மஞ்சாடி
மஞ்சாடி அதன் செந்நிற விதைகளுடன், இந்தியா.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Fabales
குடும்பம்:
பேரினம்:
Adenanthera
இனம்:
A. pavonina
இருசொற் பெயரீடு
Adenanthera pavonina
லி.
விதைகள்

மஞ்சாடி அல்லது ஆனைக் குன்றிமணி (Adenanthera pavonina) எனப்படுவது ஆசியா, அவுத்திரேலியா, தென்னமெரிக்கா, வட அமெரிக்கா என உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் ஒரு தாவர இனம் ஆகும். வெட்டுமரத் தேவைக்காகவே இது பெரிதும் பயன்படுகிறது எனினும் இது வலிமை குறைந்தது.

பயன்கள்

தொகு

மஞ்சாடி மரம் மண்ணின் நைதரசன் அளவைச் சமப்படுத்துவதற்காகவே முதன்மையாக வளர்க்கப்படுகிறது. அத்துடன் விலங்குளின் உணவுக்காகவும் மருந்து மூலிகையாகவும் வீட்டுத் தோட்டங்களிலும் நகர்ப்புறங்களிலும் அழகுத் தாவரமாகவும் இது வளர்க்கப்படுகிறது. இத்தாவரத்தின் தரமான, அழகிய விதைகள் அவற்றின் அழகு காரணமாகவும் உணவுக்காகப் பயன்படுத்தப்படுவதாலும் இதன் பரவல் எளிதாகின்றது. மஞ்சாடியின் இளம் காய்களைக் குரங்குகள் போன்ற விலங்குகள் விரும்பியுண்கின்றன. பச்சையாக உள்ள மஞ்சாடி விதைகள் ஓரளவு நச்சுத் தன்மையுள்ளனவாக இருந்த போதிலும் அவற்றைச் சமைக்கும் போது அவற்றின் நச்சுத் தன்மை குறைந்து உண்ணத் தக்கனவாக மாறுகின்றன. மஞ்சாடி விதைகளே பழங்கால இந்தியாவில் தங்கம் போன்ற பெறுமதிப்பு மிக்க மாலைகளை நிருப்பதற்குப் பயன்பட்டன.[1] மஞ்சாடி விதைகள் கழுத்தணிகள், கைம்மாலைகள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன.

இதன் பூக்கள் சற்று நீளமாயும் பூனை வால் போன்று கூந்தல் கொண்டும் அமைந்திருக்கும். கொட்டைகள் செந்நிறமாயும் பிரகாசமானவையாயும் இருக்கும். இதன் இளம் தளிர்கள் சமைத்து உண்ணத் தக்கவை. மஞ்சாடி மரத்தின் வைரப் பகுதி மிகவும் கடினத் தன்மை கூடியதாகும். அது தோணி செதுக்குவதிலும் மரத் தளவாடங்கள் செய்வதிலும் விறகுக்காகவும் பயன்படுகிறது.

மஞ்சாடி மரமானது சவர்க்கார உற்பத்தியிற் பயன்படுத்தப்படுகிறது.[2] இதன் மரப் பகுதியிலிருந்து உணவுக்காகப் பயன்படுத்தப்படும் செந்நிறச் சாயம் பெறப்படுகிறது.

மஞ்சாடி விதைகளிலிருந்து பெறப்பட்ட சாறு வெகுவாக உட்கொள்ளச் செய்யப்பட்ட எலிகளும் சுண்டெலிகளும் உடலெரிவுக்கு எதிரான தன்மை கூடுவதை வெளிப்படுத்தியுள்ளன.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. E. J. H. Corner, "Wayside Trees of Malaya: Vol. I", Malayan Nature Society, 4th ed., 1997
  2. Species used for Soap பரணிடப்பட்டது 2015-09-23 at the வந்தவழி இயந்திரம், Dr. Duke's Phytochemical and Ethnobotanical Databases
  3. Olajide O.A., Echianu C.A., Adedapo A.D., Makinde J.M. (2004). "Anti-inflammatory studies on Adenanthera pavonina seed extract". Inflammopharmacology 12 (2): 196–202. doi:10.1163/1568560041352310. பப்மெட்:15265320. 

வெளித் தொடுப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மஞ்சாடி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சாடி&oldid=3849597" இலிருந்து மீள்விக்கப்பட்டது