்திரைப்படம் படமாக்கப்பட்டது.
  • கொழும்பு ஆடிவேல் விழாக் காட்சி, வெசாக் விழாக் காட்சி, 1969இல் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக் காட்சி போன்றவையும் இப்படத்தில் இணைக்கப்பட்டன.
  • இத்திரைப்படம் முதன் முதலாக 1970 மார்ச் 14 இல் கொழும்பு கிங்ஸ்லி படமாளிகை உட்பட இலங்கை எங்கும் திரையிடப்பட்டது. இதே காலப்பகுதியில் அடிமைப்பெண், தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களும் திரையிடப்பட்டிருந்தாலும், மஞ்சள் குங்குமம் சுமாராக ஓடியது.
  • ஸ்ரீசங்கர் இத்திரைப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்தார்.
  • “தித்திப்பு செம்மாதுளம்பூ” என்ற பாடலை ஆர். முத்துசாமி பாடினார்.
  • இத்திரைப்படம் எட்டு ஆண்டுகளின் பின்னர் விநாயகர் பிலிம்சின் சார்பில் மீண்டும் திரையிடப்பட்டது. தமிழரசுக் கட்சி மாநாடு போன்ற சில காட்சிகள் நீக்கப்பட்டிருந்தன. கொழும்பு சமந்தா அரங்கில் ஒரு வாரம் மட்டுமே ஓடியது.

உசாத்துணை

தொகு
  • தம்பிஐயா தேவதாஸ். "இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை". பார்க்கப்பட்ட நாள் 15 மார்ச்சு 2014.