மட்டி உழுவை
மட்டி உழுவை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
துணைவகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | J. P. Müller and Henle, 1841
|
பேரினம்: | Rhina Bloch & J. G. Schneider, 1801
|
இனம்: | R. ancylostoma
|
இருசொற் பெயரீடு | |
Rhina ancylostoma Bloch & J. G. Schneider, 1801 | |
மட்டி உழுவை காணப்பும் பகுதி[2] | |
வேறு பெயர்கள் | |
Rhina cyclostomus Swainson, 1839 |
மட்டி உழுவை அல்லது படங்கன் (Rhina ancylostoma) என்பது ஒரு வகை திருக்கை இன மீன் ஆகும். இது ரினிடே குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் பரிணாம உறவுகள் குறித்த கருத்து முழுமையாக தீர்வுகாணப்படவில்லை. இருப்பினும் இது உண்மையில் உழுவை மற்றும் திருக்கை போன்றவற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த அரிய மீன் இனம் மேற்கு இந்தோ பசிபிக்கின் வெப்பமண்டல கடலோரப் பகுதி நீரில் 90 m (300 அடி) வரையிலான ஆழத்தில் பரவலாக காணப்படுகிறது. தோற்றத்தில் மிகவும் தனித்துவமான, மட்டி உழுவை அகன்ற, தடித்த உடலமைப்பைக் கொண்டது. மேலும் அரை வட்டமான வாய் மற்றும் சுறா போன்ற பெரிய முதுகு துடுப்பையும், வால் துடுப்பையும் கொண்டது . மேலும் இதன் முகம் மற்றும் தலையின் பின்புறத்திலும் பல முட்கள் நிறைந்த முகடுகள் உள்ளன. இதன் உடலானது வெளிறிய சாம்பல் முதல் பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் உடலில் பல வெள்ளை புள்ளிகள் காணப்படுகின்றன. இதன் முதுகுத்துடுப்புகள் சுறாவின் துடுப்புகள் போல உயரமானவை. வலிமையான வால், சுறா போன்ற பின்பாதி கொண்டது. இதன் இரண்டாவது முதுகு துடுப்பு முதல் துடுப்பைவிட சிறியது. இதன் பக்கத் துடுப்புகள் நீலவிளிம்பிட்ட கரும்புள்ளிகளைக் கொண்டுள்ளன. இந்த பெரிய மீன் இனம் 2.7 மீ (8.9 அடி) நீளமும் 135 கிலோ (298 பவுண்ட்) எடைவரை எட்டும்.
பொதுவாக இந்த மீனானது கடலடி தரைக்கு அருகில் காணப்படும். இது நீருக்கடியில் மணலும், சேறும் நிறைந்த பகுதிகளை விரும்புகிறது. இது எலும்பு மீன்கள், ஓடுடைய கணுக்காலிகள், மெல்லுடலிகளை வேட்டையாடி உண்ணும். இந்த இனம் இரண்டு முதல் பதினொரு குட்டிகளை பெற்றெடுக்கிறது. கருவில் உள்ள இளம் உயிரிக்கு முட்டையின் மஞ்சள் கரு உணவாக பயன்படுகிறது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (ஐயுசிஎன்) மட்டி உழுவையை அழியவாய்ப்பு இனமாக மதிப்பிட்டுள்ளது. ஏனெனில் இது அதன் மதிப்புமிக்க துடுப்புகள், இறைச்சிக்காக நாட்டுமீனவர்களாலும், வணிக மீன்பிப்பாளர்களாலும் பரவலாகப் பிடிக்கப்படுகிறது. இதன் வாழ்விட சீரழிவு போன்றவற்றால் இந்த உழுவைகளின் உயிர்வாழ்வு சவாலாக மாறியுள்ளது. இந்த உழுவைகள் உயிருடன் பிடிக்கபட்டு மீன் காட்சி சாலைகளில் வளர்க்க ஏற்றதால் மீன்காட்சி சாலைகளில் காட்சிப்படுத்தப்படுகின்றது.
குறிப்புகள்
தொகு- ↑ Kyne, P.M., Rigby, C.L., Dharmadi & Jabado, R.W. 2019. Rhina ancylostoma. The IUCN Red List of Threatened Species 2019: e.T41848A124421912. https://doi.org/10.2305/IUCN.UK.2019-2.RLTS.T41848A124421912.en. Downloaded on 26 July 2019.
- ↑ Last, P.R.; Stevens, J.D. (2009). Sharks and Rays of Australia (second ed.). Harvard University Press. pp. 299–300. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-03411-2.